ரோஸ் மில்க்

தேதி: February 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் - 2 லிட்டர்
சீனி - தேவையான அளவு
பால் பவுடர் - 150 கிராம்
ரோஸ் மில்க் - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
கடல்பாசி - 10 கிராம்
பாதம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
முந்திரி - 50 கிராம்
பச்சை கலர்,ரோஸ் கலர்,கடல் பாசிக்கு - தேவையான அளவு


 

முதலில் கடல் பாசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சிக்கொள்ளவும்.
கடல் பாசி முழுவதும் கரைந்து பதம் வந்ததும் இறக்கி 3 தனிதனியான தட்டில் ஊற்றி கலரை சேர்த்து நன்கு உறைய விடவும்.
ஒரு தட்டில் மட்டும் கலர் ஊற்றாமல் வெள்ளை நிறமாகவே இருக்கட்டும்
பின் பாலை நன்கு காய்ச்சி சிறிது பாலை தனியாக எடுத்து அதில் பால் பவுடரை கரைத்து பாலில் ஊற்றி நன்கு கலக்கவும்.பின் சீனி சேர்த்து நன்கு சீனி முழுவதும் கரைந்தவுடன் ரோஸ்கலர் சேர்த்து கரைக்கவும்.
பாதம்,பிஸ்தாவை தோலை நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாதி முந்திரியை மிக்ஸியில் பட்டு போல் அரைக்கவும்.மீதியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பின் பால் கலவையில் நறுக்கியவற்றை சேர்த்து எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
கடல் பாசி உறைந்ததும் கத்தியை கொண்டு பொடி பொடியாக நன்கு கட் பண்ணவும்.
பின் இதையும் பால் கலவையுடன் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து க்ளாஸ்களில் ஊற்றி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்