கெண்டை மீன் என்றால் என்ன?

வணக்கம், கெண்டை மீன் என்றால் என்ன? அதன் உருவம் எப்படி இருக்கும்? தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும். நன்றி.

கெண்டை மீன் விழியாளே என்று பெண்களின் அழகிய கண்களை மீன்களுடன் ஒப்பிட்டு பாடாத கவிஞர் யாரும் இல்லை.

துள்ளு கெண்டை, பவானி கெண்டை, காவேரி கெண்டை, சேத்துக் கெண்டை, புள்ளி கெண்டை என்று கெண்டை மீனில் மட்டும் 15க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன. சில கெண்டை வகைகள் பார்க்க சகிக்காது. குறும்பு கவிஞர்கள் இந்த வகை கெண்டையை மனதில் வைத்து பாட்டுப் படித்தாலும் படித்திருக்கலாம்:-)

சில வகை கெண்டை மீன்களின் படங்களை கீழே கொடுத்துள்ளேன். அதனைப் பார்த்தால் கெண்டை மீனின் உருவம் குறித்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கலாம்.

<img src="files/pictures/kendai.jpg" alt="kendai" />

நன்றி அட்மின். [கெண்டை மீனில் கொழுப்புச்சத்து உண்டு என அறுசுவையில் வாசித்தேன், அந்த மீன் வகையை தவிர்ப்பதற்காகவே கேட்டு அறிந்து கொண்டேன்.]

THuSHI

டியர் லக்ஷனா, மீனிலுள்ள கொழுப்பைப் பற்றிய என்னுடைய சொந்த கருத்தை கூற விரும்புகின்றேன். கெண்டைமீனில் கொழுப்புச்சத்து அதிகமானதாக உள்ளது என்பதர்க்காக தாங்கள் அவற்றை தவிர்த்துக் கொள்வதாக எழுதியிருந்தீகள்.ஆனால் கெண்டை மீனை மட்டுமல்லாமல் எந்த மீனிலுமே நம் உடலுக்கெற்ற நல்ல கொழுப்பு தான் அதில் அடங்கியுள்ளது. ஆகவே வாரத்திற்க்கொரு முறையாவது இது போன்ற மீன் வகைகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நம் உடம்பின் பல விதமான ஆரோக்கியத்திற்க்கு மிகவும் நல்லது தானே ஒழிய, எந்த மீனினாலும் கெடுதல் வர வாய்ப்பிருக்காது. ஒவ்வொரு மீனிலும் அதற்காற்றார் போல் கொழுப்புச்சத்து கூடியோ குறைந்தோ தான் இருக்கும் அதற்க்காக அதனை ஒட்டுமத்தமாக தவிர்த்து விடுவதால் பயன் எதுவும்மிருக்காது என்பது என் கருத்து. நன்றி.

Dear Manohari madam,
You are correct. Fish has omega3 type of fatty acid which really helps to reduce your bad cholestrol and increase the good one.Being a vegetarian we are taking this as a tablet form to get the omega3.You know Doctors too advice this to reduce the cholestrol.
Thank you for your contributions.

வணக்கம் மனோகரி மேடம் , எனது கணவருக்கு கூடாத கொழுப்பு கூடுதலாக உள்ளது.அதனால் தான் கொழுப்பு சாப்பாடுகளை குறைப்பதற்காக இக் கேள்வியை எழுப்பினேன்.இப்போது தவறை உணர்ந்தேன். மனோகரி மேடம் இரத்தக்கொழுப்பினை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படியான சாப்பாடுகள் கொடுக்கலாம்?

THuSHI

நன்றி சாந்தி உங்கள் கருத்துக்கு, இந்த விதத்தில் நான் யோசிக்கவில்லை.

THuSHI

வணக்கம் லக்ஷனா, தாமதத்திற்க்கு மன்னிக்கவும். பல்வேறு காரணங்களுக்காக பதில் கொடுக்க முடியாமல் இருந்தேன்.இருந்தாலும் மனசு கேட்கவில்லை, யாருக்குமே எனது மனதில் பட்ட நன்மையான விசயங்களை கூறாவிட்டால் ஏதோ தவறு செய்வதைப் போல் உணருவேன், அது எனது சுபாவமும் கூட, ஆகவே தான் எனது கருத்தை சிறிதும் தயக்கமில்லாமல் உங்கள் கேள்விக்கு பதிலாக பதிக்கின்றேன். இனி பதிலைப் பார்ப்போம்.

