வாழைக்காய் பொடிமாஸ்

தேதி: February 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 4
நாட்டு வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் வாழைக்காயை தோல் நீக்கி ஒரு இன்ச் அகல சதுர துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், சோம்பை பொடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் வாழைக்காய், உப்பு, மஞ்சள்பொடி போட்டு வேகவிடவும். வெந்தபிறகு வடிகட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போடவும். வெடித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு மிளகாயை போட்டு வதக்கி அதில் சோம்பை போடவும். பின்பு கறிவேப்பிலை போட்டு அதில் தேங்காய் துருவலை போட்டு வதக்கி அதில் வேக வைத்த வாழைக்காயை போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இன்று try பண்ணினேன்.நன்றாக வந்தது.Thanks

Be Good,Do Good

அன்புள்ள சங்கீதா
உங்களுக்கு வாழைக்காய் பொடிமாஸ் நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம்!உங்கள் பின்னோட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது!ரொம்ப நன்றிமா!

ரஸியா நலமா? குழந்தைகள் நலமா? உங்களுடன் பேசி ரொம்ப நாளாயிட்டது. இப்போதெல்லாம் அருசுவையில் அதிகம் பார்க்க முடிவதில்லையே? உங்கள் வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. செய்வதற்கு ஈசியாகவும் இருந்தது. நன்றி.

எப்படி இருக்கீங்க?குழந்தைகள் நல்லா இருக்காங்க?உங்கள் பிள்ளைகள் நலமா?உண்மைதாம்மா ரொம்ப நாளாச்சு உங்களுடன் பேசி!!அக்காவிடம் விசாரித்துக்கொள்வேன்.வாழைக்காய் பொடிமாஸ் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததர்க்கு நான் தான் நன்றி சொல்லனும்!நன்றிமா!அடிக்கடி அருசுவைக்கு வரமுடியவில்லை என்பது உண்மைதான்,இப்பொழுது வீட்டில் இருக்கும் நேரம் குறைவாக உள்ளது!அதனால் தான் இப்படி!முடியும் போது பார்வை இடாமல் என்னால் இருக்க இயலாது,சரிமா வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்!உங்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் பேசுவது சந்தோஷமா இருக்கு!