pls help me frds

<!--break-->Enaku thirumanam agi 1years aguthu ethuvaraikum kulantha vendamnu ninaichom nan padichidu erunthala Oct 2 my last period ananen enaku 28 days normal periods enum enaku period agala today morning check pannen negative result varuthu pls help me epa nan pregnant erukena elaya

கொடிப்பசலையப் பற்றி முழுமையாக‌ தெரிந்து கொள்ள‌ மூலிகைவளம்
என்ற‌ தளத்தினைப் பார்க்கவும். தமிழகத்தில் நம் அருகிலேயே இருந்து
நம்மால் தெரிந்து கொள்ள‌ முடியாத‌ எளிய‌ அரிய‌ கீரைவகைகள், மலர்கள்
என்று ஏராளமாகக் கிடைக்கும். தேடினால் மேலும் பல‌ தளங்கள் நமக்குக்
கிடைக்கும். தீபாவளி வாழ்த்துக்களுடன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Nan unga kita oru visayam sollala nan padichidu eruken bsc 3 year hostal thangi enaku epa 2 months sem holiday nanum avarum epa than sernthu Eruka mudiyum yenga aunty ena kulantha elathaala padika kuda Vida matenu solranga enum 1 1/2 month than avar kuda erupen athanala than sikirama thaimai adaya ASA paduren avar kuda epalam yen mela kovapaduraru epa nan try panna kandipa thaimai agiduvena

Entha nilayum marum

மாயா நீங்க ஸ்டுடண்ட் என்பதை தெரிந்து கொண்டேன். 6-ந் தேதி தான் பிரீயட்ஸ் ஆகியிருக்கீங்க.

உங்களுக்கு ஒன்றரை மாதங்கள் இருக்கே பா.டென்ஷன் ஆகாமல் பிரீயட்ஸ் நின்றதும் நான் சொன்ன மாதிரி பஃலோ பன்னுங்க. பிரீயட்ஸ்க்கு ஒரு வாரம் முன்பு உறவு வைப்பதை நிறுத்தி விடுங்கள். உங்களுக்கு முக்கியமான நாட்கள் 12-ம் நாள் முதல் 18 டு 20 வரை.கட்டாயம் 12 டு 18 மிஸ் பண்ணாதீங்க பா.

கடவுள் அருளால் நீங்க இந்த மாதமே கர்ப்பம் அடைந்தால் ப்ளீஸ் உங்க கர்ப்பத்திற்க்கே முதலிடம் கொடுங்க. படிப்பு அடுத்தது தான்.

என்னையே நீங்க எக்ஸ்ஸாம்ப்ளா எடுத்துக்கலாம். 2009-ல் திருமணம் முடிந்த 18 வது நாளில் M.Phil ஜாய்ன் பன்னினேன்(கர்ப்பமானால் படிப்பை உடனே நிறுத்தி விட வேண்டும் என்ற முடிவுடன் தான்) ஆனா M.Phil-ம் முடிந்ததது ஆனா நான் கர்ப்பம் ஆகவில்லை, இவ்வளவுக்கும் நான் படித்த யூனிவர்சிட்டி அன்டு வேலை பார்த்த இடம் என் வீட்டில் இருந்து 15 டு 20 நிமிடங்களே. நான் காலேஜில் லெக்சரர்ராகத்தான் வொர்க் பண்ணினேன். கடந்த 2 வருடமாக வேலையை விட்டு வீட்டில் இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்.
நீங்க கர்ப்பமானால் படிப்பை விட்டுடுங்க, என்ன இப்படி சொல்றேனு நினைக்காதீங்க. குழந்தை இல்லனா எதுவுமே இல்லை(இந்த கருத்து என் அனுபவத்தால்,மன வேதனையால் சொல்வது மட்டுமே,தோழிகளே இதற்கு ஆட்சேபனை இருந்தால் மன்னிக்கவும்).

