wheatbread

hi friends எனக்கு கோதுமைமாவில் பிரட் செய்வது எப்படி என்று சொல்லுங்கள்,பலமுறை செய்துப்பார்த்தும் சரியாக வரவில்லை மற்றும் பிரட் வெந்துவிட்டதை எப்படி கண்டுபிடிப்பது? pls யாராவது சொல்லுங்க

வெந்து விட்டதா என பார்க்க டூத் பிக் விட்டு இல்லைனா சிக்கு குச்சி விட்டு பாருங்க. ஒட்டாமவரணும் வெந்துட்டா..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சரியானபடி தயார் செய்து சரியான‌ அளவிற்கு வேக‌ விட்டால் சரியாக‌ வரும். வாசனை சொல்லும் வெந்துவிட்டதை.

அவணை ப்ரீ ஹீட் பண்ணீங்களா?
மாவைப் பொங்க‌ விட்டீங்களா?
ஈஸ்ட் எக்ஸ்பைரி தேதி சரியாக‌ இருந்ததா?
மாவு தரமானதாக‌ இருந்ததா?

பிசைந்து விட்டு உடனே பேக் செய்தால் சரிவராது. பேக் செய்யவிருக்கும் பாத்திரத்தில் வைத்த‌ பின் பொங்குவதற்கு நேரம் விட‌ வேண்டும். நீங்கள் வீட்ப்ரெட் என்று சொன்னது பதில் சொல்லப் போதுமானதாக‌ இல்லை. என்ன‌ ரெசிபி? என்னென்ன‌ சேர்த்தீர்கள்? எப்படித் தயாரித்தீர்கள். சொன்னால் எங்கே பிழை என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

இங்கே குறிப்புகள் இருக்க‌ வேண்டும். தேடிக் கொடுக்க‌ இயலவில்லை. தேடிப் பார்க்கிறீர்களா?

‍- இமா க்றிஸ்

imma அம்மா மாவு நன்றாக பொங்கிவந்தது ஈஸ்ட் புதுசு தான் 22௦டிகிரியில் 2௦ min preheat செய்தேன் 3கப் கோதுமைமாவு 1 கப் தண்ணீர் 1tsp instantyeast 2tbsp தயிர் 2 tblsp பட்டர் 1 tblsp சர்க்கரை 1tsp உப்பு சேர்த்து பிசைந்து 30 நிமிடம் பொங்கவைத்தேன் பிறகு பிரட் செய்யும் பாத்திரத்தில் வைத்து 45 நிமிடம் பொங்கவைத்தேன் 22௦டிகிரியில் 25 நிமிடம் bake செய்தேன் அனாலும் பிரட் ரொம்பவும் hardaka இருந்தாது நான் அறுசுவையில் தேடிப் பார்தேன் கிடைக்கவில்லை இது வேறு ஒரு websiteல் பார்த்தது pls என்ன பிழை என்று சொல்லுங்கள் அம்மா

மேலும் சில பதிவுகள்