saudi friends pls help me .....

நாங்கள் சவுதியில் இருக்கிறோம். என் கணவருக்கு விந்தணு வலுபெற ஓரிதழ் தாமரை பொடி முல்லிவிதை பொடி முருங்கை விதை பொடி இதல்லாம் சாப்பிட கொடுக்க வேண்டும் என்று என் பாட்டி கூறியுள்ளார்கள். இரண்டாம் குழந்தை தள்ளி கொண்டே செல்கிறது. இப்போது இந்தியாவில் இருந்து இதை saudiku கொண்டு வர தடை ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. சவுதியில் வசிக்கும் தோழிகள் வழி கூறுங்கள்.இங்கு கச கசா மற்றும் மயக்க மருந்து கொண்டு வருபவர்களுக்கு மரண தண்டனை என்பதால் யாரைம் கொண்டு வர பயபடுவார்கள். இந்த மாதிரி herbal powders யாரேனும் கொண்டு வந்துள்ளீர்கள ? யாரிடம் கேட்டால் correcta தெரியும்.

வேறு யாராவது பதில் சொல்லாவிட்டால்...

பொதுவாகச் சொல்வதானால்... ஆட்களிடம் விசாரிப்பது பெரிதும் பலன் தராது. ஒன்று... அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட‌ பொருளைக் கொண்டு சென்றிருக்க‌ மாட்டார்கள். கொண்டு சென்றிருந்து அனுமதித்திருந்தாலும், இன்னொரு சமயம் அதே போல‌ சிரமமில்லாமல் அனுமதி கிடைக்கும் என்பது இல்லை. இது சட்டங்களை விட‌, அன்று விமானத்தளத்தில் வேலையிலிருக்கும் அதிகாரியையும் அவரது அன்றைய‌ நாள் எப்படி இருந்தது என்பதையும் கூடப் பொறுத்த‌ விடயம். அதிகாரிக்கு மூட் சரியில்லாமலிருந்தால் பயணிக்குச் சிரமம்; நன்றாக‌ இருந்தால் அதிஷ்டம்.

நேரடியாக‌ இமிக்ரேஷன், கஸ்டம்ஸ், போஸ்ட்டல் டிபார்ட்மண்ட்டுகளில் விசாரியுங்கள். அதுதான் பாதுகாப்பானது. முடிந்தால் மூன்று இடங்களிலும் விசாரிப்பது நல்லது. ஒன்றில் விட்டுப் போன‌ தகவல் இன்னொன்றில் கிடைக்கலாம்.

யாரிடமும் சொல்லிக் கொண்டுவர‌ வைப்பது... நானானால் செய்ய‌ மாட்டேன். இங்கு நியூசிலாந்திற்குள், அவுஸ்திரேலியாவுக்குள் தடை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்து சிலவற்றைக் கொண்டு சென்ற‌ போதே சோதனையின் போது திண்டாடியிருக்கிறோம். சந்தேகமானவற்றைத் தவிர்ப்பது பயணம் அமைதியாக‌ இருக்க‌ உதவும். களைப்பான‌ பயணத்தின் பின் தரையிறங்கியும் மணிக் கணக்கில் தாமதமாகிற்று. போதாததற்கு சுற்றிலும் ஆட்கள் நம்மைக் கவனிப்பது கஷ்டம். குற்றவாளி போல‌ ஒரு குறுகுறுப்பான‌ உணர்ச்சி வரும். ;(

சுகாதாரத் திணைக்களத்தாரிடமிருந்து அது மருந்துப் பொருள், தடை செய்யப்பட்ட‌ உள்ளீடுகள் எதுவும் கலக்கப்படவில்லை என்பதான‌ அத்தாட்சி இருந்தால் கொஞ்சம் பாதுகாப்பு என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

பயனுள்ள தகவல் விளக்கமாக புரியும்படி பதில் தந்ததுக்கு நன்றி இம்மா அம்மா ...

மேலும் சில பதிவுகள்