அறுசுவை பிரபலம் - 1

மிக நீண்ட இடைவெளிக்கு பின் இப்படி ஒரு பகுதியோடு தான் மீண்டும் வலைப்பகுதி பக்கம் வர வேண்டும் என காத்திருந்தேன். இத்தனை நாள் காத்திருப்பு வீண் போகவில்லை. ஜலீலா பற்றி தெரியாதவர்கள் அறுசுவையில் இல்லை. அவரிடம் பழகிடாத புது முகங்களுக்கு நான் ஒரு சின்ன இன்ட்ரோ கொடுக்கிறேன். அறுசுவையில் 8 வருடங்களுக்கும் மேலாக குறிப்புகள் கொடுப்பவர். சமையலில் பல வருட அனுபவம் மிக்க இவர் 600 குறிப்புகளுக்கும் மேல் கொடுத்து அசத்தியவர். சமையல் குறிப்புகள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கான உணவுகள், வீட்டு மருத்துவ குறிப்புகள் என பலவற்றிலும் அசத்தியவர்.

எனக்கு மட்டுமல்ல என்னை போல அறுசுவையில் நுழைந்த பலருக்கும் இவர்கள் தான் சமையலில் ஜாம்பவான்கள். இவர்களை பார்த்து தான் சமையலில் எங்களுக்கு ஆர்வம் வந்தது, நாங்களும் குறிப்புகள் தர துவங்கினோம். கடல்பாசி உணவுகளை எனக்கு அறிமுகம் செய்தவர். இவர் சமையலில் என்னை அடிக்கடி செய்ய வைத்து எனக்கு பெயர் வாங்கித்தந்த குறிப்புகள் சில உண்டு... முக்கியமாக பூண்டு கோழி, தக்காளி அல்வா போன்றவை. டைம் கிடைச்சா நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க :)

அவரிடம் 10 கேள்விகள் கேட்டோம்... வேலைகளுக்கு நடுவே நமக்காக நேரம் ஒதுக்கி பதிலும் தந்திருக்கிறார். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என் சார்பாகவும் அறுசுவை சார்பாகவும் மிக்க நன்றி ஜலீலா.

1. ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பழக்குவிப்பது பற்றி உங்களின் கருத்து என்ன ? (வாணி)

‍‍- ‍‍ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பழக்குவிப்பது மிகவும் நல்லது. இப்போது வெளிநாடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ வெளி நாடுகளில் இல்லை உள்ளூரிலேயே வேறு ஊர்களில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கு சின்ன சின்ன சமையல் தெரிந்து வைத்து கொண்டு சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

2. ஒரு குறிப்புக்கு பின்னூட்டங்கள் எந்த அளவுக்கு அவசியம்? அதைப் படிக்கும் போது எப்படி உணருவீங்க? (நிகிலா)

- குறிப்புகளுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக தேவை அது பெரிய சந்தோஷம் அடுத்த போஸ்ட் இன்னும் நல்ல போடனும் என்ற ஆர்வத்தை அளிக்கும்.

3. உங்களுக்குப் பிடித்த சைவ சமையலில் விருந்தினருக்கு ஏற்றார்ப் போல சுவையான குறிப்பாக ஒரு ஃபுல் மெனு எங்களுக்காக சொல்ல முடியுமா? (நிகிலா)

- சைவ சமையல் விருந்தினருக்கு ஏற்ற ஃபுல் மெனு பார்டிக்கு செய்ய

ஆனால் நார்மலாக செய்ய அப்படியே பாதி மெனு செய்வேன்.

கிரிஸ்பி காலிப்ளவ்ர் 65

கிரீன் சட்னி

சென்னா புலாவ்

கேரட் ரைத்தா

பனீர் டிக்கா

மஷ்ரும் பீஸ் குருமா

நான் (அ) ரொட்டி

தால்

வெஜ் கட்லெட்

பன் & பாதாம் பீர்னி

கலர்புல் அகர் அகர்

ஃப்ரூட் சாலட் வித் ட்ரை கலர் ஐஸ்கிரீம்

ரசமலாய்

அத்திபழ தக்காளி ஹல்வா

கிரீன் சாலட்

மிக்டு வெஜ்ஜிசாலட்

4. நீங்கள் முதன் முதலில் சமைத்த குறிப்பு எது? அதற்கு முதல் பாராட்டு யாருடையது? (ரேவஸ்)

- முதல் முதலில் சமைத்த ரெசிபி நிறைய இருக்கு... ஆனால் எங்க அப்பா கேட்டு செய்து கொடுத்த ஸ்நாக்ஸ் கிரிஸ்பி பக்கோடா இது ரொம்ப ரொம்ப சொதப்பி கடைசியில் நல்லா செய்து என் தந்தையிடம் பாராட்டை பெற்றபோது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

திருமணம் ஆனதும் தோசைக்கு தொட்டுக்க செய்த வடகறி என் கணவர் விரும்பி சாப்பிட்டு ஹோட்டலில் சாப்பிடுவதை விட மிக அருமை என்றார்.