தங்களின் அன்பு கணவருக்கு இரத்தத்தில் கொழுப்பு கூடியிள்ளதாக எழுதியிருந்தீர்கள். மருந்துக்கள், நல்ல ஆரோக்கியமான உணவு ,உடற்பயிர்ச்சி ஆகிய மூன்றையும் சேர்த்து கடைப்பிடித்தால் கட்டாயம் கட்டுப்பாட்டில், அல்லது குறைக்கவும் முடியும்.
மருந்துக்கள் என்றால் அதை மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

உணவு என்று பார்த்தோமானால் கொழுப்புசத்து இல்லாத உணவு தாவரத்திலிருந்து கிடைக்கும் உணவுகள் தான். பச்சை காய்கறிகள், கனிவகைகளுடன் பருப்பு வகைகள்,தானியங்கள், நல்ல கொழுப்புச் சத்து அடங்கியுள்ள விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சரிசமமாக பார்த்து செய்துக் கொடுக்கலாம்.
மாமிச உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமுள்ள ரெட் மீட் டை குறைத்து அதற்க்கு பதிலாக மீன், கோழி போன்ற வொயிட் மீட் டை பக்குவமாக சமைத்து கொடுக்கலாம்.மேலும் பூண்டில், இரத்தத்திலுள்ள கொழுப்பை கரைக்க கூடிய சக்தியுள்ளதால் சமைக்கும் எல்லா உணவிலும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

உடற்பயிர்ச்சி என்பது அவரவர்களின் வசதிக்கேற்ப்ப வீட்டிலேயே சாதனங்களை வாங்கி வைத்துக் கொண்டு செய்யலாம். அல்லது பயிற்ச்சி கூடங்களுக்கு தவறாமல் சென்று செய்வதைப் பழக்கமாகி கொள்ளலாம்.மற்றும் வெளியில் சென்று (If weather permits) வேகமாக நடப்பது, மெதுவாக ஓடுவது, மிதி வண்டியை ஒட்டுவது போன்ற உடற்பயிர்ச்சிகளையும் செய்யலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான உடலுறவின் மூலமாகவும் உடலுக்கு தேவையற்ற இந்த கொழுப்பை கட்டுப் பாட்டில் வைக்கலாம். ஆரோகியமான உடலுறவு என்றால் இந்த அவசர உலகில் கணவன் மனைவிக்குள் பேசுவதற்க்கே நேரம் கிடைப்பதில்லை, வேலை பளுவின் காரணமாக உடலானது ஓய்வையே தேடுகின்றதாகி விட்டது. இவ்வாறு அதிகமாக, ஓய்வை மட்டும் உடலுக்கு கொடுப்பது இயற்க்கைக்கு புறம்பானது.(நான் உங்களை குறிப்பிடவில்லை) உடல் நிலையும், மனநிலையும் சீர்கேடடைவதற்க்கு இதும் ஒரு காரணம் என்றுத் தான் கூறுவேன். ஆகவே எந்த பிரச்சனை இருந்தாலும் கணவன் மனைவி இந்த கலவியலை தங்கு தடையில்லாமல் செய்ய வேண்டும். இதனால் ஆணுக்கும், பெண்ணிர்க்கும், இயற்க்கையிலேயே உடலுக்கு தேவையான ஆரோக்கியம் ஒட்டு மொத்தமாக கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மனைவிகள் தான் இதற்க்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்த விசயத்தில் பழைய பஞ்சாங்க முறை ஒத்து வராது.கணவருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுப்பதோடு நிறுத்துவிட்டு மற்ற வேலையை அவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடக் கூடாது. காரணம் இதுக் கூட அவரின் உடல் ஆரோக்கியத்திற்க்கு சம்பந்தப்பட்டதுதான் என்று கூறுவேன். ஆகவே லக்ஷ்னா அறிவது எல்லாவிதத்திலும் உங்கள் அன்பரின் ஆரோக்கியம் உங்கள் கையில் தான் இருக்கின்றது .நன்றி.

மேலும் சில பதிவுகள்