சாரா மற்றும் யாராவது

நான் ஏதோ கொஞ்சம் சுமாரா சமைப்பேன். ஆனால் இந்த கோழி மட்டும் கழுவி சுத்தம் செய்ததே இல்லை ப்ளீஸ் எனக்கு இந்த கோழி அப்றம் இறைச்சி இது ரெண்டுத்தையும் எப்படி கழுவி துண்டு போடுவது னு எனக்கு படத்துடன் விளக்கமா சொல்லி தர முடியுமா தோழி நான் தனியா இருக்கேன் அதான் கேட்குறேன் ப்ளீஸ்.

சாரி நிஷா இந்த இறைச்சி கோழி இவைகளை நான் தொடுவதே இல்ல. எல்லாம் என் கணவர் தான். திருமணம் ஆகி 5 வருடம். 6 மாதம் என் கனவோரோடு 6 மாதம் என் பிறந்த மற்றும் மாமியார் வீட்டில் தான். இந்தியா சென்றால் அம்மா மாமியார் தான் சமையல். இங்கு என் கணவர் என்னை விட அருமையாக சமைப்பார். அவர் தான் வாரத்தில் ஒரு நாள் non vege எடுத்து என்னை சமைத்து அசத்துவார். துண்டு கடையிலே போட்டு தருவார்கள் நிங்கள் ஏன் போடா வேண்டும். வாங்கி வந்து மஞ்சள் தூள் நன்றாக போட்டு 4 அல்லது 5முறை கழுவ வேண்டும். படத்துடன் எப்படி விவரிப்பது ஹ ஹ ஹா....

வணக்கம் நிஷா ,உங்களுக்கு சிக்கன் தொட கஷ்டமாக இருந்தால் முதலில் kitchen use Disposable Plastic Gloves வாங்கி உபயோகபடுத்தலாம்.சிக்கனை கடைகளில் வெட்டி குடுப்பார்கள்,இல்லைஎன்றால் முதலில் இரண்டு கால்களையும்,wings வெட்டவும் அதன்பின் சிக்கனின் துவாரம் நடுவில் கத்தி வைத்து வெட்டினால் சுலபமாக வெட்ட முடியும் ,பின் தேவைகேற்ப சிறியதாக வெட்டவும் (மற்ற லிங்க் இங்கு பதிவு செய்யகூடாது எனவே என்னால் உங்களுக்கு லிங்க் எதையும் அனுப்ப முடியவில்லை )

புகைப்படத்தை இங்கு சேர்க்க முடியவில்லை

சிக்கனை கழுகுவதற்கு அதில் உள்ள கொழுப்புகளை முதலில் நீக்க வேண்டும்.பிறகு ரத்தம் எல்லாம் போகும் அளவிற்கு கழுகவும்(நான் ஒவ்வொரு துண்டுகளாக கழுகுவேன் )

இந்த Link உங்களுக்கு உபயோகபடலாம் http://www.arusuvai.com/tamil/node/26379#comment-366871

மேலும் சில பதிவுகள்