5. உங்களுக்கு கஷ்டமான ரெசிபி இன்னும் திரும்ப திரும்ப செய்தாலும் அதன் ஒரிஜினல் சுவை வராமல் இருந்துருக்கா? அது என்ன ரெசிபி? (ரேவஸ்)

- ரொம்ப சொதப்பிய ரெசிபி இடியாப்பம்.

6. ஹோட்டல், மற்றவர் கைவண்ணத்தில் சமைத்த உணவுகளில் உங்களுக்கு பிடித்த ரெசிபிய அவர்களிடம் குறிப்பு கேட்காமல் செய்து பார்த்து அதன் சுவையை எடுத்து வந்ததுண்டா? அப்படி வந்ததுக்கும் அப்பறம் உங்களுக்கு எப்படி இருக்கும்? (ரேவஸ்)

- கூடுமானவரை சாப்பிடும் சுவையை வைத்து செய்து பார்ப்பேன். அதில் நிறைய சைவ சமையல் சூப்பராக வந்துள்ளது. ரொம்ப நல்லா வந்தது என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப அளவில்லாத மகிழ்ச்சியை அடைவேன். இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.

7. உங்க வீட்டு சமையல் உபகரணங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது ? ஏன் ? (ஏஞ்சல்)

- எனக்கு ரொம்ப பிடிச்சது நான்ஸ்டிக் தோசை கரண்டியும் சின்ன தோசை தவ்வாவும் நான் அடிக்கடி பயன்படுத்துவது. அது தான் எல்லாவிதமான சமையலுக்கும் பயன் படுத்துவேன். புதுசாவாங்கும் அலுமினியசட்டிகள் ரொம்ப பிடிக்கும்.

சின்ன சின்ன குட்டியான ஃபுட் கன்டெயினர்கள் ஜார் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

8. உங்க கிச்சனில் நடந்த நீங்க அடிக்கடி நினைத்து சிரிக்கும் சம்பவம் என்ன ? (ஏஞ்சல்)

- கிச்சனில் சீரியஸாக வேலை செய்வேன் அத‌னால் சிரிக்கும் படியாக நடந்த சம்பவம் எதுவும் ஞாபகம் வரவில்லை.

சிரித்த சம்பவத்தை விட பக் பக் சம்பவம் தான் கொஞ்சம் அதிகம், ஆபிஸ் போகிற அவசரத்தில் செய்வதால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அடுப்ப ஆஃப் பண்ணேனா இல்லையா என்று பயம் பட படப்பு இருக்கும்.

9. ஒரு நாள் எதிர் பாராத விதமா உங்க சமையல் ரொம்ப சொதப்பிடுச்சு. உங்க வீட்டுக்கு அன்னைக்குன்னு அறுசுவை தோழி ஒருவர் வந்திருக்காங்க. எப்படி இருக்கும் உங்களுக்கு? என்ன பண்ணுவீங்க? எப்படி சமாளிப்பீங்க?

- இதுவரை விருந்தினருக்கு சொதப்பியது இல்லை. அப்படி சாப்பாடு சொதப்பி விட்டது என்றால் அப்படியே அதை ஓரங்கட்டி விட்டு வேறு ஏதாவது சுலபமாக முடியக்கூடிய சமையலை செய்து சமாளித்து விடுவேன்.

10. அறுசுவையில் உங்கள் சமையல் தவிர நீங்க விரும்பி சமைக்கும் மற்றவர் சமையல் எது? யாருடையது? எதனால்?

- ஜேமாமி, தளிகா, விஜி சமையல் ஜேமாமி கை தேர்ந்த அனுபவசாலி ஆகையால் அவர்களின் சமையல் ரொம்ப பிடிக்கும். எப்பவாவது ஒரு சேன்ஞ்க்கு இவர்களுடைய சமையலை செய்வேன். மற்றவர்கள் சமையலும் பிடிக்கும்.

