வாழ்வும் வளமும் | அறுசுவை வலைப்பதிவு
blog image

வாழ்வும் வளமும்

blog image

எல்லோருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழவே ஆசை. இருப்பினும் பலருக்கு அது வெகு தூரமாகவே இருக்கிறது.
சிலருக்கு பிரச்சனைகள், துன்பங்களுக்குரிய நியாயமான காரணங்கள் இருந்தாலும் பலர் தாமே சேகரித்து மீளத் தெரியாமல் சிக்கி உழல்கிறார்கள்.

அதற்கான பல காரணங்களில் ஒன்று மகிழச்சியும் நிம்மதியும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதும்,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மை சார்ந்தவர்கள் கெடுக்கிறார்கள் என நினைப்பதும் ஒரு பிரதான காரணம்.

இந்த மாயையில் சுலபமாக மாட்டிக்கொண்டு தங்கள் நிம்மதியை தாமே கெடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களது தலையாய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால் மாமியார் சரியில்லை, என் குடும்பத்தை மதிப்பதில்லை, நான் எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும் எனக்கு தேவையான மதிப்பு அளிப்பதில்லை,
தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள், என்னை குற்றம் சொல்கிறார்கள், எனக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, பெண்களை இந்த சமூகம் ஊதாசீனப்படுத்துகிறது, வீட்டிற்கு தலைமை வகிக்கும் ஆண்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள், வீட்டு வேலைகள் குழந்தைகளை பராமரிப்பதில் எனக்கு யாரும் ஒத்தாசை செய்வதில்லை ஆனால் குறை சொல்வதற்கு முன்னிற்கு நிற்கிறார்கள், என் உடல் நிலையையும் சோர்வையும் ஏறிட்டு பார்ப்பதில்லை என் ஆசைகளை நிராகரிக்கிறார்கள் இவைகள்தாம் நம்மில் அனேகமானவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

ஆனால் இவை எல்லாம் நாம் முன்னெடுக்கும் செயல்களாலும், சிந்தனைகளாலுமே நமக்கு இது பிரச்சனைகளாக விஷ்வரூபம் எடுக்கிறது. குறிப்பாக நம் பெண்கள் அனேகர் இங்கு கூறப்பட்ட அனேகமான பிரச்சனைக்குள்
திக்குமுக்காடுவதற்கு மூல காரணம் பொருளாதார ரீதியிலும், இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல். இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல. மிக மிக குறைந்த வருவாய் வீட்டில் இருந்த படியே கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொழுது போக்காக சிறு கைத்தொழில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வளவு படித்து விட்டு இதை செய்வதா என்று எண்ணக்கூடாது. சரி அதற்கும் நம் சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு செலவாகும் சில பொருட்களையோ காய்கறிகளையோ நாமே தயாரிப்பது மிகச்சிறந்த வழி. இதற்கு கணவர் அதிகம் சம்பாதிக்க அல்லது பிஸ்னஸ் ல் இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்து சிரமப்பட வேண்டும் என்று நினைக்க கூடாது. தனித்து செய்யக்கூடிய
சில பயணங்கள் கொள்வனவுகள் வெளிவேலைகளை நாமே செய்து கொள்வது நமக்கும் குடும்பத்திற்கும் பக்க பலம்.

Blog image

அடுத்து நம் பாதிப் பிரச்சனைகளை தூக்கி முழுங்கி நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை நீக்கும் ஒரு அருமருந்து பொழுது போக்கு. ஆம் சிலர் அவர்கள் இப்படி சொல்லி விட்டார்கள் இவர்கள் இப்பிடி சொன்னார்கள்
ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும். அதன் வளர்ச்சி உங்களோடு பேசும். அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும். சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும். ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.

எல்லாவற்றையும் விட நம் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரிதாக நம்மில் திணிக்க வைக்கும் ஒரு விடயம் நம் புலம்பல்கள் என்பது பலருக்கு தெரியாது. அதாவது கவலைகள் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடைவீர்கள் என்று
சொல்லப்படுவது நோய், மரணங்கள், இழப்புகள் என்பவற்றைத்தான் உங்கள் குடும்பத்தில் நாளாந்தம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல.

இதையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நிம்மதி இழப்பீர்கள். அதாவது உங்களை அறியாமலே மறக்க வேண்டியதையும்
தூக்கி போட்டு கடந்து போக வேண்டியதையும் அநியாயத்திற்கு மீள்பதிவு செய்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு உங்கள் சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அவ்வாறுதான் பேசப் போகிறார்கள். அப்படியாயின் உங்கள் சக நண்பி சொல்கிறார் என் கணவருக்கு எப்போதும் சாப்பாட்டில் குறை சொல்வதே வேலை. எரிச்சலாக வருகிறது என்று கூறுவாராயின் நீங்களும் அதே தலைப்பில் நிச்சயம் இணைந்து கொள்வீர்கள். இவ்வாறான பேச்சுக்கள் ஆரோக்கியம் அற்றவை. உங்கள் கணவர் காது பட அவரைப்பற்றி நல்லதாக அடுத்தவர்களிடம் சொல்லிப்பாருங்கள். ஏன் உங்கள் கணவரை நேரடியாகவே பாராட்டுங்கள் என்ன என்ன நல்ல குணங்கள் உள்ளதாக சொல்கிறீர்களோ அந்த குணங்கள் இல்லாவிட்டாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய நின்மதியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர் யார் குறையையுமே சொல்லிக்காட்டாதீர்கள்.

நம்மிலும் பல குற்றம் குறைகள் இருக்கவே இருக்கும் பதிலுக்கு நம்மை நின்மதி இழக்கச்செய்து விடுவார்கள்.பொது விடயங்கள் பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் பற்றிய பேச்சுக்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் விரும்பி ரசித்து செய்து விட்டு நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். யாரும் நமக்கு உதவ வேண்டும் எதையாவது வழங்க வேண்டும் ஒத்தாசை செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.

Blog image

கிடைப்பதை மாற்ற முடியாததை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின்னும் நண்பர்களை இழப்பதில்லை நாம் மட்டும் இழக்க வேண்டி இருக்கிறதே என்று ஆண் வர்க்கத்தை சாடாதீர்கள்.
அதைவிட சந்தோசமாக குழந்தைகளுடன் கூடி மகிழும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கே அதிகம் தந்திருக்கிறான் என்று மகிழுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின் ஊரையும் குடும்பத்தையும் வளர்ந்த வீட்டையும்
பிரிவதில்லை நம்மை மட்டும் வேரோடு பெயர்க்கிறார்கள் என்று வருந்தக்கூடாது. நமக்கு மாறுபட்ட வாழ்வு மாறுபட்ட இடங்கள் மாறுபட்ட மனிதர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று
ஆனந்தப்படுங்கள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கு செல்வதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் இந்த பிரிவையும் ஏற்றுகொள்ள முடியும். நிறைய ஆண்கள் திருமணத்திற்கு
முன்பே பொருளாதார நிமித்தம் பிரிகிறார்கள்.

இவை எல்லாமே நம்மை நாமே நிம்மதியாக வைக்க உதவும். நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு. பெண்களுக்கான உரிமை
பெண்களிடம்தான் உள்ளது. மீறி நடக்கும் தவறுகளும் கேடுகளும் அசம்பாவிதங்களும் தவறானவர்களால் நடக்கிறது. ஆண்கள் எல்லோரும் ஆதிக்க வாதிகள் கிடையாது. அப்பாவின் தியாகங்களை போற்றியும் கணவனை
குறை சொல்லியும் வாழ்ந்துவிட்டு திரும்பிப்பார்த்தால் கால ஓட்டத்தில் நம் பிள்ளைகள் தங்கள் அப்பாவை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

5
Your rating: None (12 votes)

சுரேக்கா

ரொம்பவே அருமையான ஒரு பதிவு.ஒவ்வொரு வரியும் அருமை.நீங்கள் சொல்வதை போல அடுத்தவர்களிடம் குடும்ப விஷயம் ஏதும் சொல்ல பிடிக்காது எனக்கு.என்னதான் பழகினாலும் அவர்களின் பர்சனல் விஷயங்கள் கேட்பதும் சுத்தமாக பிடிக்காது.வெளியே ஏதும் பிரச்னை என்றால் ஒரு நண்பியிடம் மட்டும் தான் சொல்வதும் கேட்பதும்.எந்த பிரச்னை என்றாலும் பத்து நிமிட பேச்சில் சரி பண்ணி அடுத்த வேலையை பார்க்க வைத்து விடுவார்.அப்படி பல விசயங்களில் தெளிவு கிடைத்திருக்கிறது எனக்கு.
//ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும் .அதன் வளர்ச்சி
உங்களோடு பேசும்.அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும்.சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும்
பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும்.ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.//
உண்மையில் இது எனக்கு நடந்திருக்கிறது.ஏதோ ஒரு வித்தியாசமான சமையலோ, கை வேலையோ,ஓவியமோ ஏதாவது ஒன்றில் மனது ஈடுபட்டு விட்டால் கவலை சுத்தமாக மறந்திடும் எனக்கு.செய்ததை போட்டோ எடுத்து உறவு,நட்புக்களுக்கு அனுப்புவதோ, வாட்ஸப் ப்ரோபைலாகவோ குரூப்பிலோ பகிர்ந்தால் மனது லேசாகி விடும். நிச்சயம் நீங்கள் சொல்லியிருப்பதை போல எதையும் போட்டு குழம்ப தேவை இல்லாமல் அடுத்த வேலையை பார்க்க போய்விட வேண்டும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அக்காவ்....:)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

