மசாலா முறுக்கு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 2 கப்
உளுத்தமாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - கால் கப்
எண்ணெய் - அரை லிட்டர்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 துண்டு
மிளகாய் - 12
உப்பு - தேவைக்கேற்ப


 

புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றினையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவுடன் தேவையான உப்பு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, பச்சரிசிமாவு, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, அத்துடன் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவினை முள்ளு முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்