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நீங்க உறவு கொள்ளும் போது தலையனையை இடுப்புக்கு கீழே வைத்து இருங்கள். முடித்த பின் ஒரு 30 நிமிடங்கள் அப்படியே படுத்திருக்கவும். பிறகு தலையனையை மெதுவாக எடுத்து விடலாம்.

இதுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு, உங்க கிளாஸ் இன் -ஜார்ஜ் கிட்ட டிஸ்கன்டினிவ் செய்து மறுபடியும் படிக்க முடியுமா?(முடியும்) என்று கேட்டுப் பாருங்க.

எப்போ வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். படிப்புக்கு வயது இருக்கு, ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட வயது மட்டுமே, காலம் செல்ல செல்ல ரிஸ்க்கும் அதிகமாகும் பா.

என்னோட இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னிச்சிக்கோ மாயா.

நீங்க என்ன படிக்கிறீங்க, எங்க படிக்கிறீங்க.பதில் தரவும்.

அன்புடன்
ஜெயஸ்ரீ

மேலே சகோதரி சொன்ன‌ விடயத்தைத்தான் நானும் மாயாவுக்காகப் பதிலாகச் சொல்ல‌ வந்தேன். //நீங்க இந்த மாதமே கர்ப்பம் அடைந்தால் ப்ளீஸ் உங்க கர்ப்பத்திற்க்கே முதலிடம் கொடுங்க. படிப்பு அடுத்தது தான்.//

//epa 2 months sem holiday// இந்தச் சமயம் கர்ப்பமாகிக் கொண்டு மீண்டும் ஹாஸ்டல் போகப் போகிறீர்களா? மசக்கை தொந்தரவாக‌ இருந்தால் என்ன‌ செய்வீர்கள்! வாந்தி தலைச்சுற்று என்று இருந்தால் படிக்க‌ முடியுமா? இரவு தாமதமாக உட்கார்ந்து படித்துவிட்டுத் தூங்கப் போவது குழந்தைக்கும் உங்களுக்கும் ஆகாது. சில‌ நாட்கள் சாப்பிட‌ முடியாமலிருக்கலாம். அப்போது படிக்க‌ முடியாமல் களைத்துப் போவீர்கள். டென்ஷனாகும். வீட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் வீட்டார் சப்போர்ட் இருக்கும் எனலாம்.

ஒன்றில் படிப்பை முடித்துவிட்டுக் கர்ப்பமாகலாம். அல்லது குழந்தை பெற்றுக் கொண்டு படிக்கலாம். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பினால் உங்கள் மனதும் உடம்பும் கெட்டுப் போகும். படிப்பும் கெடும்; குழந்தை நலனும் கெடும். அப்போது //aunty// //kulantha// இருக்கிறதால‌ //padika kuda Vida matenu sol//வாங்க‌. நீங்க‌ ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். அவங்க‌ சொல்றது தப்பாக‌ இராது. ஆனால் உங்களால் முடியாது. இன்னும் குழப்பமும் பிரச்சினையும் அதிகமாகும்.

//enum 1 1/2 month than avar kuda erupen athanala than sikirama thaimai adaya ASA paduren// இது உங்கள் பக்க‌த்து நியாயம். //avar kuda epalam yen mela kovapaduraru// ம்.. ஏன் கோபப்படுகிறார் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? சும்மா கோபிக்கிறார் என‌ வேண்டாம். நீங்கள் படிக்கிறீர்கள் என்பதற்காகக் கோபப்படவில்லை. நீங்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதற்காகவும் கோபிக்க‌ முடியாது. நீங்கள்தான் பெரும்பாலும் ஹாஸ்டலில் இருக்கிறீர்களே!

நீங்கள் படித்து முடித்துவிட்டு மணம் செய்திருக்க‌ வேண்டும் மாயா. அல்லது முன்பே கணவராகப் போகிறவருடனும் படிப்பு முடியும் வரை பெரும்பாலும் பிரிந்து இருப்பீர்கள் என்பதைப் பற்றியும், அத்தை மாமாவுடன், படிப்பு முடியும் வரை குழந்தை பற்றி யாரும் பேச்சு எடுக்கப் படாது, என்பது பற்றியும் பேசியிருக்க‌ வேண்டும்.

