மசாலா சீஸ் பூரி

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - முக்கால் கப்
மைதா மாவு - முக்கால் கப்
உருளைகிழங்கு - 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
சீஸ் - ஒரு துண்டு
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொறிக்க
உப்பு - தேவையான அளவு


 

முதலில் உருளைகிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை துருவிக்கொள்ளவும்.

இஞ்சியையும், பச்சைமிளகாயையும் அரைத்துக்கொள்ளவும்.

சீஸை துருவிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியைவைத்து நெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி,அரைத்ததை போட்டு வதக்கி இறக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அத்துடன் மசித்த உருளைகிழங்கு, துருவிய சீஸ் வதக்கிய வெங்காயம்,உப்பு இவற்றை சேர்த்து கலக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்துக்கொள்ளவும்.

பின் பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் வளர்த்து எண்ணெய்யை காயவைத்து பொறித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

குருகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட குறிப்புகளை குடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்,மேலும் பல நூறு சமையல் குறிப்புகள் வழங்கிட வாழ்த்துகிறேன்

எப்படி இருக்கிறீர்கள் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி