சுபிதாவின் ஹைக்கூ கவிதைகள் - 2 - அறுசுவை கவிதை பகுதி - 32574

Kavithai Poonga

சுபிதாவின் ஹைக்கூ கவிதைகள் - 2

பரந்து விரிந்த மணல்பரப்பில்
அழகிய ஓவியம்
உன் கால் தடம்.......

- M. சுபி

வாடகை ஏதும் தராமல்
தங்கும் ஓரே இடம்
பிடித்தவர்களின் மனது........

- M. சுபி

 

கண் மூடும் போது வரும் கனவு
ஏனோ கண்திறந்தவுடன்
காணாமல் போய்விடுகிறது,
கனவிற்கு வெளிச்சம் ஆகாதோ?

- M. சுபி

உனக்கென கவிதைகளை
மாலையாய் தொடுத்தேன்
நீ அதை ஏற்காததால்
சூடும் முன்னே வாடி விட்டன அவை

- M. சுபி

 

பிரிவை விரும்பாத
உற்றத் தோழமைகள்
காலணிகள்.......

- M. சுபி

கண்கள் ஓடும் என
உன்னைத் தேடி
நோட்டமிட்ட பின் தான் தெரியும்.......

- M. சுபி

 

முதல் பரிசு பெற்றவுடன் தான் தெரிகிறான்
தெரு கோடியில் வாழும் ஏழை மாணவன் .....

- M. சுபி

 
 ஹைக்கூ

அழகாக எழுதியிருக்கிறீர்கள் சுபிதா.

இரண்டாவதும் நான்காவதும் இறுதிக் கவிதையும் ஹைக்கூ பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிவிட்டிருக்கின்றன.

//பறந்து விரிந்த மணல்பரப்பில்// 'பரந்து' என்றிருந்திருக்க வேண்டாமா!

இமா க்றிஸ்

ஹைக்கூ

எனது கவிதைகளை அழகா வெளியிட்ட அட்மின் அன்ட் டீம்க்கு எனது நன்றிகள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இமாம்மா,

ஆஹா எனது கவிதைல இமாம்மா கருத்து, மிகவும் சந்தோசம்.
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.,
//இரண்டாவதும் நான்காவதும் இறுதிக் கவிதையும் ஹைக்கூ பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிவிட்டிருக்கின்றன//
நான் எழுதியிருக்கது சரியானு கூட எனக்கு தெரியாது, சுரே அக்கா ஹைக்கூ கவிதை எழுத சொல்லி வேறு ஒரு கவிதை பக்கம்ல கேட்டாங்க அதனால இந்த முயற்சி அவ்ளோதான், உங்க ஆவலை சீக்கிரம் ஹைக்கூக் கவிதைகளா அறுசுவைல் எதிர்பார்க்கிறேன்ம்மா.......

கரெக்ட் இமாம்மா கவனிக்காம விட்டுட்டேனே, சரி தான் டீம் மாத்த முடிஞ்சா மாத்திடுங்கப்பா.....

இந்த தப்பு செய்ததுனால தானே இமாம்மா டீச்சர் இங்க வந்து கருத்து சொன்னாங்க அதுல ஒரு சின்ன ஹாப்பி.......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி

ரெம்ப நல்லா எழுதி இருக்கிறீங்கள் சுபி.
காலணிகள்
பிரிவை
விரும்பாத
உற்ற தோழமைகள்

இது எனக்கு ரெம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு.

வெளிச்சம் கண்டது விலகும் கனவு .......அற்புதம்.மொத்தத்தில் சூப்பர் நிறைய எழுதுங்கோ.

Wow Subi kavithaigal yellam

Wow Subi kavithaigal yellam superb ya romba nalla irukku.... keep rocking!

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

அம்மு

ரொம்ப தாங்க்ஸ் பா, அறுசுவை பக்கம் வந்து ரொம்ப நாளாகுது.
உங்க பாராட்டிற்கு நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

1st super

1st super

தோழி பவ்யா

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அழகாக உள்ளது சகோ.. உங்கள்

அழகாக உள்ளது சகோ.. உங்கள் எல்லா கவிதைகளும் மிக மிக அழகு.. அதிலும் இரண்டாவது கவிதை அழகோ அழகு..
அழகுக்காக அழகினால்
தொடுக்கப் பட்ட மாலை இவை,
சூடாமல் போனாலும் வாடாது தோழி....

வாழ்த்துக்களுடன்,
தமிழ்இளவரசி...

சுபி

ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் உன் கவிதைகளை வாசிக்க டைம் கிடைச்சது.. பொறுமையாக படிக்கணும்ல..:) எல்லாமே சூப்பர்..
இன்னும் உன்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் கவிஞரே...!!

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி