கணவருக்கு எப்படி புரிய‌ வைப்பது

ஹலோ தோழிகளே

என் பையனுக்கு 2 வயது. நான் வேலைக்கு செல்லும் பெண். என் குழந்தைக்கு தாய்ப்பால் நிறுத்த‌ உள்ளென். வேலைக்கு சென்று வந்ததும் என்னிடம் பால் குடிப்பான் ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. நான் விடுமுறையில் வீட்டில் இருகும்பொழுது பகலில் பால் கொடுப்பேன் ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. இரவில் மட்டும் இடையில் பால் குடிக்க‌ அழுதுக்கொண்டே எழுவான். பால் கலக்கி கொடுத்தால் குடிப்பதில்லை. தாய்ப்பால் தான் வேன்டும் என்று அழுகிறான். எனக்கு அம்மா இல்லை. என் கணவரிடம் மாமியார் வீட்டில் 2 நாளைக்கு விடலாம் என்றால் ஒத்துக்கொள்ள‌ மறுக்கிறார். அவன் இடயில் எழும்பொது என் கணவரும் புரிந்து கொள்வதில்லை தாய்ப்பால் கொடுக்க‌ சொல்லி வற்ப்புறித்துகிறார். ஆரம்பத்தில் அப்படி தான் அழுவான் போக‌ போக‌ சரி ஆகி விடுவான் என்றால் புரிந்து கொள்ள‌ மாட்டேன்கிறார். வேப்பெண்ணை வைத்தால் சரி ஆகி விடுவான் என்றால். குழந்தைக்கு பேதி ஆகும் வேண்டாம் என்கிறார். டம்ளரில் பால் கொடுத்தால் அவன் அழுகிறான் அப்படி கொடுத்தால் மூக்கில் ஏறி கொள்ளும் என்று எதுவும் கொடுக்க‌ விடுவதில்லை. என் கணவரை எப்படி மாற்றுவது. குழந்தை இரவில் பால் குடிகாமல் இருக்க‌ என‌ வழி. குழந்தைக்கு இரவில் நன்றாக‌ உணவு கொடுத்து தான் தூங்க‌ வைக்கிறென். உதவுஙள்

யாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்

Hi இரண்டு வயது பையனுக்கு பாலை நிறுத்துவதற்கு நீங்க கொஞ்சம் சிரமம் படணும. வேப்ப எண்ணெய் வைத்தால் பேதி ஆகாது. பயம் வேண்டாம். முதலில் குழந்தையிடம் மாலை நேரத்தில் பேசுங்கள் , அம்மாவிற்கு மார்பில் வலிக்கிறது, நீ பால் குடித்தால் இன்னும் வலிக்கும். நீ வளர்ந்த விட்டாய் டம்ளரில் தான் குடிக்க வேண்டும். இது போல் நிறைய பேசுங்கள் கணவரை விட இந்த கால பிள்ளைகள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மனம் தளர வேண்டாம். அவரது நண்பர்கள் யாரும் டம்ளரில்தான் பால் குடிப்பது பழக்கம் என்றும் உங்கள் மகனும் இனி அப்படி தான் குடிப்பார் என்றும் மற்றவர்கள் முன் தொடர்ந்து சொல்லுங்கள். விரைவில் வெற்றி பெறுவீர்கள் . வாழ்த்துக்கள்.

Try and try again until you reach the target.

Anitha

மேலும் சில பதிவுகள்