Kulanthai pirappuku pinbu period

Dear Frnds... Enaku baby poranthu 4 months aakuthu... baby poranthu one monthku bleeding irunthathu.. but Ipoh varaikum inum period varala eathanala ipdi irukku... Stitching poda pain irukku kayam inum sariaakala.. pls frnds help me..

Ninga solrathu sari than konjam naal aanalum Paravala... But en amma unaku matum than ipdi irukku .. c-section pannavangaluke ineram saria poitukum unaku matum saria pogalanu solranala ore confusion ah irukku payamavum irukku ... En baby kooda time saria poguthu ava thoongura timela nama arusuvaiku vara mudiyuthu. Thanks amma ciramam pakkama enaku reply pannathuku ...

:-) கொஞ்சம் டீடெய்லா பதில் சொல்றேன். ப்ரூஃப் பார்க்கல. 'பதிலளி' தட்டாதீங்க ஷர்மி. என் வேலையை முடிச்சிட்டு வந்து திருத்துறேன்.

//konjam naal aanalum Paravala.// நல்ல பொண்ணு. :-)

//But en amma unaku matum than ipdi irukku// உங்க அம்மா டாக்டராக, நர்ஸாக அல்லது ஹாஸ்பிட்டல் அட்டெண்டராக வேலை பார்த்திருக்காங்களா? இப்படி ஒருவராக இருந்தால் அவர் உங்கள் நிலையைப் புரிந்துகொண்டிருப்பார். அம்மா... அவங்க உங்க அம்மா இல்லையா! மகள் ஏதாவது கம்ப்ளைண்ட் சொன்னா யோசனையாகத்தானே இருக்கும். பாவம் அவங்க. தனக்குத் தெரிஞ்சதை மட்டும் வைச்சு யோசிக்கிறாங்க. நீங்க பயப்பட வேண்டாம்.

//c-section pannavangaluke ineram saria poitukum// ;-) சிசேரியன் செய்திருந்தால் அவர்கள் காயம் வயிற்றின் மேல்தான் இருக்கும். அடி வயிற்றில் கீறி குழந்தையை வெளியே எடுப்பார்கள். பிறப்புறுப்பில் காயம் எதுவுமே இராது. குழந்தை தானாக இடித்துப் பிடித்து வெளியே வரத் தேவையில்லை. நீங்கள் சொல்கிற இடங்கள் பாதிக்கப்படாது. (வயிற்றுக் காயம் & சத்திரசிகிச்சைக்கான வேதனைகளும் அது தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். விதிவிலக்காக சிலருக்கு நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கான காரணங்கள் வேறு இருக்கும்.)

உங்கள் பிரச்சினை வயிற்றின் மேல் காயம் அல்ல, அப்படித்தானே! அல்லது சிசேரியன் என்பதைக் கேள்வியில் சொல்லாமல் விட்டீர்களா?

//unaku matum saria pogalanu solranala// அது என்ன 'மட்டும்'!! அவங்களுக்கு அப்படிப் பிரச்சினையான ஒரு பெண்ணையும் தெரியவில்லை. அவங்களுக்குத் தெரியல என்கிறதுக்காக நீங்கள் விநோதமான பெண் இல்லை. இது சாதாரணமாக ஏற்படும் பிரச்சினைதான். எல்லோரும் வெளியே சொல்லிட்டு இருக்கிறது இல்லை. (பிரசவம் பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு என்பாங்க, கேட்டிருப்பீங்க இல்ல!) வேலைக்குப் போறவங்க விடுமுறை முடிஞ்சதும் மெதுவே வேலையில் மறப்பாங்க. குழந்தை கிடைச்ச சந்தோஷத்தில் பலர் இதை மறந்துருவாங்க. சிலர் வெளியே தம்பட்டமடிக்காமல் அமைதியாக டாக்டர்ட்ட பேசி சிகிச்சை தேவையானால் எடுத்துப்பாங்க. சிலருக்கு இப்படி இருப்பது இல்லை என்பதும் உண்மைதான். சிலருக்கு ஓரிரண்டு வாரங்களுக்குள் எல்லாச் சிரமங்களும் மறைந்து விடும்.

பிரசவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. பெண்ணின் உயரம், எடை,உடற்தசைகள், பிரசவ சமயத்து மனநிலை, உடல்நிலை, குழந்தையின் எடை, குழந்தை தலையின் அளவு, பிரசவ சமயம் குழந்தை எப்படி நடந்து கொள்கிறது என்பதெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஏன் உங்களுக்கே அடுத்த பிரசவம் இம்முறை இருந்தது போல் இராது. இப்போ உங்க அம்மாவுக்கு உங்கள் நிலை புதிராக இல்லையா? அப்படித்தான். அம்மாவைக் கேட்டுப் பார்த்தீர்களானால்.. அவரது பிரசவங்கள் எல்லாம் ஒரே விதமாக இருந்ததாகச் சொல்ல முடியாது அவரால். என் மாமியாருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. வேறு பலரது பிரசவ சமயம் அருகே இருந்திருக்கிறார். என் 3 அனுபவங்களும் அவருக்குப் புதிதாக இருந்ததாகச் சொல்லுவார். அதனால் ஒப்பீடு வேண்டாம். ஒருவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை என்பதற்காக இன்னொருவருக்கு இருக்கக் கூடாது என்பது இல்லை.

