சைனீஸ் டம்ப்ளிங்ஸ்

தேதி: February 22, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - இரண்டு கோப்பை
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
எண்ணெய் - இரண்டுமேசைக்கரண்டி
இறால் - நூற்றைம்பது கிராம்
முட்டை - ஒன்று
கேரட் - அரைக்கோப்பை
சைனீஸ் கேபேஜ் - ஒரு கோப்பை
மஷ்ரூம் - அரைக்கோப்பை
வெங்காயத்தாள் - கால்கோப்பை
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பிளாக் சாஸுக்கு தேவையானவை:
சோயாசாஸ் - அரைக்கோப்பை
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு சில துளிகள்
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நசுக்கிய இஞ்சி - அரைதேக்கரண்டி


 

மைதாவுடன், உப்பு, எண்ணெயைச் சேர்த்து குளிர்ந்த நீரைத் தெளித்து பிசைந்து வைக்கவும். பூரி மாவின் பதமாக இருக்க வேண்டும்.
இறாலை சுத்தம் செய்து அரவை இயந்திரத்தில் போட்டு ஒன்றும்பாதியுமாக ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
முட்டையை வேகவைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிறகு பிளாக் சாஸ் தயாரிக்க தேவையான பொருட்களை ஒரு சிறிய கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சி, வெங்காயத்தாளைப் போட்டு வதக்கவும். பின்பு இறாலைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தொடர்ந்து நறுக்கியுள்ள எல்லாக் காய்கறிகளைப் போட்டு சோயா சாஸையும் ஊற்றி கிளறி விடவும்.
பிறகு உப்புத்தூள், மிளகுத்தூள், முட்டைத்துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு கிளறி விட்டு இறக்கி நன்கு ஆறவிடவும்.
பிசைந்த மைதாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து சிறிய அப்பளங்களாக தேய்க்கவும்.
பிறகு தயாரித்துள்ள பூரணத்தில் சிறிதை எடுத்து அப்பளத்தின் ஒரு ஓரத்தில் வைத்து மறுபக்கத்தை நீரைத் தடவி நன்கு அழுத்தி மூடவும்.
இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் சுமார் இருபது முதல் முப்பது வரையில் செய்துக் கொண்டு நீராவியில் வைத்து அவித்துக் கொள்ளவும். அல்லது கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
இந்த சுவையான சைனீஸ் டம்ப்ளிங்கை பிளாக் சாஸுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு வெஜ்ஜில் செய்ய முடியுமா, இது பார்த்ததும் பதில் தர முடியுமா இந்த வீக் எண்ட் கெஸ்ட் வாராங்க. ஆனால் நாங்க வெஜ்டேரியன், எனக்கு இரால் சேர்க்காமல் அதற்க்கு பதில் வேற என்ன சேர்க்கலாம் ப்ளிஸ் சொல்ல முடியுமா? நான் ஒரு தடவை ஒரு சைனிஸ் ப்ரெண்ட்ஸ் வீட்டில் சாப்பிட்டது அவங்க என்னிடம் சொன்னார்கள் ப்ராமிஸா உங்களுக்காக இதில் நாங்க எந்த நான்வெஜ்ஜும் சேர்க்கல்லை என்று. எனக்கு வெஜ்ஜில் செய்ய வேண்டும்.

டியர் விஜி இந்த டம்ப்லிங்சின் ஃபில்லிங்கை வெஜிடேரியனாக செய்ய குறிப்புகளிலுள்ள காய்கறிகளுடன் அல்லது பிடித்த காய்களுடன் நன்கு முளைவிட்ட பயிறை சேர்த்தால்கூட ரொம்ப சுவையாய் இருக்கும் டிரை செய்து பாருங்க.நன்றி.