வாழ்வும் வளமும்

15 நட்சத்திரம் வேணுமெண்டாலும் கொடுப்பேன் இதற்கு. 'பாதி' என்கிறதை இன்னொரு தரம் நிரூபிச்சிருக்கிறீங்கள் சுரேஜினி. :-)

//அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.// இது உண்மை. எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பம், தாயோட பிள்ளைகளும் தகப்பன் தனியவும் பல வருஷம் பிரிஞ்சு இருந்தினம். தகப்பன் சாவுக்கும் போகாத ஒரு பிள்ளை. இப்ப 19 வருஷம் கழிச்சு... 'ஐயோ! அவர் எவ்வளவு நல்லவர். நான்தான் என் சகோதரங்கள்ட சொல்லக் கேட்டு விலத்தி வைச்சுட்டன்,' என்கிறதைக் கேட்க, ஷொக்கா இருந்துது. எத்தனையை இழந்திருக்கினம் என்கிறது இவங்களுக்குத் தெரியவே போறதில்லை. ;( பிள்ளைகள்ட லவ்வை எதிர்த்து காச் மூச்சென்று கத்தி விலக்கி வைச்சுப்போட்டு பேரப் பிள்ளை பிறந்த பிறகு சேர்க்கிற பெற்றோருக்கும் இந்த வசனம் பொருந்தும். துலைஞ்சு போன நாட்கள் திரும்பி வராது நிவர்த்திக்க. கிடைக்கிற வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக வாழத் தெரிஞ்சுகொண்டால் எப்பவும் சந்தோஷம்தான். சந்தோஷம் எங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது.

//எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நின்மதி இழப்பீர்கள்.// இதை இங்க நிறையப் பேர் வாசிக்க வேணும். வாசிச்சு யோசிச்சால் நல்லம். இதை நினைச்சுத்தான் சில நேரம், 'அறுசுவையை 2 நாளைக்கு மூடி வைச்சுட்டுப் போங்கோ,' என்று சிலருக்குச் சொல்லுறனான்.

//நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு.// உண்மை.

//முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நின்மதி கிடைக்கும்.// பெருமையாகவும் இருக்கும்.

//மூல காரணம் பொருளாதார ரீதியிலும் ,இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல்.// ம். //இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல// ஆனால் கட்டாயம் சின்னதாக என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வருவாய் இருக்க வேண்டும். இதைப் பற்றி ஒரு இடுகை எழுத வேணும் என்று ஆரம்பிச்சு, பிறகு சரியாகச் சொல்லாத மாதிரி இருக்க போஸ்ட் பண்ணேல்ல. இப்ப சுரேஜினியின் இடுகை மூலமாக நான் சொல்ல நினைச்சதைச் சொல்லுறன். இலங்கையில திடீர் திடீரென்று ஆண்கள் காணாமல் போகேக்க, தங்களுக்கென்று வேலையோ வருமானமோ இல்லாமல் இருந்த பெண்கள் பெரிதாகக் கஷ்டப்பட்டினம். யாராவது உதவி செய்வாங்கள் தான். ஆனால் இன்னொருவர் உதவி பெற்றுச் சீவிக்கிறது... உள்ளுக்குள்ள குறுகிப் போக வைக்கிற விஷயம். நாட்டுப் பிரச்சினையை விடுவம். விபத்து என்கிறது எங்க எப்ப யாருக்கு வரும் என்று இல்லை. (இந்த இரண்டு விதமான பெண்களையும் என் நெருங்கிய உறவு வட்டத்தில் பார்த்திருக்கிறேன்.) இப்பிடி நினைக்கிறது தப்பில்லை. டெத் இன்ஷ்யூரன்ஸ் எடுத்து வைக்கிறோம். அது போல இதையும் வரும் முன்னே நினைச்சுப் பார்க்க வேணும். எல்லாப் பெண்களும் சின்னனாக என்றாலும் தங்களுக்கு ஒரு வருமானத்திற்கான வழியைத் தேடித் தக்க வைக்க வேணும் என்கிறது என் அபிப்பிராயம்.

