அனைவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்

மகிழ்ச்சி செய்தி தோழிகளே ...இது எனக்கு இரண்டாவது குழந்தை எனக்கு இன்று 34 நாள் positive result கிடைத்து விட்டது . அனால் கடுமையான வயிற்று வலி உள்ளது period pain போன்று . இது இருபது சகஜம் என்று எனக்கு தெரியும் ....ஆனால் தொடர்ந்து வலிக்கும என்ன ? தொடர்ந்து period pain போன்று வலிபதால் வேதனையாக உள்ளது . மருத்துவமனை சென்று check பண்ணிக்கலாம்னு இருக்கேன் . கைவைத்தியம் ஏதேனும் இருந்தா சொல்லுங்க ....

எல்லாருக்கும் சொல்லிக்குறேன் இன்னைக்கு மருத்துவ மனைக்கு சென்றேன் டாக்டர் கன்பொர்ம் பண்ணிடாங்க..கடவுளுக்கு நன்றி.. 45 நாட்களுக்கு scan எடுக்க வர சொல்லிருகங்க..

ரொம்ப சந்தோஷம் பா உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. உடம்ப பார்த்துக்கோங்க, take care ....

Enakku kalyanam mudinthu 2 varudam mudiya poguthu first pen kulanthai piranthu 5, days LA iranthu vittathu hippo. 6,month aaguthu 2 month aha hospital LA kamithu mathirai sapiduran peeriyad vanthu 20 days aaguthu intha time nikkuma nikkathanu bayama irukku. Ippave ethavathu arikuri theriuma pls pathilpath il solluga

உங்கள் மன வேதனையை புரிந்து கொள்கிறேன்.
அதே குழந்தை மறுபடி விரைவில் கிடைக்கும்.கவலைப்படாமல் இருங்கள்.
20 நாட்கள் என்றால் கரு உருவாகியிருந்தால் 1 வாரத்துக்கும் உட்பட்டுத்தானே இருக்கும். அவ்வளவாக அறிகுறிகள் காட்டாது.பொறுமையா ரிலாக்ஸ் ஆ மனதை வச்சிருங்கோ.நல்லது தன்னால நடக்கும்

மெர்சி மனதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். அதேயே நெனைச்சுட்டு இருந்தா அதுக்குள்ளேயே நம்ம போயிடுறோம். 20 நாட்கள் தானே ஆகுது உன்னும் நாட்கள் இருக்கிறது.மனதை கடவுளிடம் செலுத்துங்கள். வேறு இடத்தில மனம் சென்றால் நடப்பது நன்றாகவே நடக்கும். நானும் எவ்வளவு கவலை பட்டேன் நடப்தேல்லாம் நன்மைக்கே...

I very happy congrats

எனக்கு 45days pregnancy அதிகாமான பசி மற்றும் நாக்கு செத்து பொய் கேட்குது ருசியா சாப்பிடனும் போல இருக்கு. அடிக்கடி யுரின் போக மாற்றேன் வாந்தி இல ....குமட்டல் மட்டும் அடிக்கடி உள்ளது. வயிற்று வலி ஓறு நாள் இருக்கும் ஒரு நாள் இல்லை. நேத்து மட்டன் சாப்டு வயிறு மந்தமா இருக்கு. அதுக்கு என்ன பண்ணனும் நானு ?

முதலில் வாழ்த்துக்கள்.

குட்டிக் குட்டி விஷயங்களுக்கெல்லாம் ஏதாச்சும் பண்ணியே ஆகணும் என்கிறது இல்லை. அப்படி ஆரம்பிச்சா இதே வேலையாப் போகும் தினமும். நிறைய அசௌகரியங்கள் 3 மணி நேரமோ ஒரு நாளோ கழிச்சு தானாவே சரியாகிரும். இப்போ கூடுமான வரை கைமருந்துகளைத் தவிர்க்கப் பாருங்கள். உங்களுக்கு இப்போ மாமிசம் ஒத்துக்காத மாதிரி இருந்தால் கொஞ்ச நாளைக்கு அதைத் தவிர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

நான் கருவுற்று இன்றோடு 48 நாட்கள் ஆகின்றது. 15 நாட்களாக மேல் வயிற்றுவலி நின்ற பாடில்லை. ஏன் என்று பார்த்தால் பசி பசி பசி 24 மணி நேரமமும் பசி...பசி எடுபதால் மேல் வயிறு வலிக்க ஆரம்பித்து விடுகிறது நன்றாக தூங்கி நாட்கள் பல. மருத்துவமனை சென்றேன் அவர்கள் gastric என்று கூறுகிறார்கள்.மருந்து எதும் தரவில்லை. இப்போது எனக்கு தூக்கம் இல்லை சாப்பிடும் சாப்பாடு போதவில்லை சாப்பிட்டால் உடனே வாந்தி வருகிறது வாந்தி எடுத்தும் சாப்புட்டு கொண்டு தான் இருக்கிறது. 24 மணி நேரம் எதையாவது பொரித்து கொண்டே இருப்பாதால் தாடை வலி வேற சேர்ந்து கொண்டது.இப்போது பசி உணர்வு அடக்க இயலுமா இந்த பசி வயிற்று வலியை என்னை உயிரை எடுக்கிறது. இரவில் புரண்டு புரண்டு படுத்து கவுந்து அடித்து படுத்து கொள்கிறேன். எதையாவது சாப்பிட்டு படுத்து கொள்கிறேன். அடுத்த 5 நிமிடத்தில் வயிறுவலி திரும்ப எதுனா சாப்பிடனும் திரும்ப அதே சுழர்ச்யில் நேற்று சிவராத்திரி கழிந்தது.. பசி எடுத்தா பரவா இல்லை வாந்தி வந்த பரவா இல்லை இந்த மேல் வயிறு வலிக்க எதுனா சொல்லுங்க தோழிகளே...

Congrats akka.hospital poi check panitu solunga

மேலும் சில பதிவுகள்