pls help me frds

<!--break-->Enaku thirumanam agi 1years aguthu ethuvaraikum kulantha vendamnu ninaichom nan padichidu erunthala Oct 2 my last period ananen enaku 28 days normal periods enum enaku period agala today morning check pannen negative result varuthu pls help me epa nan pregnant erukena elaya

இன்னும் ஒரு 5 நாட்கள் காத்திருந்து டெஸ்ட் செய்யுங்கள். வெய்ட் எதுவும் தூக்காதீங்க.மாடி படிகளில் ஏறவேண்டாம்.காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். சூடான எதுவும் சேர்க்க் வேண்டாம். தாயாக வழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயஸ்ரீ

Rompa nandri jai

Entha nilayum marum

Jai enaku 2 days white athikama paduthu ethavathu problem erukuma ela ethu normal than

Entha nilayum marum

ஒயிட் டிஸ்சார்ஜ் வரும் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன். டென்ஷன் ஆகாதீங்க பா. அதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் எப்போதும் போல் இருங்கள். பால் பொருட்கள் பால், மோர், தண்ணீர் நிறைய குடியுங்கள்.

எள், அண்ணாச்சி, பப்பாளி போன்ற சூட்டை கிளப்பும் வகைகளை தவிர்த்திடுங்கள். all the best

அன்புடன்
ஜெயஸ்ரீ

//எள், அண்ணாச்சி, பப்பாளி போன்ற சூட்டை கிளப்பும் வகைகளை தவிர்த்திடுங்கள்.//

அது அன்னாசி ஜெய்ஸ்ரீ; அண்ணாச்சி இல்லை.

விரும்பினால் மாற்றிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

OK jay

Entha nilayum marum

இமா அம்மா க்கு வணக்கம். நான் இந்த தளத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக உள்ளேன். நான் உங்களின் பதிலையும் பூங்கோதைகண்ணம்மாள் அம்மா பதிலையும் ரசித்து படிப்பேன். நானும் உங்களை போலவே தமிழில் பதிவிட வேண்டும் என்று தமிழிலேயே பதிவிடுகிறேன். எனது தவறுக்கு வருந்துகிறேன். அண்ணாச்சி(அன்னாசி) இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். என்னையும் உங்கள் தோழிகள் பட்டியலில் இணைத்துக் கொள்வீர்களா. பதிலுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
ஜெயஸ்ரீ

//பதிலுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்.// :‍-)
பட்டியல் போட்டு வைத்துப் பழகவில்லை யாரோடும். அறுசுவையிலுள்ள‌ அனைவருமே எனக்கு நட்புகள்தான் ஜெயஸ்ரீ. :‍-)

‍- இமா க்றிஸ்

பதில் தந்ததற்க்கு நன்றி இமா மேடம்.
தோழிகள் பட்டியல் என்று குறிப்பிட்டதற்க்கு மன்னிக்கவும். எனக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை. எதேச்சையாக இத்தளத்திற்க்குள் வந்தேன். வந்த பின் நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.உதாரணத்திற்க்கு கரு முட்டை வளர பச்சை பயிறு சாப்பிட வேண்டும் என்று. இது போல் என் சந்தேகங்கள் நிறைய தீர்ந்திருக்கிறது. நன்றி தோழிகளே. நன்றி இமா மேடம். அறுசுவைக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
ஜெயஸ்ரீ

அன்புள்ள‌ ஜெயஸ்ரீக்கு,
விரைவில் இறைவன் திருவருளால் தாயாக‌ வாழ்த்துக்கள். கொடிப்பசலை இதைப்பற்றி முன் பதிவில் சொல்லி இருக்கிறேன். யாருக்கு என்று நினைவில்லை. கொஞ்சம் தேடிப்பார்க்கவும். பொதுவாகக் கடைகளில் விற்றுப் பார்த்ததில்லை. வீடுகளில் இருக்கும். இந்தக் கீரையை
மாதவிலக்கிற்கு முன் பத்து நாள்களும், பின்னர் பத்து நாள்களும் தொடர்ச்சியாக‌
உண்டால் (சாம்பார், கூட்டு,பொரியல்,கடைசல் என்று) கட்டாயமாக‌ குழந்தைபேறு கிட்டும் என்று சித்த‌ மருத்துவக் குறிப்பில் பார்த்தேன்,
நீங்களும் உங்கள் கணவரும் ஒரே நேரத்தில் இந்தக் கீரையை உணவாக‌ எடுத்துக் கொண்டால் நல்ல‌ பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
முயன்று பாருங்கள். நாட்டு மருத்துவம், பாரம்பரிய‌ மருத்துவம் இவற்றைப் பார்க்கவும். நடைமுறையில் உள்ள‌ உணவுப் பழக்கம் மூலமாகவே நமது
குறைகளைப் போக்கி கொள்ளலாம். வாழ்த்துகள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்