தளிகாவின் நான் வெஜ் கேரள சமையல் மற்றும் விஜியின் வெஜ் கேரள சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கேள்விகள் அனுப்பிய‌ தோழிகள் வாணி, ஏஞ்சல், ரேவ்ஸ், நிகிலா அனைவருக்கும் மனமார்ந்த‌ நன்றிகள். உங்கள் உதவியின்றி இதை என்னால் செய்திருக்க‌ இயலாது. கேள்விகளை படித்து பொறுமையாக‌ எங்களுக்காக‌ பதிலளித்த‌ அன்புக்குறிய‌ தோழி ஜலீலாக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் மீண்டும் நன்றி :)

புதுமுகங்களுக்காக‌ ஜலீலாவின் சமையல் குறிப்புகளின் பட்டியல் இங்கே:

http://www.arusuvai.com/tamil/expert/3475

சமைத்து மறக்காமல் உங்கள் பின்னூட்டங்கள் அறுசுவையில் பதியுங்கள். கேள்வி பதில்களை படிப்பதோடு நிறுத்திவிடாமல் ஜலீலா குறிப்பில் நீங்கள் செய்து அசத்திய‌ குறிப்பு எது, அடிக்கடி விரும்பி செய்யும் குறிப்பு எது என‌ இங்கே தெரிவியுங்கள், மற்றவர்களும் செய்து பார்க்க‌ இது உதவும். :)

மீண்டும் ஒரு பிரபலத்தின் கேள்வி பதில்களோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.

5
Average: 5 (12 votes)

Comments

நானும் நீண்ட‌ இடைவெளிக்கு பின் வர‌ உங்கள் எழுத்து காரணம் ஆனது. நல்ல‌ தொகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.. ;) வாழ்த்துக்கள்.ஜலீலா அவர்களின் சமையல் நிறைய‌ செய்தது உண்டு.. குறிப்பாக‌ பிரியாணி ஐட்டம்.. நன்றீ ஜலீலா.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வனி,

நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

ஜலீலா அவர்களது குறிப்பு அத்தனையும் முத்து .
எனக்கு அசைவம் சமைக்க வேண்டுமெனில் அவசியம் இவங்க குறிப்பை பார்ப்பது உண்டு.
ஜலீலாவின் பிரியாணி -சென்னை,மட்டன்,கல்யாண பிரியாணி,பகாறா கானா ,செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்,
மருந்து குறிப்புகள் என்னுடைய பர்சனல் favorites ..சோம்பு காபி,வேப்பிலை இஞ்சி சாறு ,லெமன் டீ,சுக்கு பால்,பூண்டு பால்,பூண்டு லேகியம்,சுக்கு காபி,குழந்தைகளின் டானிக்,இஞ்சி சாறு ,சாப்ரான் பால் ,சுக்கு மிளகு பால் ,மிளகு கஷாயம்,மிளகு பால் .

இவற்றால் நிறைய பயன் அடைந்து இருக்கிறேன்.
மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.நன்றி.
(இன்னும் நிறைய குறிப்புகள் பழைய விருப்பபட்டியலில் இருந்தது.இப்போதைக்கு ஞாபகம் வந்தது மட்டும்)

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான யோசனை. கேள்விகளை அறுசுவை உறுப்பினர்களிடமிருந்தே பெற்று அவர்களையும் பங்கேற்க வைத்த விதம் அருமை. கேள்விக் கணைகளைத் தொடுத்த நட்புகளுக்கு நன்றி.

கலக்குங்க வனி. அடுத்த நேர்காணல் யாரென்கிற ஆவலோடு இடுகையைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அருமையான புதுமையான முயற்சி வனி .வாழ்த்துக்கள் உங்களுக்கும் அழகிய பதில்களளித்த ஜலீக்கும் .வலைப்பூவில் எனக்கு ஜலீ முதலில் அறிமுகமானவங்க .நான் வலைப்பூ ஆரம்பிக்கும் முன்னமே இவங்க ப்ளாகில் குறிப்புக்கள் வாசித்து செஞ்சும் பார்ப்பேன் .
எனக்கு தேவையான நேரத்தில் பல ஹெல்த் டிப்ஸ் குக்கிங் டிப்ஸ்எல்லாம் ஜலீ மூலமாக கற்றுக்கொண்டேன் ..ஜலீயின் சமையல் குறிப்புக்கள் அப்படியே எங்கப்பாவின் சமையலை டேஸ்ட் பண்ற மாதிரி இருக்கும்