arumai

arumaiyana pathivu mam.lifela ordinaarya nadakura visayatha soliirukinga.nama yar pirachanaikkum pogalanalum namala thorathite pala pirachanaigal varugirathu allathu silaper atharkku karanama irukkanga.onumattum solla virumbugiren pengal sathranamana aal kidaiyathu. pen enbaval athitha sakthi padaiththaval.ovvoru pennum vazhkaiyil potruthalukku uriyavargal than.nan penna piranthatharkkaga indha nimidam varai perumaipadukindren.aduththavangaloda valarchiya parthu poramai padravangathan adigam. apdi poramai padama avangaloda muyarchiya partha namalum valaramudium.nama yena panromndratha ipa unarnthal, adutha nimidathil irunthu santhosamaga vazhalam.vazvathu oru vazkai oru muraithan.athil bagamaiyai thavirththu otrumaidudan vazvom.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்

அட்டகாசம் ! சிக்சர் அடிச்சிங்க

/சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல//

மிகவும் உண்மையான விஷயம் .இப்படிப்பட்ட சின்ன விஷயங்கள் தான நம்ம நிம்மதியை கெடுக்கும் ..எனக்கு பொதுவாகவே பிறர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது பிடிக்காது அதேபோலா பொதுவில் உளறிகொட்டிகொண்டிருப்பவர்களுடனும் பழக ரொம்ப யோசிப்பேன் ..
நிம்மதியும் சந்தோஷமும் நம் கையில்தான் இருக்கு அது தெரியாம நிறையபேர் தன கையில் இருப்பதை தொலைச்சிட்டு தேடி அலைவதுதான் வேதனை ..
நமக்கு தெரிந்த விஷயங்கள் சமையல் கைவினைகளில் ஈடுபடும்போது நேரம் போவதே தெரியாது அதை செஞ்சாலே போதும் பலர் வாழ்வு சிறக்கும் ..

அபி

உண்மைதான் அபி .நேரம் பொன்னானது எங்கிறதை கூட என்னால ஏற்றுக்கொள்ள முடியிறதில்ல.அதுக்கும்மேல.எதையுமோ ஒப்பிட முடியாத ஒன்று.
அப்பிடியான நேரத்தை தேவையில்லாத பேச்சுக்கும் சிந்தனைக்கும் உபயோகிச்சு அனியாயம் பண்ணினா அதுல நம்மட நேரம் மட்டுமில்ல நின்மதியும் கரையும்.

அடுத்தவர்கள் பேச்சையும் நடவடிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் நம்மட வாழ்க்கையா நினைச்சு வச்சிருக்க கூடாது .இங்க கேக்கிற கேள்விகள் எல்லாத்திலயும் அடுத்தவர்கள் தான் மேலோங்கி நிக்கிறார்கள்.அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

என்10 மாச குழந்தை இன்னும் சரியாக நடக்க தொடங்கல எழும்பி பொத்து பொத்துன்னு விழறா.எல்லாருமே ஏன் இன்னும் நடக்கல ந்னு கேக்கிறாங்க ? எனக்கு ஒரே கவலையா இருக்கு நானு உக்காந்து அழறேன்.சீக்கிரம் நடக்க செய்ய என்ன செய்யனும் பிளீஸ் சொல்லுங்க??????
இந்த ரேஞ் ல இருக்கு அபி கேள்விகள்.

10 மாச குழந்தை அவசரமா நடக்க பழகி நாசாக்கு நடந்து போய் ஆராய்ச்சி செய்யப்போதோ??? அடுத்தவர்கள் காணுற நேரத்தில எதையாச்சும் பேசியாகணுமே ந்னு பேசினா{ என்னைய பாத்து ஒரு தமிழ் அம்மா கேக்குறா ஏன் இப்பிடி இளைச்சுபோனியே //////] அதை பொருட்படுத்தாமல் போறதை விட்டு பெரிது படுத்துற அளவுக்கு முன்யோசனை வேலை வெட்டி நல்ல பொழுதுபோக்குகள் எதுவும் இல்லாத பெண்களாக இருக்கிறதை பாக்க கவலையா இருக்கு பட் எனக்கு உக்காந்து அழ நேரமில்லை.அதான் எழுதீட்டு போய்ட்டே இருப்பம்னு.