//ore confusion ah irukku// கன்ஃப்யூஷன் வேணாம். டாக்டர்ட்ட போய் கேட்டிருகீங்க. வேணுமானால் இன்னொரு முறை போகலாம். அவங்க கொடுத்த ஜெல்லைத் தொடர்ந்து சில மாதங்கள் பாவிக்க வேண்டி வரலாம். அதற்கும் மேல் பிரச்சினை இருந்தால் என்ன சிகிச்சை கொடுப்பது என்பது டாக்டருக்குத் தெரியும்.

//payamavum irukku// பயப்படவே வேண்டாம். எதற்கும் சரியாக கொஞ்சம் காலம் கொடுக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மருத்துவம் எதற்கு இருக்கிறது! யோசிக்காதீங்க.

//En baby kooda time saria poguthu ava thoongura// சந்தோஷம். அதுதான் நீங்க செய்ய வேண்டியது.

ஒரு விஷயம்... உங்களுக்குக் காயம் ஆறவில்லை என்று நினைக்க வேண்டாம். ஆறி நிறைய நாட்கள் ஆகி விட்டது. இன்ஃபெக்க்ஷன் எதுவும் இல்லை. இருந்திருந்தால் ஜெல் கொடுத்த சமயம் கூடவே ஆன்டிபயாடிக் ஏதாவது கொடுத்திருப்பார் டாக்டர். தையல் பிரிந்து போகும் நிலையெல்லாம் இனி வரவே வராது. அது பிரசவத்தில் ஆரம்ப நாட்களில் மட்டுமே வரக் கூடிய பிரச்சினை. இப்போ காயம் ஆறிவிட்டது. உங்கள் உடல் மெதுவே சரியாவது இனி உங்கள் கையில் உள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் பாருங்க. அப்போதும் இதே பிரச்சினை இருந்து உங்களால் 'பொறுக்க இயலாது' என்று தோன்றினால், அப்போதைய நிலையை விபரித்து இங்கு ஒரு பதிவு போடுங்க. (அனேகம் நிச்சயம் இப்போ இருக்கிறதை விடக் குறைஞ்சுரும்.)

(ஷர்மிக்கு இது போதும் இல்லையா! இதற்கு மேல் விபரங்கள் சொல்ல முடியும். படிக்கிற சின்னவங்க தேவையில்லாமல் அதைப் பிடிச்சிட்டு குழம்பி வைப்பாங்க. அதனால் சொல்லவில்லை.)

~~~~~~
பொதுவான சில விடயங்கள்....

உடலில் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டாலும், பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அது பழைய நிலைக்குத் திரும்பும். (இங்கேதான் பிஸியோதெரபி உதவுகிறது.)

ஒரு குழந்தை கிடைச்சுட்டா, பிறகு பெண்ணின் உடலில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். 100% கருத்தரிக்க முன் இருந்த நிலமைக்குப் போவது இல்லை. ஒரு பழமொழி சொல்லுவாங்க, எனக்குச் சரியான சொற்கள் நினைவுக்கு வரவில்லை. 'புடவைக்கு இரண்டு வெள்ளை; பெண்ணுக்கு இரண்டு பிள்ளை.' என்கிற மாதிரி வரும் அது. முதல் பிள்ளையிலேயே இந்த மாற்றம் வந்துரும். :-)

‍- இமா க்றிஸ்

//'புடவைக்கு இரண்டு வெள்ளை; பெண்ணுக்கு இரண்டு பிள்ளை.'//
இல்லை அம்மம்மா சொல்லி கேட்டிருக்கிறேன்.
கோடி க்கு ஒரு வெள்ளை {கோடிக்கொரு வெள்ளை}
குமரி க்கு ஒரு பிள்ளை { குமரிக்கொரு பிள்ளை}

கோடி - சாறி
குமரி - பெண் (பழந்தமிழ்}

:-) நன்றி சுரேஜினி. நாட்டை விட்டு இங்க வந்து எல்லாம் டச் விட்டுப் போகுது. ;( அறுசுவையாலயும் ஃபேஸ்புக் & வலைப்பூக்களாலயும் மட்டும் தான் என் தமிழ் கொஞ்சம் மிச்சம் இருக்குது. வீட்டில கதைக்கிறதெல்லாம், 'சாப்பிட்டீங்களோ!' எத்தினைக்கு வருவீங்கள்?' என்கிற ரேஞ்சில நிக்குது. :-)

கோடி... புதுத்துணி எல்லோ! நான் எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறன் இப்ப. :-) பிழையாக நினைவு வைச்சிருக்கிறனோ தெரியேல்ல.

ம்... மேல தம்பட்டம் என்று போட்டதை டமாரம் எண்டு மாத்துவம் எண்டு நினைச்சு வந்தால்... அம்மணி 'பதிலளி' தட்டியிருக்கிறீங்கள். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்