இறால் பிரட்டல்

தேதி: February 18, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - 500 கிராம்
தயிர் - 1/2 கப்
மிளகாய்தூள் - 1 1/2 கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி
தண்ணீர் - அரை கப்
எண்ணெய் - 4 கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு - 1 கரண்டி
மல்லிக்கீரை - 1 கொத்து


 

இறாலை சுத்தம் செய்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீரை ஊற்றி வேகவிடவும்.
தண்ணீர் வற்றியவுடன் அதை எடுத்து தனியாக எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை பொரிய விட்டு அதில் தூள்களை போட்டு வதக்கி அதில் இறாலை போட்டு தயிரையும் ஊற்றி நன்கு சுருளும் வரை வதக்கி எலுமிச்சைச்சாறு, மல்லிக்கீரை தூவி அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்