இங்லீஷ் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்

தேதி: February 20, 2007

பரிமாறும் அளவு: 4நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - அரைக்கிலோ
மைதா - ஒன்றரை கோப்பை
அரிசி மாவு - அரைக்கோப்பை
முட்டை - ஒன்று
பால் - ஒன்றரை கோப்பை
தண்ணீர் - அரைக்கோப்பை
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
டார்டார் சாஸ் தயாரிக்க:
மயோனைஸ் - கால் கோப்பை
தில் பிக்கில் - இரண்டு தேக்கரண்டி
பிமென்டோ பிக்கில் - இரண்டு தேக்கரண்டி
பார்ஸ்லி இலை - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
தயாரித்த ஃபிரென்ச் ஃபிரைஸ் - தேவையான அளவு
தக்காளி கெட்சப் - அரைக்கோப்பை


 

நன்கு சதைப்பற்றுள்ள மீனாக பார்த்து வாங்கவும். பிறகு அதிலுள்ள முட்களையும், தோலையும் நீக்கி விட்டு மெல்லிய ஆனால் சற்று பெரிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மைதா, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற கோப்பையில் முட்டையும், பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மாவுக் கலவையைப் போட்டு தண்ணீரை ஊற்றி கலக்கவும்.
கரைத்தமாவின் பதம் சற்று தளர இருக்கும் படி கலக்கிக் கொள்ளவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைத்து எண்ணெய் காய்ந்தவுடன் அடுப்பின் அனலை குறைத்து வைத்து மீன் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
ஒரு புறம் வெந்தவுடன் மறு புறம் திருப்பி போட்டு சிவக்க வெந்தவுடன் எடுத்து எண்ணெயை வடியவிடவும்.
சாஸ் தயாரிக்க தேவையான பொருட்களை ஒரு கோப்பையில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். தேவையானால் சிறிது உப்புத்தூளை போடலாம்.
பிறகு பரிமாறும் தட்டில் தயாரித்த மீனுடன், ஃபிரென்ச் ஃபிரைஸையும் வைத்து பக்க உணவாக டார்டார் சாஸும், தக்காளி கெட்சப்பும் வைத்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்