/அடுப்ப ஆஃப் பண்ணேனா இல்லையா//

குருவே வணக்கம் :))))))))))) இந்த விஷயத்தில் உங்க சிஷ்யை நான் எத்தனை தடவை கோயிலில் உக்கார்ந்திருக்கும்போது பாதி சர்விஸ்ல கணவரை வீட்டுக்கு அனுப்பி செக் பண்ணியிருக்கேன் தெரியுமா :)

≧◉◡◉≦
ஜலீலா சமையலில் நான் அடிக்கடி செய்வது மட்டன் எலும்பு சூப் ,நெல்லிக்கா சாதம், அகர் அகர் ஜெல்லி ,உளுந்து வடை ,சூப் வெரைட்டிஸ் ,வரகரிசி பொங்கல்

அன்பு வனி
எதிர்பார்த்தபடியே பதிவு நல்ல‌ தொகுப்பா வந்திருக்கு.
பாராட்டுக்கள்.:)

அன்பு ஜலீலா
உங்கள் மெனுவுக்கு மிக்க‌ நன்றி. நான் செய்து பார்த்து அசத்திடுறேன்.:))
பின்னூட்டங்கள் நம்மை உற்சாகபடுத்துவது உண்மையே.

உங்களோட‌ வெஜ் பிரியாணி எங்க‌ வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆட்டு ஈரல் க்ரேவியும் சூப்பரா இருக்கும். மூவர்ண‌ நட்ஸ் கடல்பாசி செய்யணும்னு விருப்பபட்டியலில் போட்டிருக்கிறேன்.

அறுசுவைக்கு தான் மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல‌ தோணுது.

அன்புள்ள அறுசுவை தோழிகளே
அனைவரும் நலமா?

வனி மெயில் அனுப்பிய போது என்னால் உடனே பதில் போட முடியல.
இது வரை அறுசுவையில் யாரும் குறிப்பு கேட்டாலோ , அல்லது டிப்ஸ் கேட்டாலோ உடனே உடனே பதில் போட்டு பழக்கம் , வனி மெயில் அனுப்பி என்னால் பதில் போட முடியலையேன்னு வருத்தமாக இருந்தது.
இன்னும் நிறைய விபங்கள் எழுதலாம் என்று தான் லேட்ஆச்சி நேரமின்மையால் பதில் போட்டே ஆகனும் என்று சிம்பிளாக எழுதி இருக்கேன்.

உடனே வரும் என்று நான் எதிர்ப்பார்க்க வில்லை லிங்கை பார்த்ததும் பெரிய இன்ப அதிர்சி..

இங்கு என் குறிப்பை செய்து பார்த்து கொண்டுள்ள அனைவருக்கும் மிக்க நன்றி.

இங்கு கிழே அல்லது நம்ம முகநூல் அறுசுவை குரூப்பில் பகிர்ந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

எனக்கு பிடித்த அறுசுவை தோழிகள் சமையல் லிஸ்ட் நிறைய இருக்கு
அதிரா
மனோகரி அக்கா குறிப்புகள்
செல்வி அக்காவின் சேலம் மீன் குழம்பு

ஸாதிகா அக்கா குறிப்புகள்

வனி யில் குறிப்பிகள்
அப்சரா
அஸ்மாவின் குறிப்புகள்
மனோ அக்கா கேக் ரெசிபியின் விளக்கங்கள்
ஆசியாவின் குறிப்புகள்

இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

( அனைவருக்கும் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
தோழிகள் நேரம் ஒதுக்கி இங்கு குறிப்பு கொடுக்கிறார்கள். அதை செய்து பார்த்து பாராட்டை பெற்றவர்கள் கண்டிப்பாக இங்கு கருத்து தெரிவிக்க மறந்து விடாதீர்கள்/

கருத்து தெரிவித்த இமா, கவிதா, நிகிலா ஏஞ்சலின் க்கு மிக்க நன்றி

கேள்விகளை தொகுத்த தோழிகளுக்கும் இப்படி ஒரு பதிவை அறிமுக படுத்திய வனிக்கும் மிக்க நன்றி.

