கத்தரி உருளை மண்டி

தேதி: December 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

கத்தரிக்காய் - 6
உருளைக்கிழங்கு - ஒன்று
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 4
தக்காளி (சிறியது) - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
அரிசி களைந்த நீர் - ஒரு கப்
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
அத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்..
ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
மதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை என அனைத்துடனும் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க உணவு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு அபி. செய்முறை புகைப்படங்கள் இரண்டும் அருமை.

ரொம்ப நன்றி அம்மா..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

கத்தரி உருளை மண்டி புதுசா இருக்கு அபி

இங்க இது ரொம்ப பாப்புலர் ரெசிப்பி.வளைகாப்பு வீட்ல கண்டிப்பா இது இருக்கும்.கலந்த சாத வகைகளுக்கு கண்டிப்பா பண்ணுவாங்க.இதில் முருங்கை காய் சேர்த்தும் பண்ணலாம்.செமையா இருக்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி