வரகரிசி உளுந்தங்கஞ்சி சமையல் குறிப்பு - படங்களுடன் - 32725 | அறுசுவை


வரகரிசி உளுந்தங்கஞ்சி

வழங்கியவர் : Nikila
தேதி : புதன், 09/03/2016 - 01:09
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்
3.833335
6 votes
Your rating: None

 

  • வரகரிசி‍‍‍‍‍‍ - 100 கிராம்
  • தோலுடன் கூடிய‌ உளுத்தம்பருப்பு - 25 கிராம்
  • வெந்தயம் - கால் ஸ்பூன்
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • முழுப்பூண்டு - 2
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • உப்பு - தேவைக்கேற்ப

 

தேவையான‌ப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.

சற்று நேரம் ஆகி பாதி வெந்ததும் வரகரிசியை கல் நீக்கி சேர்க்கவும்.

அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

கஞ்சியாக‌ வைத்து எள்ளுத்துவையல் வைத்து சாப்பிடலாம். அல்லது சாதம் போல‌ வைத்து மீன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.சகோ

இந்தக் குறிப்பு இன்றைய தினமலரில் வந்திருக்கிறது . யாரோ போட்ருக்காங்க. அச்சு மாறாமல் வந்திருக்கிறது.
எனது பாட்டி அரிசியில் பண்ணுவாங்க. நான் வரகரிசியில் செய்து பார்த்தேன் .

senju papom

senju papom