Jaleelakamal

என் முதல் நன்றி பாபு தம்பிக்கு தான்

எனக்கு தமிழ் டைப்பிங் கும் தெரியாது, தப்பும் தவறுமாக தான் குறிப்புகளை அனுப்பினேன். ஆரம்பத்தில் பாபு தான் சரி செய்து போட்டார். போக போக நானே சரி செய்து கொண்டேன் . அவர் அன்று கொஞ்சம் சிரமம் பார்க்காமல் சரி செய்து போடாமல் இருந்திருந்தால் என் குறிப்புகள் இந்த அளவுக்கு வந்து இருக்காது.
அதை நான் இங்க தான் கற்று கொண்டேன்.இப்ப கீபோர்ட பார்க்கமா வேகமாக அடிக்கும் அளவுக்கு தேறியாச்சு.

என் திறமையை வெளிகொணர்ந்த பாபுக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு
என்றும் உங்கள்

ஜலீலாக்கா

Jaleelakamal

அருமையான‌ தொகுப்புக்கு எனது வாழ்த்துக்கள் வனி. ஜலீலா அம்மாவின் சமையலைப் பற்றி அறிந்த‌ எங்களுக்கு அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக‌ இந்த‌ தொகுப்பு அமைந்துள்ளது. நான் அவர்களின் குறிப்பில் குபூஸ், ரசமலாய் அடிக்கடி செய்வேன். அடுத்த‌ பிரபலத்தினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மீண்டும் எனது வாழ்த்துக்கள் வனி...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி இதுபோல் யோசிக்க உங்களாலதான் முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஜலீலாம்மா உங்கள் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் நான்வெஜ்நா உங்க குறிப்புகள் அடிக்கடி பார்ப்பேன். கடல்பாசி ரெசிபிஸ் லாம் உங்க குறிப்பு பார்த்துத்தான் அப்படி இருக்கறதே தெரியும். நீங்கள் மேலும் பல குறிப்புகள் கொடுக்க வேண்டும்.கேள்விகளும் பதில்களும் அருமையாக உள்ளது.

Be simple be sample

வனி உங்கள் முயர்ச்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் :)
அனைவரின் கேள்விகளுக்கும் ஜலீலா அவர்கள் பதில்கள் அருமையாக கொடுத்திருக்காங்க வாழ்த்துக்கள்.
உங்கள் குறிப்புகள் செய்வதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும் நானும் நிறைய குறிப்புகள் செய்து பார்த்திருக்கிறேன் அசைவ குறிப்புகள் அருமையாக இருக்கும். சுவையான குறிப்புகளை கொடுத்த தங்களுக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இரண்டு நாட்கள் கழித்து இன்றுதான் அறுசுவையை பார்வையிட முடிந்தது. முதலில் கண்ணில் பட்டது இந்த வலைப்பதிவுதான். தலைப்பு அப்படி.. :-) நல்லதொரு முயற்சியை மேற்கொண்டுள்ள சகோதரி வனிதா அவர்களுக்கு எனது நன்றிகள். இது மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜலிலா அக்காவைப் பற்றி நான் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டும். அறுசுவையின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய ஒரு காலக்கட்டத்தில் இவர் அறுசுவையில் ஐக்கியமானார். மிக விரைவிலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். தொடக்கத்தில் என்னை "பாபு அண்ணா" என்று அழைத்துக் கொண்டிருந்தார். பின்னர் என்னைவிட சில மாதங்கள் மூத்தவர் என்பது தெரிய வர என்னை தம்பியாக்கிக் கொண்டார். :-)

ஆரம்ப கால குறிப்புகளில் எழுத்துப் பிழைகள் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு தமிழ் சரியாகத் தெரியாது என்பது அர்த்தம் அல்ல. அன்றைக்கு தமிழில் டைப் செய்வது என்பது எளிமையான விசயம் அல்ல. இவர் நீண்ட காலம் வரை அறுசுவையில் உள்ள தமிழ் எழுத்துதவியை பயன்படுத்தியே டைப் செய்து கொண்டிருந்தார். அதில் நான்கைந்து வரிகள் டைப் செய்தபின்னர் அதற்கு கீழே டைப் செய்வது என்ன என்பதே தெரியாது. ஒவ்வொரு முறையும் கர்சஸரை கீழே கொண்டு வந்து பார்க்க வேண்டும். எனக்கு சில நேரங்களில் அதைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தபோதுதான், பெரிய பாராக்கள் அதில் டைப் செய்வது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பது தெரிய வந்தது.

