வற்றல் குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 32573 | அறுசுவை


வற்றல் குழம்பு

வழங்கியவர் : திருமதி. மீனா
தேதி : Sat, 02/01/2016 - 10:31
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.809525
21 votes
Your rating: None

 

 • மல்லி - 2 மேசைக்கரண்டி
 • மிளகாய் வற்றல் - 5
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • கடலை பருப்பு - அரை மேசைக்கரண்டி
 • துவரம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
 • வெந்தயம் - அரை தேக்கரண்டி
 • மிளகு - ஒரு தேக்கரண்டி
 • புளி - ஒரு எலுமிச்சை அளவு
 • மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
 • சுண்டைக்காய் வற்றல் - ஒரு மேசைக்கரண்டி
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் - 10
 • உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி

 

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் முதலில் மல்லி மற்றும் மிளகாய் வற்றல் இரண்டையும் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

பிறகு கடலை பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் போட்டு 2 நிமிடம் சிவக்க வறுக்கவும். அதன் பின்னர் சிவந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். இதே போல இரண்டு முறை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து மொத்தம் ஒன்றரை கப் புளி கரைச்சல் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் சிவக்க வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலை தாளித்தவற்றுடன் ஊற்றவும்.

புளிக்கரைசலை ஊற்றிய பிறகு ஒரு தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.

பின்னர் 8 நிமிடம் கழித்து குழம்பு கொதித்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான வற்றல் குழம்பு ரெடி. விருப்பட்டால் இறக்குவதற்கு சற்று முன்பு அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் வற்றல், மா வற்றல், கொத்தவரங்காய் வற்றல் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்யலாம்.வற்றல் குழம்பு ரெசிப்பியில்

வற்றல் குழம்பு ரெசிப்பியில் உளுந்தை வறுத்து அரைக்கச் சொல்வார்கள். அது போல முயற்சித்து சுவை நன்றாகவே இல்லை.

உங்களின் இந்த குறிப்பு அருமை. ரசித்து உணவு எடுத்துக்கொண்டோம்.

தங்கவேல் மாணிக்கதேவர்
கோயமுத்தூர்

உங்கள் பதிவுகள் அனைத்தும்

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984