பாபு அண்ணாவிற்க்கு

நலமாக இருக்கிறீர்களா. வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி இந்த வாழ்த்துக்கள் உங்கள் மூலமாகதான் வந்தது இந்த அறுசுவையை உருவாக்கி அதன் மூலம் நிறைய சகோதரிகள் கிடைக்க காரணமாக இருக்கிறீர்கள். அதற்க்காக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நலம். எனக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை கொண்டு வந்துவிட்டீர்கள். அதற்கு முதலில் எனது நன்றிகள்.

தமிழில் சமையலுக்கென்று தனியாக ஒரு தளம் இல்லை என்பது நீண்டநாள் குறையாக இருந்துவந்தது. நான் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது என்னாலும் இந்த குறையை உணரமுடிந்தது. பின்னாளில் இந்தியாவில் இருந்து ஏதேனும் செய்யவேண்டும் என்ற நிலை வந்தபோது எனக்கு உடனடியாக மனதில் பட்டது, சமையல் சம்பந்தமான இணையத்தளம்தான். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அறுசுவை. ஆரம்பித்து கிட்டதிட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டரை வருடங்களில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் தமிழ் இணையத்தளங்களில் அறுசுவை ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது உண்மைதான்.

இந்த வெற்றிக்கு காரணமாக நான் நினைப்பது, பிரதிபலன் எதிர்பாராது தங்களது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வரும் உங்களைப் போன்றோரைதான். உங்களது பங்களிப்புகள்தான் எண்ணற்ற நேயர்களையும், ஏராளமான குறிப்புகளையும் அறுசுவைக்கு பெற்றுத்தந்திருக்கின்றது. என்னையும் உற்சாகமாக பணிபுரிய வைக்கின்றது.

நான் இந்த தளத்திற்காக கடுமையாக உழைக்கின்றேன். உண்மைதான். ஆனால், நான் எனது தளத்திற்காக உழைப்பதில் சிறப்பு எதுவும் இல்லை. நீங்கள் எனது தளத்திற்காக உழைப்பதுதான் இதில் சிறப்பம்சம். உண்மையில் பாராட்டப்பட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், உங்களைப் போன்ற பங்களிப்போர்தான். "எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என்று உங்கள் மதம் சொல்லுவதை சற்றே மாற்றி "எல்லாப் புகழும் உங்களுக்கே.." என்று வாழ்த்துக்கள், நன்றிகள் அனைத்தையும் உங்கள் பக்கம் திருப்பிவிடுகின்றேன். உங்களின் பங்களிப்பை தொடர்ந்து அளித்துவர அறுசுவை நேயர்கள் அனைவரின் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன்.

பாபு அண்ணா அவர்களுக்கு அறுசுவை இணயதளத்தில் உள்ள ஒவ்வொறு User-க்கும் மற்ற User உடன் நேரடியாக பேசனும் பழகனும் என்ற ஆசை இருக்கும் அதற்க்கு அவர்களுடைய Email முகவரி அல்லது தொலைபேசி எண் தேவை. இங்கு நேரடியாக Email முகவரியை வெளியிட முடியாது.அதற்க்காக எங்களுக்கு ஒரு Chat Room ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.

Chat room கொண்டு வர முன்பே திட்டமிட்டு இருந்தேன். தற்போதைய செர்வர் அதற்கு சாதகமாக இல்லை. விரைவில் dedicated server க்கு மாற உள்ளோம். அப்போது நிறைய வசதிகள் கொடுக்க முடியும். கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். நிச்சயம் ஏற்படுத்தித் தருகின்றேன். வெறும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல், Chat room ஐ பல்வேறு உபயோகமான தகவல்கள் பரிமாற்றத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்