//epa nan try panna kandipa thaimai agiduvena// ;( குட்டிப் பெண்ணே... வாழ்க்கை ட்ரை பண்றது இல்லை; வாழ்வது. உங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது; உங்கள் கணவரைப் பற்றியும் சிந்திக்க‌ வேண்டும் நீங்கள். அவரும் தன் வீட்டார் பேச்சுக்கு முகம் கொடுத்தாக‌ வேண்டும் இல்லையா! மணவாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். யோசித்து முடிவு செய்யுங்கள். எது முக்கியம்? எது முதலில் வேண்டும்? எத்தனை பேர் உங்கள் பக்கம் இருப்பார்கள்? யார் யார் எதிர்ப்பார்கள்?

மற்றவர்களை விடுங்கள். உங்கள் கணவரின் பூரண‌ ஆதரவு கிடைத்தால் படிப்பை முடித்து விட்டுக் குழந்தை பெறலாம். அல்லாவிட்டால் யோசித்துத்தான் ஆக‌ வேண்டும் நீங்கள்.

‍- இமா க்றிஸ்

Nan bsc biochemistry 3 year padikiren trichy sigc CLG LA mam enaku unmaya ethuvaraikum ena mudivu edukurathunu therila mami vitla CLG poga vendamnu solranga kalayanathuku munnadi padichu mudichidu kulanthaya pathi yocikalam nu sonnanga but epa padipu vendam solranga frds circle enum 6 month thandi padichidu pathukalam nu solranga avara ketta yenga vitla ASA paduranga kulantha venum nu solraru athan yen problem enala yen life pathi oru mudivu kuda eduka mudiyala enaku time venum neenga solra mathiri discontinue panna kuda nan ready imma mam solra mathiri padipu & kulanthanu yen mananilai rompa kulapathulea eruku enaku kulantha venum athukaga ethuvenalum seiven mam

Entha nilayum marum

hi maya r u in online

Enaku ungal karuthukalayum thelivana pathilkalai kodutharku nandri enaku niraya visayathuku pathil theriyala kalayanathuku munnadi avar yen mela katna kathalum anbum athikama erunthuchi nan padichi mudichidu kulayanthaya pathi yocikalamnu sonnen accept pannikitanga ana epa kulantha venumnu kova paduranga enaku enum 6 months time kodutha padichi mudichiduven ethapathi entha 3 months LA palamurai avarkita pesunen analum avar accept panikala yen mela kova paduraru epalam enaku sariyana thukam kuda ela yen mananilai rompa kulapathula eruku nan unmayavea China Ponnu than imma mam kulantha venum athukaga palamurai yen suyakavuratha Vida vendiyatha eruku avanga enaku kulantha pethukura thaguthiyea elanu solranga athanala padika kuda thonala neenga solra mathiri padikamalea erukalam padipu venumna kulantha pathi yocika kudathu kulantha venumna padipa pathi yocika kudathu nan yara pathi yocikadum yar solaratha ketkadum

Entha nilayum marum

Ama jay thukam varala

Entha nilayum marum

//unmayavea China Ponnu than// உங்கள் வயது என்னவென்று தெரியாது. ஆனால் முன்பே உங்கள் குணாதிசயம் பற்றிச் சற்றுப் புரிந்திருந்தது. உங்கள் பதில் எப்படி இருக்கும் என்று ஊகித்தேனோ அப்படியே எழுதியிருக்கிறீர்கள். :)

//niraya visayathuku pathil theriyala// கேளுங்கள், புரிந்தால் பதில் சொல்கிறேன். தமிழில் தட்டப் பாருங்களேன். மோபைலிலிருந்து தட்டச்சு செய்கிறீர்களா?

