சுபிதாவின் ஹைக்கூ கவிதைகள் - அறுசுவை கவிதை பகுதி - 32560

Kavithai Poonga

சுபிதாவின் ஹைக்கூ கவிதைகள்

ஆறுதல் தேடி கிடைக்காமல்
தானாகவே
ஆறுதல் பெற்றது என் இதயம்........

- M. சுபி

ஊஞ்சலில் ஆடுவது நீ
ஆட்டுவிக்கப்படுவது என் மனம்.........

- M. சுபி

 

உதிர்ந்த இலைகள்
காட்டுகிறது
மரத்தின் முகவரியை
வீதியெங்கும்...........

- M. சுபி

"உடையும் பொருள் கவனம் தேவை"
ஏனோ இதை
என் இதயத்தில் எழுத மறந்துவிட்டேன்

- M. சுபி

 

நிலவே ......
வானில் யாரைக் கண்டு வெட்கப்பட்டு
மேகங்கள் இடையே
ஒளிந்துக் கொண்டாய் நிலவே .....

- M. சுபி

வா என்று
என்னை அழைத்து இழுத்தது கடல் அலை
நான் செல்லாததால்
போ என்று கோபத்துடன் திரும்பி சென்றுவிட்டது..........

- M. சுபி

 

மழை நின்றபின்னும்
நிற்காத தூரலாய்
உன் நினைவுகள்..........

- M. சுபி

சிறகில்லை
வானில் பறக்கிறேன்
உன்னை பார்த்ததினால்............

- M. சுபி

 கவிதை

அறுசுவை அன்ட் அட்மின் பாபு அண்ணா எனது ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.,

கவிதைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் தோழிகளே.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுரே சிஸ்

உங்களுக்காக இந்த முயற்சி, அட்ஜஸ் செய்துக்கோங்க......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி

எல்லாமே சூப்பர்.
உடையும் பொருள்
வா... .போ கடல் அலை
அருமை சுபி.

சுபி

மற்ற கவிதைகளை போல ரெம்ப நல்லாவே வருது சுபி.எல்லா வரிகளுமே அருமை.எனக்கு ஹைக்கூ அவ்வளோ பிடிக்கும்.மேலும் மேலும் வளர மனமார்ந்த பாராட்டுக்கள்

நிகி க்கா

உங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி.
//எல்லாமே சூப்பர்.அருமை சுபி.// தாங்ஸ் நிகிக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுரே சிஸ்

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
ஓ உங்களுக்கு என்ட கவிதை பிடிச்சதில் ரொம்பவே ஹாப்பியாக்கும். தாங்க் யூ சோ மச்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Subi Haiku kavithai

Subi Haiku kavithai pinnureenga ponga!!!! i like haiko kavithai short and sweet with msg. Kadal alai kavithai fantastic..

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

அம்மு

முதன்முதலில் என் கவிதையில் உங்கள் பதிவு. மிகவும் நன்றி.
ஓ உங்களுக்கு என் கவிதைகள் பிடிச்சதில் ரொம்ப சந்தோசம்.
தாங்க் யூ சோ மச்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி கவிதை

எனக்கு ஹைக்கூ கவிதை மிகவும் பிடிக்கும். உங்கள் கவிதை அருமை. உங்கள் இறுதிக்் கவிதை அதே வரிகள்..... நானும் எழுதியிருக்கேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று

உங்களுக்கும் ஹைக்கூ கவிதைகள் பிடிக்குமா ரொம்ப சந்தோசம்,
ஓ நீங்களும் அதே வரிகள் எழுதி இருக்கீங்களா 2 பேருக்கும் ஒரே மாதிரி ரசனைகள். உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *