Pregnancy test Doubt

Sister, Actual ah pregnancy +ve na 31 day le theriyuma sister, first illam 15 days aganum, morning first urine la than clear ah irukum nu check pannuvanga, ippo doctors entha time ponalum urine test panni soliduranga.

கேள்வி குழப்பமா இருக்கு. 31 பெருசா 15 பெருசா!! என்ன சொல்றீங்க!!! தமிழில் எழுத முடியாதா? //first illam 15 days aganum// !!

//ippo doctors entha time ponalum urine test panni soliduranga.// சொல்லலாம். அன்றைய தினம் கிடைக்கிற முடிவை அப்படியே சொல்லலாம். நம்பகமானதா இல்லையா என்பது ஒன்று இருக்குல்ல!

//Actual ah pregnancy +ve na 31 day le theriyuma// இல்லை என்றே நினைக்கிறேன். சிலருக்கு சைக்கிளே 31 நாள். //first illam 15 days aganum// !!

ஒரு மாதம் - 30 நாள் + 15 = 45நாட்கள். 45 நாட்களின் பின் கிடைக்கும் முடிவை நம்பலாம்.

//first illam 15 days aganum// !! அரை மாசத்தில் எல்லாம் தெரியாது. இன்னும் அரை மாசம் இருக்குமே சைக்கிள் தோடர!!

//morning first urine la than clear ah irukum nu check pannuvanga,//இப்பவும் அதேதானே!

//ippo doctors entha time ponalum urine test panni soliduranga.// முன்பும் அப்படி சொல்றது உண்டு. :-) முப்பது வருஷம் முன்னால, எந்த நேரம் போனாலும் டெஸ்ட்ட்யூப்ல ஹீட் பண்ணிப் பார்த்து சொல்லுவாங்க. அது தவறாக இருக்கிறதும் உண்டு. ப்ளட் டெட்ஸ் செய்தபின்னால் கிடைக்கும் முடிவை நம்பலாம். இப்போ வீட்ல அவரவரே டெஸ்ட் பண்ற மாதிரி அட்வான்ஸ்டா எல்லாம் வந்தாச்சு.

உங்க பிரச்சினை என்ன? யாராவது ஏதாவது சொன்னாங்களா? அதனால் வந்த சந்தேகமா?

‍- இமா க்றிஸ்

எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் பிரியட் வந்த தேதியிலிருந்து 30 நாட்களிலில் கர்ப்பமா இல்லையா என்று தெரிந்துவிடும், அது தான் சந்தேகம்

//பிரியட் வந்த தேதியிலிருந்து 30 நாட்களிலில் கர்ப்பமா இல்லையா என்று தெரிந்துவிடும்,// இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!! பொதுவா பீரியட் வந்த தேதியிலிருந்து 30ம் நாள் பீரியட்ஸ் வராட்டா - கர்ப்பம், வந்தா - இல்லை என்றுதானே எடுக்கிறோம்.

நிச்சயமாகச் சொல்ல இன்னும் சில நாட்கள் காத்திருக்கவேண்டும்.

‍- இமா க்றிஸ்

சைகிள் எத்தனை நாட்களோ அதிலுருந்து 5 நாட்கள் முதல் 10 நாட்களில் மாதவிடாய் வரவில்லையெனில் செக் பண்ணலாம். நான் இந்த மாதிரி டெய்லி பார்ப்பேன் பைத்தியமே பிடிக்காத குறை தான். அப்புறம் போர் அடித்து விட்டு விட்டேன்மாதவிடாய் தள்ளி 5நாட்கள் பார்ப்பேன் negative மனம் நொந்து விடும் 7நாட்களில் பார்ப்பேன் negative அதை விட மனம் நோகும் 10 நாட்களில் பார்பேன் negative அழுக வேண்டியதுதான் இதனால் மனம் நொந்தால் positive வர குடியாது கூட வராது போல....

//இதனால் மனம் நொந்தால் positive வர குடியாது கூட வராது போல....// இப்படி நம்பிக்கையீனமாகப் பேசக் கூடாது சாரா. ஆனால் நீங்கள் சொல்வது போல, அடிக்கடி செக் பண்ணுவது நல்லதில்லை. உங்களுக்கே தெரியுது இல்ல, அது மனதை ரொம்பவும் பாதிக்கிற விஷயம். யோசிக்காம இருக்கப் பார்க்கணும். அது முடியாது. அதனால் வேறு எதிலாவது மனதைச் செலுத்துறதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

நானும் இந்த மாதிரி தான் டெஸ்ட் பண்ணி பார்ப்பேன், மனசு கஷ்டம் தான், எனக்கு இன்னொரு சந்தேகம் சைனஸ் பிராம்ளம் வேற இருக்கு அதனால தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருக்கும் சில சமயம் யுரின் கூட வந்து விடும், இதனால கூட கர்ப்பம் ஆக முடியாதோனு கூட தோன்றுகிறது,

தவறுதலாக என்ன வேண்டாம்.100க்கு 80% ஃபேமிலி யா இருங்கள்.டாக்டர் சொன்னது.எனக்கு இரவில் செக்கப் பண்ணி கன்சீவ்ன்னு சொன்னாங்க.என் சைகிள் 28நாட்கள் அதனால் 30நாட்களில் தெரிந்தது.குழந்தை பற்றி யோசித்து கொண்டிருந்தால் மனது கஷ்டப்படும்.எதாவது க்ளாஸ் போங்க. . யார் என்னப் பேசினாலும் கவலைப்படாதீர்கள் நீங்கள் தான் உங்கள் கணவருக்கு குழந்தை உங்களுக்கு உங்க கணவர் குழந்தை என்று வாழ்க்கையை தொடருங்கள் எல்லாம் நல்லபடியாக கிடைக்கும்.

அன்பு தோழி. தேவி

Thank you sister

மேலும் சில பதிவுகள்