//kalayanathuku munnadi avar yen mela katna kathalum anbum athikama erunthuchi// இது எல்லா இடமும் உள்ள‌ கதைதான். பிறகு கலியாணம் ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கும் போது எதிர்பார்ப்புகள் மாறும் என்பதை விட‌, நீங்கள் தன்னைப் புரிந்துகொள்வீர்கள் என்கிற‌ நம்பிக்கை அதிகமாவதுதான் காரணம்.

//nan padichi mudichidu kulayanthaya pathi yocikalamnu sonnen accept pannikitanga ana epa kulantha venumnu kova paduranga// முதலில் அக்செப்ட் பண்ணினது காதலி மாயாவுடனான‌ ஒப்பந்தம். இப்போ மனைவி மாயாவிடம் உரிமையோடு எதிர்பார்க்கிறார். தவறு இல்லை அல்லவா?

//enaku enum 6 months time kodutha padichi mudichiduven// புரியுது. பெண்களிடம் மட்டும்தான் சமுதாயம், "குழந்தை இல்லையா?" என்று கேட்கிறது என்று நினைக்கிறீர்களா? ஆண்களிடமும் கேட்கும். தன்னிடம் குறைபாடு இல்லையென்பதை எப்படி நிரூபிப்பார்! நீங்கள் ஹாஸ்டலில். வெளியே சொல்ல‌ முடியாத‌ மனக் கஷ்டங்கள் அவருக்கும் இருக்கும். உங்களோடு பேசி வழிக்குக் கொண்டு வர‌ இயலாது என்கிற‌ போது வரும் இயலாமைதான் அந்தக் கோபமே தவிர‌ காதல் குறைந்து போவதில்லை.

//ethapathi entha 3 months LA palamurai avarkita pesunen analum avar accept panikala yen mela kova paduraru// திரும்பத் திரும்பப் பேசுவதால் பிரச்சினை தீரப் போவது இல்லை குட்டிப் பெண்ணே. மீதி படிப்பை ஒரு இடைவெளி விட்டு, பிற்பாடு தொடர‌ இயலாதா?

//epalam enaku sariyana thukam kuda ela yen mananilai rompa kulapathula eruku// இந்த‌ விடயம் கருத்தரித்தால் தீராது. இன்னும் அதிகமாகும். ஒரே வழி... படிப்பைப் பின்போடுவதுதான். நீங்கள் என் பெண்ணாக‌ இருந்தால்... வாழ்க்கை தான் முக்கியம் என்று சொல்வேன்.

//kulantha venum athukaga palamurai yen suyakavuratha Vida vendiyatha eruku// அவ்வ்! கலியாணம் ஆனா இந்தக் குட்டியூண்டு விஷயத்தைப் போய் சுய‌ கௌரவம் என்று பார்க்க‌ முடியாது. அப்படியானால் உங்கள் கணவரும் கூடத் தானே தன் சுய‌ கௌரவத்தை விட்டுக் கொடுக்கிறார்!!!!

//avanga enaku kulantha pethukura thaguthiyea elanu solranga// எவங்க‌!! இதே ஆட்கள் இதே வார்த்தையை உங்கள் கணவரிடமும் சொல்லியிருக்கக் கூடும் என்று தோன்றவில்லையா!! ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம். நீங்கள் உங்கள் பக்கத்தை மட்டும் பார்க்கிறீர்கள்.

