6 maatha kulanthaikku rattha soogai

munthaiya pathuvirukku pathilita imma amma.poongothai amma.surejini. jaibu anaivarukkum nantri.en ponnukku oru vaaramaaga fever iruthukondae iruthathal doctor blood test seiya sonnar.athil viral infection etum illai.but rattha soogai irupathaga doctor sonnar.atharkkana syurb ondrum kuduthu ullar.6 maathailae rattha soogai varuma.ithu pinnaalil en kulanthain aarokiyathil yethavathu kurai varuma.ippoluthu thaipal tharugiren vera entha palum tharuvathu illai athai thavira paruppu saatham sattu mavu kanchi idly tharugiren.thaipal pothavittal doctor nestum rice kudukka solgirar.cold iruthukondae irupathal apple juice pondra fresh juice ethuvum ippothaikku kudukka venam enkirar doctor.pirantha naal kondu indru varai cold iruthukondae irukirathu cold pogavum.rattha sooagai poga entha mathire unavu kudupathu sollugal plz

தமிழ்ல தட்டினா படிக்க கொஞ்சம் வசதியா இருக்கும். புல்ஸ்டாப் தட்டினதும் ஒரு ஸ்பேஸ் அடிங்க. படிக்க கண்ணுக்கு ரொம்ப சிரமமா இருக்கு கண்ணா.

//6 maathailae rattha soogai varuma.// வரும். முதல் மாதத்தில் கூட வரும். இது தொற்று நோய் அல்ல. வியாதியும் அல்ல. டாக்டர் தமிழ்ல சொல்லிட்டாங்க; குழம்பியிருக்கீங்க. பாப்பா அனீமிக்கா இருக்காங்க. போஷாக்கு குறைவு. அவ்வளவுதான். :-) கொடுத்த சிரப்பைக் கொடுங்க.

//ithu pinnaalil en kulanthain aarokiyathil yethavathu kurai varuma.// ரத்தச்சோகை சின்னன்ல ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கும் பின்னாளின் வரலாம். ஒழுங்கா சாப்பிடணும். பாலன்ஸ்ட் டயட்டா சாப்பிடணும். அம்மா நீங்க, நிச்சயம் இனிமேல் அனீமிக் ஆகாம கவனிச்சுப்பீங்க.

//ippoluthu thaipal tharugiren vera entha palum tharuvathu illai// உங்கள் பால் போதுமாக இருந்தால் சரி.

//athai thavira paruppu saatham sattu mavu kanchi idly tharugiren.// ப்ரோட்டீன் பத்தல போல இருக்கு. பருப்பைத் தவிர மீதி எல்லாம் மாப்பொருளா சொல்றீங்களே! பருப்பு - புரதம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இது விலங்குப் புரதம் போல அல்ல. உண்மையில் பருப்பில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ அத்தனையையும் எம் உடல் உறிஞ்சுவது கிடையாது. மிகக் குறைந்த அள்வுதான் உடல் எடுக்கும்.

சத்துமாவு - பல தானியங்கள் சேர்த்துச் செய்வது. அதன் சத்து சேர்க்கும் பொருட்களைப் பொறுத்து மாறும். சோளம், இறுங்கு, தினை, சாமை என்று கலந்தால் அந்தச் சத்து மாவு மாப்பொருள் உணவு. அதையே பயறு, உளுந்து, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துச் செய்தால் புரதமும் இருக்கும். பருப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைப் புரதம் இருக்கும். அதனால்தான் நான்கைந்து வகைப் பருப்புகளைச் சேர்த்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். முடிந்தால் பருப்புகளைக் கலந்து அவித்து சூப் போல செய்து கொடுக்கலாம். அல்லது கலந்த பருப்பு சாதம், இட்லி இப்படிக் கொடுக்கப் பாருங்கள். நீங்க குழந்தைக்கு வித்தியாசம் வித்தியாசமான உணவுகளாகக் கலந்து கொடுக்க வேண்டும். இனிமேல் மெதுவா ஆரம்பியுங்க. ப்ரொஃபைல்ல இருந்து உங்க உணவுப் பழக்கம் பற்றித் தெரிஞ்சுக்க முடியல. முடிஞ்சா இடைஇடைல கொஞ்சம் மீன் கொடுங்க.

//thaipal pothavittal doctor nestum rice kudukka solgirar.// இதுவும் அதிகம் ஸ்டார்ச் போலதான் இருக்கு. கூட வேறு வைட்டமின்கள், மினரல்கள் சேர்த்து இருப்பார்கள். வயிறும் நிறைய வேண்டும். இதை மனதில் வைத்து டாக்டர் சொல்லி இருக்காங்க. கொடுங்க. ஆனால் அது மட்டும் போதும் என்று நினைக்க வேண்டாம்.

//cold iruthukondae irupathal apple juice pondra fresh juice ethuvum ippothaikku kudukka venam enkirar doctor.// இதைப் பற்றி என் அபிப்பிராயம்... உங்க டாக்டர் சொன்னதற்கு எதிர்மாறு. :-) கொடுக்கலாம். பழங்களில் வைட்டமின் சீ இருக்கு. உடல் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் அது. தடிமல் என்று போனால் விட் சீ டாப்லட்டா கொடுக்கிறாங்க. ம்... ஜூஸ் ஃப்ரிஜ்ல வைச்சு கொடுக்காதீங்க என்று சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷயம்... அனீமிக்காக இருக்கும் சமயம் நோய்கள் சுலபமாகத் தொற்றும். குழந்தையை யாரிடம் விட்டு வைக்கிறீர்கள் என்பதில் அவதானமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

பேரீச்ச பழம் வென்னீர் விட்டு அரைத்து கொடுங்க . two spoon pothum.. kulandhaiku உடலுக்கு ஒத்துகிட்டா continue pannunga .. ceralac mathiri araikkanum

illana kulandhaiyala sapidamudiyathu... dont add sugar... raisin ular thirachai venner oora vachu (pichu potu) andha water kudunga

மேலும் சில பதிவுகள்