bartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்

மன்னிக்கவும் தமிழ் அர்த்தம் தெரில அதான் இப்படி தலைப்பு ரொம்பவும் கஷ்டத்துல இருக்கேன் அதை பத்தி தெரிஞ்சவங்க அது குணமாக வழி இருக்கானு சொல்லுங்க டாக்டர் ஆபரேசன் பண்ண ணும்னு சொல்லிட்டாங்க கர்ப்ப காலத்தில் அது முடியாதுஎன்று சொன்னாங்க வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கிறது

தோழி. நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை கொஞ்சம் தெளிவாக கூறினால் நல்லது

பிறப்புறுக்கு வெளியே வரும் கட்டி படாத பாடு படுகிறேன் உதவுங்கள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இதை பற்றி யாருக்கும் தெரியாதா மூத்த தோழிகள் யாராவது எனக்கு உதவுங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது தற்போது ஏழு மாதம் கர்ப்பிணி நடக்க முடியாது உட்கார்ந்து எழ முடியாது வலி எரிச்சலாய் உள்ளது சுடு நீர் மட்டும் வைத்தியமாய் உள்ளது ஆனால் கட்டி உடையவும் இல்லை குறையவும் இல்லை சுகப்பிரசவம் நடக்குமா எனவும் கவலையாய் உள்ளது உதவுங்கள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி மா.நீங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்பதே நல்லது. கர்ப்பமாக இருக்கும் போது எந்த கை வைத்தியமும் செய்ய கூடாது. டாக்டரிம் போய் ailments எதாவது வாங்கி போடுங்கள். நீங்கள் தனியாளாக இருந்தால் யாராவது வைத்தியம் சொல்வார்கள். கர்ப்பமாக இருக்கவும் தான் யோசிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள் மூத்த தோழிகள் வந்து பதில் சொன்னாலும் சொல்வார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சுத்தமாக‌ வைத்துக் கொள்ளுங்கள். டாக்டர் சொல்கிறபடி கேளுங்கள். லாக்டோ காலமைன் போட்டுப் பாருங்கள். எரிச்சல் சற்றுக் குறைவாக‌ இருக்கும்.

//சுகப்பிரசவம் நடக்குமா// அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இது வெளியே உள்ள‌ கட்டி. பயப்பட‌ வேண்டாம்.

கட்டி தானாகத் திறக்காவிட்டால் பிரசவ‌ சமயம் அல்லது அத‌ற்குப் பிறகு பார்த்துச் சிகிச்சை கொடுப்பார்கள். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Had the same condition not for bartholin cyst.

Treated for Yeast Infection, but not in pregnant. Consulted doctor and treated with antibiotics and IGpaint. Luckily the puss released without going for surgery.
Precautions:
Have clean.
Use V-wash.

Thanks.

தங்கள் கட்டிக்கு கத்தி வைக்காமல், மேலே மருந்து தடவாமல் கர்ப்ப‌
காலத்தில் கட்டி உடைந்து எந்தத் தொல்லையும் தராத‌ மருத்துவம் ஓமியோபதி
மட்டுமே. நீங்கள் தனி மருத்துவரையும் பார்க்கலாம். அல்லது அரசு மருத்துவ‌
மனைகளில் உள்ள‌ ஓமியோபதி பிரிவிற்குச் சென்று (பிரசவத்திற்காக‌ நீங்கள்
பார்த்திருக்கும் பழைய‌ மருத்துவப் பரிசோதனைத் தாள்களையும் கொண்டு
செல்லவும்) வைத்தியம் பார்க்கவும். அனேகமாக‌ மூன்றே நாள்களில் குணமாகும். கவலை வேண்டாம். இணையத்தில் ஓமியோபதி மருத்துவர்
சென்னை என்று தேடினால் உங்கள் வீட்டு அருகேயே கிடைக்கும், விலாசத்தோடு
பெண் மருத்துவர்களும் நிறைய‌ உள்ளனர். நீங்கள் வசிக்கும் இடம் தெரியாததால்
மருத்துவ‌ மனை பற்றிய‌ குறிப்பு தர‌ முடியவில்லை. விரைவில் குணமடைய‌
வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்கள் பிரச்சினை குறித்து இணையத்தில் தேடினேன். பயப்படத்தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஆரோக்கியமான‌ அழகான‌ குழந்தைக்கு விரைவில் தாயாகப் போகிறீர்கள். கருவை சுமக்கும் நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கவலையை விடுத்து உங்கள் குழந்தையைப் பற்றிக் கனவு கண்டு சந்தோஷமாக‌ இருங்கள். நேரமிருந்தால் நேற்று அறுசுவையில் வெளியான‌ என் கட்டுரையைப் படியுங்கள் (நல்வாழ்வின் திறவுகோல் - பாகம் 4). உதவியாக‌ இருக்குமென்று நம்புகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/32350
வாழ்த்துக்கள்

டாக்டர் சொன்னாங்க கட்டி மேல் எதையும் உபயோகிக்க வேண்டாம் வெந்நீரில் உப்பு போட்டு ஒத்தடம் கொடுக்க சொன்னாங்க எவ்வளவு வலி வேண்டுமானாலும் தாங்கிக்க தயார் பிரசவம் நல்ல படிய நடந்தா அதுவே போதும் உ ங்கள் பதில் தைரியமாக உள்ளது மிக்க நன்றிமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்