பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் சமையல் குறிப்பு - படங்களுடன் - 32689 | அறுசுவை


பொட்டெட்டோ சீஸ் பால்ஸ்

வழங்கியவர் : nithyaramesh
தேதி : புதன், 24/02/2016 - 00:15
ஆயத்த நேரம் : 15 நிமிடங்க்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4
3.5
4 votes
Your rating: None

 

 • உருளைக்கிழங்கு - 3
 • வெங்காயம் - 2
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • கேரட் - 1/2 கப் (துருவியது)
 • சீஸ் - 1/2 கப் (துருவியது)
 • கார்ன் - தேவைக்கேற்ப
 • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 • கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
 • எண்ணெய் - பொரிப்பதற்கு
 • உப்பு - தேவைக்கேற்ப
 • ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப

 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.pizza saivathi eappadi

hai friend nan pizza eappadi saivath?

பீட்ஸா

http://www.arusuvai.com/tamil/node/20838
http://www.arusuvai.com/tamil/node/29892
http://www.arusuvai.com/tamil/node/22061
இன்னும் இருக்கு, மேலே சர்ச் பாக்ஸ்ல, பீட்ஸா என்று தட்டி (தமிழில் தட்ட முடியாவிட்டால் இங்கு நான் தட்டி இருப்பதை காப்பி பேஸ்ட் பண்ணுங்க.) தேடுங்க, கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

சீஸ் பால்ஸ்

சூப்பரா இருக்கு நித்யா. ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

nithya sis

பொட்டட்டோ பால்ஸ் ரொம்ப பிடிச்சுருக்கு. செய்து பார்க்கிறேன். நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி

குறிப்பை அழகாக வெளியிட்ட அண்ணா & டீம் க்கு மிக்க நன்றி ..

நன்றி

மிக்க நன்றி இமா மா.செய்து பார்த்து சொல்லுங்கள் ..

நன்றி

நன்றி மெர்சி.செய்து பார்த்து சொல்லுங்கள்..