மொரோக்கன் லேம்ப் சாப்ஸ்

தேதி: December 12, 2015

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

மட்டன் சாப்ஸ் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பேப்ரிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புதினா - 5 இலைகள்
பார்ஸ்லி - 10 இலைகள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.
சுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.

பேப்ரிக்கா பவுடருக்குப் பதிலாகத் தனி மிளகாய்த் தூளும், பார்ஸ்லி இலைகளுக்குப் பதிலாக கொத்தமல்லி இலைகளும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல‌ குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.