//athanala padika kuda thonala// ஒன்று சொல்லட்டுமா? இதற்கு மேல், "படிக்கலாம் 6 மாதம்," என்று அவர்கள் அனுமதி கொடுத்தாலும் உங்கள் மனது சொல்லும், "விருப்பமில்லாமல் அரை மனதோடுதானே விட்டிருக்கிறார்கள்; இதையே ஏன் பிரச்சினை இல்லாமல் அனுமதித்திருக்கலாமே!' என்று. :‍) சந்தோஷமாக‌ முழுமனதோடு படிப்பில் கவனம் செலுத்த‌ முடியாது அப்போதும். கர்ப்பம் தரித்து, அதோடு கூட‌ படிப்பையும் தொடர்வீர்களானால், அவ்வப்போது பயம் வரும். இங்கு ஒவ்வொரு சின்னப் பெண்ணும் வந்து எத்தனை கேள்விகளை வைக்கிறார்கள் என்று பாருங்கள். "எனக்கு 3 நாளாகத் தும்மல். இதனால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா?' என்கிற‌ ரீதியிலிருக்கிறது இன்றைய‌ குட்டிப் பெண்களின் மனநிலை. எல்லோரும் நன்கு கற்றவர்களாக‌ இருந்தும் ஏன் இப்படி என்று யோசிப்பதுண்டு நான். நிச்சயம் பொது அறிவு போதாமலிராது. சிந்திக்கப் பயம். இந்த‌ ரீதியில்தான் உங்கள் சிந்தனையும் போகும்.

//padipu venumna kulantha pathi yocika kudathu// நிகழ்காலத்தில் சொல்கிறேன். ஒன்றை முடித்துவிட்டு அடுத்தற்குப் போங்கள். இரண்டு தோணிகளில் ஒரே சமயம் கால் வைக்க‌ வேண்டாம் என்று மட்டும்தான் சொல்கிறேன்.

//kulantha venumna padipa pathi yocika kudathu// அப்படி நான் சொல்லவில்லை மாயா. பெற்றுக் கொண்டு ஒரு இடைவெளி கொடுத்துப் படிக்க‌ ஆரம்பியுங்கள். இரண்டையும் ஒன்றாகச் செய்ய‌ நினைக்க‌ வேண்டாம்.

//nan yara pathi yocikadum// ம்... உங்கள் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம். நீங்கள் நினைப்பது போலவே கர்ப்பம் தரித்து அதே சமயம் படிக்கலாம். என்ன‌ ஆகும்? தாய்மையை ரசிக்க‌ நேரம் கிடைக்குமா? உள்ளே உங்கள் குழந்தை வளரும் காலம், அற்புதமான‌ காலம். ஓய்வு, உணவு, உடற்பயிற்சி, டென்ஷன் இல்லாமை எல்லாம் தேவை. உங்கள் கணவர் வெளிநாட்டில் வேலை என்றால் அது வேறு நிலை. இங்கேயே அருகருகே இருந்துகொண்டு தன் குழந்தையின் வளர்ச்சியைக் காண‌ முடியாமலிருப்பார். அப்போது மீண்டும் இருவருக்குமிடையில் மனக் கசப்புகள் வரலாம்.

//yar solaratha ketkadum// யார் சொல்வதையும் கேட்க‌ வேண்டாம். நான் உங்கள் அம்மாவோ, அத்தையோ, ஆசிரியையோ அல்ல‌. இமாவின் சின்னச் சிந்தனைக்கு எட்டியதைச் சொன்னேன். படித்துப் பாருங்கள்.

உங்களுக்குப் படிக்கும் அளவு திறமையான‌ மூளை இருக்கிறது; சிந்தியுங்கள். எது உங்கள் எதிர்கால‌ வாழ்க்கைக்கு நல்லது என்பதை யோசியுங்கள். //Entha nilayum marum// நல்லதாக‌ மாறட்டும். என் வாழ்த்துக்கள் குட்டிப் பெண்ணே!

‍- இமா க்றிஸ்

5-10-94 ennnoda date of birth yen imma mam ethalam ennala purinjika mudiyala purinjalum mansu kulapathulea eruku kandipa yen kulanthaya pathi nan yocikiren avarkita ethapathi pesuren nan CLG discontinue panren ethuku apramavathu yen problems thiradum avara pathi nanum yocikama erukala mam enaku avara rompa pitikum analum enaku avarela rompa kopama varuthu karanam theriyala nalaiku deepavali analum rendu perum sanda pottukitu avar akka vituku poidaru imma mam epa etha pathi pesuna santhosa paduvara ela kova paduvaranu theriyala

Entha nilayum marum

மேலும் சில பதிவுகள்