பிரச்சனை தமிழ் டைப் செய்வதில்தான் இருந்தது. விரைவிலேயே அதை சரி செய்துவிட்டார். அவர் எவ்வளவு சிறப்பாக தமிழில் எழுதக்கூடியவர் என்பதற்கு பின்னர் அவர் கொடுத்த பதிவுகளே ஆதாரம்.

ஜலிலா அக்கா என்றதும் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது இவரது கடுமையான உழைப்பு தான். எப்படி இவரால் முடிகின்றது என்று அன்றைக்கு பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கின்றோம். அவர் குறிப்புகள் கொடுக்கும் வேகத்தைப் பார்த்தால் 24 மணி நேரமும் சமையல் அறையிலேயே இருப்பதுபோல் எண்ணத் தோன்றும். பணியில் இருந்துகொண்டு, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அறுசுவைக்கும் பல மணி நேரங்களை அர்பணிப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர் அளித்த பங்களிப்புகளை எக்காலத்திலும் மறக்க இயலாது. நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அறுசுவையும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

இன்னுமொரு சுவாரசியமான விசயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். என்னுடைய பள்ளித் தோழன் நாஸர், நீண்ட காலம் அரபு நாடு ஒன்றில் சமையல் நிபுணராக பணி புரிந்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் ஒரு சிறிய உணவு விடுதியை திறந்திருந்தான். கிட்டத்திட்ட 25 வருடங்களுக்கு பிறகு நாங்கள் சந்தித்தோம். உரையாடலில் நான் என்ன செய்கின்றேன் என்ற கேள்வி வந்தபோது, அறுசுவை டாட் காம் பணிதான் என்றேன்.. நான் முடிப்பதற்குள்ளே "அறுசுவை டாட் காமா.. ஓ.. நல்லா தெரியுமே.. ஜலிலா நடத்துறாங்களே.. அதுதானே.. அதிலத்தான் நீ ஒர்க் பண்றியா..? "

me: அவ்வ்வ்வ்வ்வ்

ஜலீலா, அறுசுவையில் உங்கள் பகிர்வுகள்,செல்வி அக்கா,மனோ அக்கா, மனோகரி மேடம் இவர்களைப் பார்த்து தான் எனக்கும் குறிப்புகள் கொடுக்க ஆர்வம் வந்தது.நல்ல கேள்விகள், அருமையான பதில்கள்.தொடர்ந்து அசத்த நல்வாழ்த்துக்கள்.
தம்பி பாபு தமிழ் டைப்பிங் சொல்லி தந்து என்னையும் இங்கு குறிப்பு கொடுக்க உற்சாகப்படுத்தியதை எப்பொழுதும் மறக்க மாட்டேன்.நெஞ்சார்ந்த நன்றிகள் பல.அறுசுவை மூலம் ஒரு நல்ல நட்பு வட்டம் உருவாகியதையும் எங்ஙனம் மறப்பேன்.
ஸாதிகா,அதிரா, விஜி,வானதி, இமா, தளிகா,செய்யது கதீஜா,கீதா ஆச்சல், கவி சிவா,ஜே மாமி,சீதாலஷ்மி அக்கா, வாணியின் சிரியா தொடர்,அறுசுவை டீம் பாப்பியுடன் பழகியது இப்படி சொல்லிட்டே போகலாம்.அப்புறம் இது பின்னூட்டமாக இல்லாமல் பதிவாக போய்விடக் கூடும்.மொத்தத்தில் இப்பகிர்வு கண்டு மிக்க மகிழ்ச்சி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அனைவருக்கும் ஒரு ஹைய்
நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பகால தோழிகலை பார்பது ரொம்ப மகிழ்சி
பாபு அண்ணன் சொல்வது போல் அது ஒர்
பொற்காலம்
ஜலிலாவின் முந்திரி பாயாசம் அடிக்கடி செய்வேன்
ஜலிலாவின் பதிவுகளில் அன்பும் அக்கரையும் தெரியும்
வாழ்துக்கள் ஜலிலா . வனிதாவிக்கு எனது அன்பான
நன்றி.
பல சமயல் தளங்கல் வரலாம் .ஆரம்பகால அறுசுவையை என்றும் மறக்க முடியாது.
Parveen

அன்பு வனி,

அருமையான தொகுப்பு.

