தேங்காய் துவையல் சமையல் குறிப்பு - படங்களுடன் - 32462 | அறுசுவை


தேங்காய் துவையல்

வழங்கியவர் : திருமதி. ஜெயா ரவி
தேதி : வியாழன், 05/11/2015 - 11:21
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
1.5
2 votes
Your rating: None

 

  • கருப்பு உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் - ஒரு மூடி
  • மிளகாய் வற்றல் - 5
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு

 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுக்கவும். அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.

உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய் துருவல் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.

சுவையான தேங்காய் துவையல் ரெடி. இந்த துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.





இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



தேங்காய்த் துவையல்

சேர்த்தேன் விருப்பப் பட்டியலில். ;)