வீடு மாறுதல் பற்றி

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.
நான் 7 மாத‌ கர்ப்பிணி தற்சமயம் நான் வேறு வீடு மாறும் நிலையில் உள்ளென்...நான் தற்சமயம் வீடு மாறலமா..? எனக்கு விரைவாக‌ பதில் சொல்லவும்...பிளிஷ்

வீடு மாறுவது பிரச்சினை இல்லை. நீங்கள் பாரங்கள் தூக்காமல், அதை இதை நகர்த்தாமலிருங்கள். அதிகம் எக்சர்ட் பண்ணாமல் வேறு யாரையாவது பாக்கிங், அன்பாக்கிங் வேலைகளில் உதவி செய்யக் கேளுங்கள்.

‍- இமா க்றிஸ்

During pregnancy should not change the house. .. it's elder's advice... may be you can ask your parents also...

Thank you Imma

விரைவில் தாயாக‌ வாழ்த்துக்கள். கருவுற்றிருக்கும் போது 90%
வேறு வீடு மாற‌ பெரியோர்கள் அனுமதிப்பதில்லை. அதற்குப் பல‌ காரணங்கள்.
முதலில் இப்போது வாழும் சூழ்நிலை சரிப்பட்டு வரவில்லை என்றாலும்,
தற்போதைய‌ உலக‌ நடைமுறையில் வேலை காரணமாகவும் தான் வீடு மாற்றம் என்பது ஓரளவிற்கு ஒத்துப் போகக் கூடியது என்பது என் கருத்து.
மற்றபடி சூழ்நிலை மாறுவதால், தண்ணீர், காற்று, அக்கம் பக்கத்தில் வாழும்
மனிதர்களின் பழக்கவழக்கங்கள் நமக்கு ஒத்துப் போகுமா போகாதா, வழக்கமாக‌
நாம் போகும் மருத்துவமனைக்கும் நாம் போகப் போகும் வீட்டிற்கும் உள்ள‌
தூரம், நமக்கு வேண்டியவர்களும், உதவிசெய்பவர்களும் ஒரு அவசரம் என்றால்
உடனே நமக்கு வந்து உதவ‌ முடியுமா? புதியதாக‌ வீடு மாறும் இடத்தில் உள்ளவர்கள் எந்த‌ அளவிற்கு நமக்கு உதவுவார்கள் என்பதையும் கவனத்தில்
கொள்ளவேண்டும். இடமாற்றம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எவ்வாறு
உதவும் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு வீடு மாறுவது நல்லது என்பது என் கருத்து .
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நேற்று நேரம் குறைவாக‌ இருந்ததால் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுப் போனேன். நான் இப்போ தட்ட‌ நினைத்ததையே மேலே பூங்கோதை அழகாகச் சொல்லியிருப்பதைப் பார்த்தேன். அவர்களுக்கு ஒரு நன்றி.

யோசிச்சுப் பாருங்க‌ சுமதி. வேற‌ ஆப்ஷன் இல்லையென்றால் மாறுறதுல‌ பிரச்சினை இல்லை.

மாறத்தான் வேண்டும் என்றால், நீங்க‌ களைச்சுப் போகாதீங்க‌. முதலில் எடுக்க‌ வேண்டிய‌ பொருட்களை எப்படியும் கடைசி வரை பயன்படுத்துவீர்கள்; அவற்றைத் தனியாக‌ பாக் பண்ண‌ வைங்க‌. புதுவீடு போனதும் முக்கியமான‌ பொருட்களை மட்டும் பிரியுங்க‌. மீதி பிரசவம் முடிந்து நீங்கள் திடமாகும் வரை பெட்டிகளில் காத்திருக்கலாம். பிரசவத்திற்காக‌ ஆயத்தம் செய்திருந்தீர்களானால் அவற்றை வேறு பொருட்களோடு பாக் பண்ணாமல் எடுக்க‌ இலகுவாகத் தனியாக‌ வையுங்கள். புது வீட்டிலிருக்கும் போது அவசரத்திற்கு சட்டென்று யார் வருவார்கள் என்பதையெல்லாம் யோசித்துப் பேசி வையுங்கள்; ஃபோன் நம்பர்களைத் தனியே குறித்து வையுங்கள். வலி வரும் சமயம் என்ன‌ செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே யோசித்து வைத்தீர்களானால் சிரமம் எதுவும் இராது.

'கூடாது' என்பதற்கான‌ காரணங்களையெல்லாம் சொல்லப் பட்ட‌ காலம் வேறு. அப்போதைய‌ சமுதாய‌ அமைப்பில் அது முக்கியமானதாக‌, சிந்திக்க‌ வேண்டியதாக‌ இருந்தது. வாகன‌ வசதி இல்லை; மருத்துவிச்சிகள் அல்லது மூத்த‌ பெண்களின் உதவியோடு பிரசவங்கள் ஆன‌ காலம் அது. இன்றைய‌ காலம் ‍‍ முற்போக்கான‌ படித்த‌ பெண்களின் காலம் இல்லையா! ஆராய்ந்து பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் பிடித்து வைத்துக்கொள்ளக் கூடாது.

யாராவது எதையாவது, 'கூடாது' என்கிறார்கள் என்றால்... முதலில் காரணம் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். நிச்சயம் பெரியவர்கள் சொல்வதன் பின்னால் வலுவான‌ காரணங்கள் இருக்கும். அவை இன்றைய‌ காலத்திற்குப் பொருந்தி வருகிறதா! உங்களைப் பாதிக்குமா இல்லையா! பாதிக்காமல் கடக்க‌ என்ன‌ வழி என்பதை எல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள்.

இப்போதைய‌ படித்த‌, போல்டான‌ பெண்கள் ப்ளான் பண்ணி எல்லாத் தடைகளையும் தாண்டிருவீங்க‌. துணிவோடு செய்யும் காரியங்கள் பிழையாகிப் போவது இல்லை. சறுக்கல்கள் வருவது, எதையும் பயந்து பயந்து தயக்கத்தோடும் நிச்சயமில்லாத‌ மனதோடும் செய்யும்போதுதான்.

இப்போ இருக்கிற‌ வீட்டிலிருப்பவை எவை எவை வீடு மாறுவதால் உங்களுக் கிடைக்காமற் போகும் என்பதை, உட்கார்ந்து ஒரு லிஸ்ட்டாகப் போடுங்க‌. சரி செய்ய‌ என்ன‌ செய்யலாம் என்கிறதை ப்ளான் பண்ணிருங்க‌. தைரியமா இருங்க‌. அனைத்தும் நலமாக‌, இப்போதே என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கு பதில் அளித்த‌ தோழிகளுக்கு நன்றி... கண்டிப்பாக‌ மாறும் நிலையில் உள்ளென் காரணம் இப்பொது இருக்கும் வீடு வசதியாக‌ இல்லை மேலும் அருகில் வீடு ஏதும் இல்லை, மருத்துவமனை அருகிலே ஒரு வீடு கிடைத்திருகிறது எனக்கு packing வேலை எல்லாம் இல்லை அம்மா என் கூட‌ தான் இருக்கிறார்..எனது கணவரும் உதவி பண்ணுவார்....

மேலும் சில பதிவுகள்