ஜலீலாவோட குறிப்புகளில் நிறைய செய்து பார்த்திருக்கிறேன். பஹாரா கானா, குபூஸ் ரொட்டி, இதெல்லாம் என்னோட ஃபேவரைட்.

அன்புடன்

சீதாலஷ்மி

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்ங்க.
ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் ஜலீலா மேடம் அவர்களின் பதில் நிறைவான பயன்தரும் வகையில்
உள்ளது.

நட்புடன்
குணா

அன்பு ரம்யா.. பல‌ மாதங்களுக்கு பின் உங்களை காண்பது மிகுந்த‌ மகிழ்ச்சியாக‌ இருக்கிறது :) இனி அடிக்கடி வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி கவிதா :) நீங்க‌ சொன்ன‌ குறிப்புகளை நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) நானுமே ஆவலோடு தான் அடுத்தவர் யார் என‌ எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) சில‌ நேரம் வெளிய‌ பாதி வழி போன‌ பின் அடுப்பை ஆஃப் பண்ணனான்னு சந்தேகம் வந்து திரும்ப‌ வந்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேள்விகள் தந்தமைக்கு முதல் நன்றி :) உங்களுடைய‌ ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் இங்கே பதிவிட‌ வேண்டும் என்பது என் நீண்ட‌ நாள் ஆசை. அது இப்படி ஒரு பகுதியில் நடந்தது இன்னும் மகிழ்ச்சியாக‌ இருக்கிறது.எவ்வளவு பிசி நீங்கன்னு எனக்கு தெரியும்... அவ்வளவு வேலைக்கு நடுவில் எங்கள் கேள்விகளுக்கு பதிலளித்தது அளவில்லா மகிழ்ச்சி. மீண்டும் எங்கள் அனைவர் சார்பாகவும் நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் மிகுந்த‌ ஆவலோடு அடுத்த‌ பதிலை எதிர் பார்த்திருக்கிறேன் சுமி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேள்விகளுக்கு ஒருக்கா நன்றி சொல்லிகிறேன் சாமி ;) கருத்துக்கு அடுத்தாப்பல‌ நன்றி சொல்லிக்கிறேன் சாமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் எல்லோரும் தந்த‌ நம்பிக்கையும் ஒத்துழைப்பும் தானே நான் செய்ய‌ காரணம்... எல்லோருக்கும் நன்றி சொல்லி தள்ளி வைக்க‌ முடியாது தான்... ஆனாலும் நன்றி சுவா. இதே போல‌ எப்போதும் எனக்கு பக்கபலமாக‌ என் தோழிகள் நீங்கள் இருக்க‌ வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடைசியில‌ சில‌ வரிகளை படிச்சதும் முதல்ல‌ படிச்சதெல்லாம் மறந்து போச்சு. அவ்வ்வ்வ் ;) ஆனாலும் உங்க‌ பதிவு எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி தந்திருக்கு. நிச்சயம் ஜலீலாவுக்கும் மிகுந்த‌ மகிழ்ச்சியா இருந்திருக்கும். நீங்க‌ இப்படி ஒரு ப்ளாக் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தரலன்னா இந்த‌ ஆசைகள் எல்லாம் கனவா தான் இருந்திருக்கும். தேன்க்ஸ் சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சேன்.... நம்ம‌ அண்ணாக்கு தேன்க்ஸ் எல்லாம் நோன்னு விட்டுட்டேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரியா தொடரை நான் எழுத‌ காரணமா இருந்தவங்கல்ல‌ நீங்களும் ஜலீலாவும் அடக்கம் :) உங்கள் பதிவை இந்த‌ பகுதியில் கண்டதில் எனக்கு மிகுந்த‌ மகிழ்ச்சி :) நன்றி ஆசியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா இருக்கீங்களா?? முந்திரி பாயாசத்தை நானும் செய்து பார்க்கணும் :) மிக்க‌ நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... என் கண்ணை என்னாலயே நம்ப‌ முடியலயே ;) உங்களை நான் ரொம்ப‌ மிஸ் பண்ணேன் சீதா. என் பகிர்வுகளில் என்னை ஊக்கப்படுத்தும் நட்புகளில் முதன்மையானவர் நீங்க‌ தான். என்னைக்கும் நான் உங்க‌ சிஷ்யப்புள்ள‌ தான். நன்றி சீதாக்கு சொல்ன‌ எனக்கு வாயே (சாரி கையே) வராது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா