5 1/2 month babykku pal

en ponnukku 5 1/2 maatham agirathu.weight kuraiva irukka.thaipal tharugiran.3 monthla pasum pal kuduthom othukkala vomit pannita.atha stop pannitom.ippo 4 naatgalaga erumai pal sari paathi thanner kalanthu kudukkirom.indru mattum kuddukkum pothu vomit pannita thodarthu kudukkalama.veetu periyavargal vendam endral ketpathu illai.doctor formula milk venam engirar.saatham vaditha kanchi kudukka solgirar.cold iruthu kondae irukirathu marnthu kuduthalum sari aagavilai.thaipal pothavillai aluthu kondae irukkiral.en kulanthai pasiyal alumpothu ennakkum alugai vanthu vidukirathu.en kulanthaikku entha nerathil enna unavu kudukkalam. cold poga enna seivathu romba manavarutthamaga ullathu pls help pannuga frds

போமுலா குடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொன்னதை என்னால் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.5.1/2மாசக்குழந்தை தாய்ப்பால் போதாமல் அழும்போது பசுப்பாலும் ,எருமைப்பாலும் ,ஆட்டுப்பாலும் கொடுத்து டெஸ்ட் பண்ணிக்கொண்டு இருப்பது நல்லதல்ல்.உடனே இன்னொரு டாக்டரை பாத்துவிட்டு போமுலா குடுக்க தொடங்குங்கள்.

பசுப்பால் முழுச்சத்து உள்ளதுதால் ஆனால் நமக்கு நூறில் ஒரு உணவு பிஞ்சு குழந்தைக்கு அது ஒன்றே உணவாகும்போது மூளை எலும்பு ,இரத்தம்போன்ற விருத்திக்கு ,வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதில் கிடைக்காது.

போமுலா தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்காக முடிந்தளவு தாய்ப்பாலில் உள்ள சத்துக்களை இணைத்து குழந்தைகளுக்கு என்றே தயாரிக்கப்பட்டது.நெட் ல் வந்து உரையாடுகிறீர்கள் ஆனால் எவ்வளவு சீரியசான விசயம் குழந்தையின் உணவு ஒரு டாக்டர் சொன்னது தப்பாயிருக்கும் என்று நினைத்து பாக்கவில்லை.

உடனே பக்கத்தில் உள்ள குழந்தை மருத்துவரை பாருங்கள்

//5 1/2 maatham agirathu.// //thaipal tharugiran.// போதாதே! வெய்ட் எப்படிக் கூடும்!

//pasum pal kuduthom othukkala vomit pannita.// திரும்ப ஆட்டுப் பால் ட்ரை பண்ணுறன் வெளிக்கிடாதைங்க. எனக்கே இப்போ ஒரு வருஷமா பசுப்பால் ஒத்துக்கொள்ளவில்லை. ;( போகும் இடங்களில் காஃபி டீ குடிக்க முடியவில்லை. பல தடவை இடைல சரியாகி இருக்கக் கூடும் என்று நினைத்து ட்ரை பண்ணின ஒவ்வொரு தடவையும் கொடுமையான வயிற்று வலி. ;( குழந்தைக்குச் சொல்லத் தெரியாது. பாவம். வாந்தி எடுப்பதே ஒவ்வாமையின் அறிகுறி என்று எடுத்துக் கொண்டு இந்த ட்ரையல் எல்லாம் விட்டுருங்க.

//erumai pal sari paathi thanner// இது சரியா என்று தெரியவில்லை. எருமைப் பால் பசுப்பாலை விட தடிப்பு என்று நினைக்கிறேன். எருமைத் தயிர் சாப்பிட்டிருக்கிறேன், நல்ல கெட்டியாக இருக்கும். பாதி தண்ணீர் போதாமலிக்கும்.

//indru mattum kuddukkum pothu vomit pannita// இதற்குக் காரணம் பாலாக இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. எருமை சாப்பிட்ட உணவாக இருக்கலாம்; எருமையின் மடி, கறப்பவர் கை, பாத்திரங்கள் (பால் மாறிய அத்தனை பாத்திரங்களும்) சுத்தமாக இருந்தனவா என்பது தெரியாது இல்லையா? கழுவினால் மட்டும் எல்லாம் சுத்தமாகிவிடாது. பால் சுலபத்தில் கிருமிகள் வளரக் கூடிய ஊடகம். பால் கெட்டுப் போக ஆரம்பித்திருந்தது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். பெரும்பாலும் குழந்தையின் பாலைச் சூடு சரியாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்துவிட்டு சுவை பார்க்காமல் கொடுத்து விடுவோம். பால் மட்டுமல்ல குழந்தையின் உணவுகளையும் இப்படித்தான் கொடுக்கிறோம். அது வேண்டாம் என்றால் காரணம் இதுதான் என்று புரிவதில்லை. தாய்ப்பால் & ஃபோம்யுலா கெட்டுப் போகும் ரிஸ்க் குறைவு. டப்பாவில் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கி பாத்திரங்களையும் அவித்து எடுத்தால் போதும்.