இம்ஸ்

முதல்ல நட்சத்திரத்தை தாங்கோ.{இம்ஸ் 10 நட்சத்திரம் கடன் எழுதி வச்சிருக்கன்}

நீங்கள் சொன்னா பிறகுதான் எனக்கு நின்மதி.உண்மைல எனக்கு இதை இங்க எழுத பயம்.

சார்ந்து வாழுறதையே கடுமையா ஆதரிக்கிறதையும் சூழ்னிலையை விட சடங்கு சம்ரதாயம் முக்கியம் என்றதை கண்மூடித்தனமா நம்ம்புற பெண்களிட்ட இருந்து சில தடவைகள் மூக்குடை பட்டிருக்கிறேன்.

பிரசவமானால் பெண்ணை பெற்ற அம்மா பாத்தே ஆக வேணும் அல்லது மாமியார் வீட்டில் மதிக்க மாட்டார்கள் என்பது ,,,,, மாறாக நானே என்னையும் குழந்தையையும் பாத்துக்கொள்கிறேன் முடிந்தால் நீங்கள் சின்ன சின்ன ஒத்தாசைகள் செய்யுங்கள் முடியாவிட்டால் அது கூட பெரிய விடயம் இல்லை என்று சொல்லும் தைரியம் ,ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கும் பெண்களுக்கே உரிய திறமை,பெற்றோரை ஆழமாக புரிந்துகொண்டு நோகடிக்காத பெண்களுக்கே உரிய இயல்பு எல்லாம் எங்கே சென்று ஒளித்துக்கொள்கிறது இவர்களுக்கெல்லாம் என்று நினைப்பேன்.

யெஸ்ஸ்ஸ்ஸ் வருமானம் அண்ட் பணத்தை மிச்சப்படுத்தும் பொழுது போக்குகள் மிக மிக மிக அவசியம் . வருமானம் என்றது பணம் மட்டுமே என்பது பலரது எண்ணம் .இல்லை அதுதான் தன்னம்பிக்கை,பாதுகாப்பு,கவுரவம்,

இதை அக்கறை கொள்ளாத பட்சத்தில் நமக்கே நம் பெறுமதி குறைவாக தெரியும் அல்லாமல் மற்றவர்கள் மதித்தால் கூட ஊதாசீன படுத்திறமாதிரியே இருக்கும்.

ரேவதி

மிக்க நன்றி ரேவதி \\ pen enbaval athitha sakthi padaiththaval\\இதுவே என் கருத்தும் ,ஆனால் எவ்வளவு திறமை இருந்தாலும் சக்தி இருந்தாலும் அதை உபயோகித்து இடையூறு குடுப்பவர்களை ஊதாசீனப்படுத்திவிட்டு தன் நின்மதியை தக்க வைக்க தன் ஆற்றல்களை பயன்படுத்துவதை விட்டு சொல்லி சொல்லி புலம்புவதில் அக்கறை காட்டுவது நிறைய பெண்களிடமிருந்து வெளிப்படுவதை பார்க்கிறேன்.

அஞ்சு

நிறைய விஷயங்களில உங்களில தெளிவான இந்த போக்கை நான் அவதானிச்சிருக்கன் அஞ்சு.
\\பொதுவில் உளறிகொட்டிகொண்டிருப்பவர்களுடனும் பழக ரொம்ப யோசிப்பேன் //
கண்டிப்பா கொஞ்சம் இடைவெளி விட்டு ஒதுங்கி போயே ஆக வேணும்.அல்லது நம்மட நின்மதிக்கு ஆப்பு வைக்கிறது மட்டுமில்ல எத்தனையோ தெளிவா சிந்திக்கிற ஆக்கள் இந்த புலம்பிற ஆக்களுக்கு இடைவெளி குடுக்காமல் என்ன செய்யிறதுன்னு தெரியாமல் அதை கேட்டு கேட்டு அவர்களை அறியாமலே அவர்கள் குணத்தையும் வாங்கி வச்சிருப்பினம் .

சோ வில்லங்கத்தை கண்டால் உங்களை மாதிரிதான் விலகி ஓட வேணும்.

surejini mam

Thank you so much for your wonderful lines.
Those lines will help the people who are under stress.
When I was reading the last line, felt that want to read more because of valuable points for life. Nice medicine for for stess. expect more writing in your blog.
Keep writing.
Thank you again.

வாழ்வும் வளமும்

ஹாய்,
////செய்யும் ஒவ்வொருவேலையையும் விரும்பி ரசித்து செய்துவிட்டு நீங்களே உங்களை பாராட்டிக் கொள்ளுங்கள்////அருமையான‌ கருத்து. பாராட்டுக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு