கோபி மஞ்சூரியன்

தேதி: February 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (10 votes)

அறுசுவை நேயர்களின் நீண்ட நாள் விருப்பமாகிய கோபி மஞ்சூரியன் செய்முறைக் குறிப்பை இங்கே வழங்கியுள்ளோம். சமையல் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த Chef திரு. சண்முகம் அவர்கள் அதனை செய்து காட்டியுள்ளார். இது உலர் (Dry) கோபி மஞ்சூரியன். கிரேவியாக வேண்டுமென்றால் தக்காளி சாஸ், வெங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். சிறிது சோள மாவினை கரைத்து சேர்க்கவும். அத்துடன் நறுக்கின குடைமிளகாய் துண்டங்களையும் சேர்த்து வதக்கவேண்டும். மற்றபடி செய்முறை ஒன்றுதான்.

 

காலிஃபிளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
முட்டை - ஒன்று
கார்ன்ஃப்ளார் - 25 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
தக்காளி சாஸ் - கால் கப்
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - கால் தேக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்கவும். காலிஃபிளவரை நறுக்கி துண்டுகளாக போட்டால் மேலே உள்ள பூ உதிர்ந்து விடும். காலிஃபிளவரை எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
சுமார் 5 நிமிடம் கழித்து காலிபிளவர் லைட் பிரெளன் ஆனதும் எடுத்து விடவும்.
பின்னர் வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போடவும்.
மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டங்களை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.
பரிமாறும் போது மேலே பொடியாக நறுக்கின கொத்தமல்லித் தழை தூவவும்.
இந்த சுவையான கோபி மஞ்சூரியனை செய்து காட்டியவர் திரு. சண்முகம் அவர்கள். நாகை சத்யம் கேட்டரிங் கல்லூரியில் பணியாற்றும் இவர், செட்டிநாடு, தந்தூரி, அரேபியன் உணவுகள் தயாரிப்பதில் திறன் வாய்ந்தவர். அரேபியன் உணவுகள் தயாரிப்பில் தனியாக டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த சமையல் செய்முறைக்கு நன்றி.இங்கு நான் பதிவு செய்தால் என் மெய்லுக்கு வந்துவிடும்.முகப்பில் சில சமையல் செய்முறை பார்க்கும் போது செய்து பார்க்க தோன்றும்.
பின்பு மறந்து விடுகிரது.அதனால் இங்கு எலுதி வைத்தால் என் மெயிலில் அந்த பதிவு வந்துவிடும்.பிறகு எனக்கும் வசதியாக இருக்கும். நன்றி

sajuna

ஹாய் அட்மின் அவர்களுக்கு,
நான் 4 மாதங்களாக இந்த வெப் சைட்டை பார்க்கிறேன். சூப்பர்.இன்று இந்த கோபி மஞ்சூரியன் சைய்தேன். நன்றாக வந்தது. ரொம்ப நன்றி.
மாஜிதாசுபைர்

majithazubair

நீண்ட நாட்களா கோபி மஞ்சூரியன் செய்யவேண்டுண்ணு நினைத்தென் இன்று சூப்பராக செய்துமுடித்தேன் அருசுவைக்கு ஒரு சுப்பர் ஓஓஓஓஒ..............

நீண்ட நாட்களா கோபி மஞ்சூரியன் செய்யவேண்டுண்ணு நினைத்தென் இன்று சூப்பராக செய்துமுடித்தேன் அ

Please ask him to make more items. His recipe is go good. Thank you.

any other substitution for egg....since some children are allergic to egg..

wow i just love Gopi manjurian.... but never tried my own yet. i would love to try out with the help of the pictures....Thanks much :-)
With Love
Animma

With Love
Animma

it came very well

கோபி மஞ்சூரியன் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.நன்றி.

it came out very well

இந்த கோபி மஞ்சூரியன் நன்றாக வந்தது. ரொம்ப நன்றி.

இந்த குறிப்புக்கு மிக்க நன்றி. நான் முதல் முறையாக செய்து மிகவும் பாராட்டு பெற்றேன் என் கணவரிடம்.
ஹோட்டலில் செய்றதை விட நீ செய்தது மிகவும் சுவையாக இருந்தது என்றார்..