//thodarthu kudukkalama.// ஏற்கனவே வெய்ட் கம்மி என்கிறீங்க. வாந்தி இருக்கிறது என்கிறீங்க. உங்களுக்குப் பிடிக்காத, ஒத்துக் கொள்ளாத உணவை இன்னொருவர் உங்களக் கட்டாயப்படுத்திக் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பாவம் உங்கள் குழந்தை.

//doctor formula milk venam engirar.// எனக்கும் இது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஒரு வேளை... அது வேண்டாம், திட உணவுகளை ஆரம்பிக்கலாம் என்கிற நோக்கில் சொல்லியிருக்கக் கூடுமோ!

//saatham vaditha kanchi kudukka solgirar.// கொடுங்க. அது வாந்தி எடுத்ததால் டீஹைட்ரேஷன் ஆகாமலிருக்கட்டும் என்று கொடுக்கச் சொல்லி இருக்கலாம். கஞ்சி ஒரு முழுமையான உணவாகாது. வெறும்.. வயிற்றை நிரப்பும் உணவு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். மாப்பொருள் மட்டும்தான் கிடைக்கும். வேறு எதுவும் கொடுக்காதீங்க என்று டாக்டர் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

//cold iruthu kondae irukirathu// ம். குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி போதாமலிருக்கலாம். //thaipal pothavillai aluthu kondae irukkiral.// இத்தனை காலமும் தனியே தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கிறீர்களா? அது போதாதுதான். மெதுவே திட ஆகாரங்களை அறிமுகம் செய்ய ஆரம்பியுங்கள்.

‍- இமா க்றிஸ்

en babyku 8 months aagudhu enakum babyku 3month nadakkum podhu health problem aaiduchu appona hospitala irunthen appola irunthu enga amma babyku mattupaal 1/4 cup milkku 3/4 cup water add panni light suger add panni koduthudanga athu sernthukuchi. ippo 1cup milkku 1/4cup water add panren.

குழந்தைக்கு ஒரு வருஷம் வரை தாய் பால் ஆட்டு பால் பழச்சாறு பசும்பால் கொடுக்கலாம்
வாமிட் பண்ணும் குழந்தைக்கு சதக்குப்பை விதையை தண்ணீாில் கொதிக்க வைத்து கொஞ்சம் சா்க்கரை கலந்து வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கிற மிதமான சூட்டில் கொடுக்கலாம்
குழந்தைக்குஜீரண டானிக்

ப்ரியங்களுடன்
ஜெய்பு

நீங்கள் தாய்ப்பால் நிறையச் சுரக்க‌ அதற்கான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சில‌ குழந்தைகளுக்குப் பால் ஒத்துக்கொள்ளாததை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்குப் பதிலாக‌ லாக்டோஜன் என்று நினைக்கிறேன் அதைக் கொடுப்பார்கள். நீங்கள் அதைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.
சுக்குக் காப்பி தரமானது உங்கள் ஊர்ப்பக்கம் கிடைக்கிறது.அதில்
வேறு நாட்டு மருந்துகளும் பனஞ்சீனியும் கலந்து உள்ளது. அதைக்
கொதிக்கவைத்து குழந்தை குடிக்கும் பாலில் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவையுங்கள். அது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதில் உள்ள‌ நாட்டு மருந்துகள் பால் நன்கு சீரணமாகவும் வயிற்றில் வாய்வு சேராமலும் பாலின் குற்றங்களையும்
நீக்கி விடும். அதிக‌ காரம் இருக்காது, நான் குடித்துப் பார்த்துஇருக்கிறேன், ஒவ்வொரு முறையும் குழந்தை குடிக்கும் பாலை
முதலில் நீங்கள் சுவை,சூடு இவை சரியாக உள்ளதா என்று பார்க்கவும்
சிலர் கேழ்வரகில் பால் எடுத்து அதில் கஞ்சி காய்ச்சிக்
கொடுப்பார்கள்.சாதாரணப் பாலே சரியாக‌ சீரணம் ஆகாமல் இருக்கும் போது ஆட்டுப் பாலும் எருமைப் பாலும் சீரணம் ஆகுமா
என்று தெரியவில்லை.
என் தோழியின் பேத்தி 5 ஆம் மாதமே பாலை குடிக்க‌ மறுத்து
கஞ்சி தான் குடிக்கிறாள். பசும் பாலைக் காய்ச்சும் போது நீங்கள்
சேர்க்கும் தண்ணீரும் ஒரு காரணமாக‌ அமையலாம். என் அனுபவம்.
காரணம் ஈரோடு என் அம்மா ஊர் தான். சாயத் தண்ணீர் அனுபவம்.
நாட்டு மருத்துவம் நிகழ்ச்சியைப் பாருங்கள். யூ டுயூப்பிலும் பாருங்கள்
வீட்டிலேயே செய்யக்கூடிய‌ மருந்துகளை அதில் காணலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்