தக்காளி வடகம் செய்வது எப்படி?

திருமதி. சுஜாதா அவர்கள் மின்னஞ்சல் மூலமாக கேட்டிருக்கும் கேள்விகள். திருமதி. மனோகரி மேடம் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு இந்த கேள்விகளை அவர் கேட்டுள்ளார். இருப்பினும், பதில் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அவருக்கு பதில் அளிக்கலாம்.

1. தக்காளி வடகம் செய்வது எப்படி?
2. சாம்பார் பொடி இல்லாமலும் குழம்பு செய்யலாமா?

டியர் அட்மின்/திருமதி சுஜாதா அவர்களுக்கு சத்தியமா நான் தக்காளி வடகத்தை பார்த்தது கூட கிடையாது. ஒரு வேளை வத்தலை தான் அவ்வாறு கூறுகின்றீர்களா என்று தெரியவில்லை.
தக்காளி வத்தல் செய்ய நான் தக்காளியை இரண்டாக வெட்டி எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலந்து அவெனில் வைத்து தண்ணீர் நன்கு வற்றும் வரை கிரில் செய்து எடுத்து வைத்துக் கொள்வேன். நல்ல வெய்யிலிலும் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
சாம்பார் பொடி இல்லாமல் தான் சென்னையில் பெரும்பாலான வீடுகளில் பிரமாதமான பல குழம்பு வகைகளையும் செய்வோம். என்னுடைய குறிப்புகளிலுள்ள குழம்புகளை பார்த்தீர்களானால் தெரியவரும். பார்ப்பீர்களா?நன்றி.

நன்றி மேடம். குஷ்கா எப்படி செயவது மேடம்

மேலும் சில பதிவுகள்