அனைவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்

மகிழ்ச்சி செய்தி தோழிகளே ...இது எனக்கு இரண்டாவது குழந்தை எனக்கு இன்று 34 நாள் positive result கிடைத்து விட்டது . அனால் கடுமையான வயிற்று வலி உள்ளது period pain போன்று . இது இருபது சகஜம் என்று எனக்கு தெரியும் ....ஆனால் தொடர்ந்து வலிக்கும என்ன ? தொடர்ந்து period pain போன்று வலிபதால் வேதனையாக உள்ளது . மருத்துவமனை சென்று check பண்ணிக்கலாம்னு இருக்கேன் . கைவைத்தியம் ஏதேனும் இருந்தா சொல்லுங்க ....

உங்கள் நிலமை புரிகிறது. பசிக்கும் போது பழங்கள் ஜீஸ் னு எடுத்துகோங்க. எனக்கு உங்கள் வயிற்றுவலிக்கு என்ன வழி சொல்லனு தெரில பா. நான் உள்ளாடை அணிந்தால் எனக்கும் மேல் வயிற்றுவலி இருந்துச்சு இப்பா 1வாரமை தான் போட முடியுது அதும் சில நேரம் அசௌகரியமா இருக்கும். உங்கள் ஆடையை தளர்வாக போட்டு பாருங்களேன். நீங்கள் சொல்லியதை படிக்கும் போது படும் பாட்டை நினைத்து கஷ்டமாவும் இருக்கு உள்ள இருக்குர வாலு இப்பவே சேட்டை பயங்கரமா காட்டுதுன்னு சிரிப்பும் வருது...

ஹய்யோ திவ்யா வீட்டில் ஒரு பொருள் விட்ட பாடு இல்லை. ஆனால் பசி மட்டும் அடங்க மாறுது. எங்க கணவர் வந்து ஐயோ அது சூடு இது சாபுட கூடாது சொல்லி சத்தம் போடும் அளவிற்கு தின்னு தொலைகிறேன். 5 நிமிஷம் வயிறாய் காலிய போட்டேன்னு பத்துக்கோ இந்த வயித்து வலி வந்து சொல்ல முடியில. ஆடைகளினால் பிறர்சினை இல்லை என்றே தோனுகிறது.அதற்க்கு ஏற்றார் போல் அணிகிறேன். இப்படி பசி யாருகட்சும் இருந்து இருக்க நு தெரிஞ்சுக்க தான் இங்கு பதிவு செய்தேன்காலையில் சாப்புடு விடுகிறேன் எதட்சும் இரவில் துங்க இயலவில்லை ஒரு கையில் தட்டு தண்ணி பால் பழம் பிஸ்கட் கையில் வாயில் வைத்து கொண்டுதான் தூங்கணும் போல. வயிறும் வாயும் தான் வேலைய பார்க்கட்டும் நம்ம தூங்கணும். இப்படி சொன்ன என் நிலைமை புரியும் என்றே நம்புகிறேன்.

எனக்கும் பசியா தான் இருக்கும் பா.. இந்த அளவுக்கு இல்லை சாப்பிட்டாலும் வயிறு காலியாவே தான் இருக்கு. உள்ள இருக்குற வாலு கொண்டா கொண்டான்னு கேட்குது. என் கணவரிடம் சொன்னால் நல்லா சாப்பிட்டு குண்டாகுன்னு நக்கல் பன்றாங்க. இல்லைன்னா நல்லா சாப்புடுற போல நொருக்கு நொருக்குன்னு கிண்டலும் கேலியும் தான்...

மேலும் சில பதிவுகள்