Weight increase panna ideas venum friends

Hi frnds.. Enn 2nd daughter 1yr 2 month aaguthu.. Avalku healthy food dhan kodukren but romba olliya iruka... Morning Tiffan.. Then 10ku fruits or boiled potato or egg kodukren. Then afternoon parupu veg mixed rice or fish kodukren..then eve saththu maavu kanji and konjam aavin milk kodukren( milk avlo interest a kudika maatra.. Romba pasicha mattum oru 100ml kudipa.or else daily 50ml kudikrathey adhigam) then nt Tiffan.. Idaila dry grapes .. Dates.. Biscuits .. La konjam saapiduva.. But weight increase aagala.. Bone Strong a iruka maathriyum thaerila vilaiyadum bothu vizhunthidra.. Dr nalla saapidra active iruka so no need to worry nu solrar..but paakravanga yellam comment panra alavu ava lean a iruka.. Under weight ila but above under weight innum 1 kg reduce aana under wt baby nu solvanga..Yepadiyathu wgt increase pannanum.. Ideas sollunga frnds..

Hi Srisam, weight increase aagaradhukku fruit juice(any fruit) la water ku badhila milk add panni juice panni kudicha weight increase aagum pa and dry grapes irukku illa adhai daily morning 5 evening 5 nu water la ooravachu (soak) sapda kudutha weight nalla increase aagum pa... but baby ku kudukaradhu ku periyavanga kitta kettukonga pa

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

நீங்க சொல்றதைப் பார்த்தா குழந்தை ஹெல்தியா இருக்கிறதாத்தான் எனக்கும் படுது.

//Bone Strong a iruka maathriyum thaerila// எதை வைச்சு இப்படிச் சொல்றீங்க! இது டாக்டருக்கே டெஸ்ட் பண்ணா தவிர தெரியவராதே!

//vilaiyadum bothu vizhunthidra.// இதுக்கு அர்த்தம் எலும்பு வீக் என்கிறது இல்லை. பாப்பா இன்னும் ஸ்டெடியாகல. பாலன்ஸ் சரியா வரல இன்னும். கொஞ்ச நாள் போக சரியாகிருவாங்க.

//Dr nalla saapidra active iruka so no need to worry nu solrar.// அதைத்தான் நானும் சொல்லுவேன்.

//but paakravanga yellam comment panra alavu ava lean a iruka.// :-) அதை விடுங்க. அவங்க சும்மா சொல்லுவாங்க. டாக்டர் சொல்றதை விடவா மற்றவங்களுக்கு தெரியப் போகுது!!

//Under weight ila // பிறகு என்ன! //but above under weight innum 1 kg reduce aana under wt baby nu solvanga..// ஆஹா! த்ரெட் போட்டு மற்றவங்களுக்கு அட்வைஸ் பண்றீங்க. உங்களுக்குன்னு வரப்ப குழம்பிருறீங்க.

//Yepadiyathu wgt increase pannanum.// கட்டாயம் பண்ணத்தான் வேணுமா? அப்றம் வெய்ட் கூடினதால, அந்த வெய்ட்டை கால் தாங்க கஷ்டப்படுறப்ப கூட பொத்து பொத்துன்னு விழுவாங்க. அப்ப பார்க்கிறவங்க திரும்பவும் ஏதாவது சொல்லத்தான் போறாங்க.

குண்டானதுக்கப்புறம் மெலியுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பெரியவங்களுக்கே வாய் கட்டுறது சிரமமான காரியம். குழந்தை அது. நிம்மதியா விட்டுருங்க.

//Ideas sollunga frnds.// நல்ல ஃப்ரெண்டா சொல்றேன். டாக்டர் சொன்னதை நம்புங்க. சந்தோஷமா இருங்க. யார் கேட்டாலும், 'டாக்டர் இப்பிடி இருக்கிறது ஓகேன்னு சொல்லிருக்காங்க. நான் கவலைப்படல,' என்று சொல்லிருங்க.

‍- இமா க்றிஸ்

Reply pannathuku nandri imma ma..

ithuvum kadanthu pogum

Hi ammu.. Fruit juice Vida whole fruit saapidrethu best ilaiya.. Ava fruits saapidra...

ithuvum kadanthu pogum

//but paakravanga yellam comment panra alavu ava lean a iruka //Yepadiyathu wgt increase pannanum.. Ideas sollunga frnds //

பாக்கிறவங்க சொல்ற கொமண்ட் க்காக எல்லாம் குழந்தைக்கு சிரமம் குடுக்க குடாது .அது அப்பப்போ நடக்கிற உரையாடல் அவ்வளவுதான்.அதை சொல்லுபவர்களே பிளான் பண்ணி சொல்வதில்லை.அதையெல்லாம் துக்கி வச்சு ஒழுங்கா இருக்கிற குழந்தையை நெருக்கம் குடுத்து இன்னும் சாப்பிடாமல் பண்ணீடாதீங்கோ.
1 கிலோ அதிகமா இருக்கிறதே போதுமானது.

எனக்கு என் அக்கா பையன் ஞாபகம் வந்திச்சு.சரியான ஒல்லி குச்சி.குடும்பத்தில எல்லாருமே செம வெயிட்டு.வீட்டுக்கு வார எல்லாருமே இவனை கிண்டல் பண்ணாமல் போறது கிடையாது.உனக்கு சாப்பாடு தரதே இல்லையாடா?அவங்களே சாப்பிடுறாங்களோ? ந்னெல்லாம்.

பட் நாம அதை ஒரு விசயமா எடுத்து ஆராய்ஞ்சது கிடயாது.நாங்களும் சேந்து சிரிச்சுட்டு விட்ருவோம்.
இப்போ பாத்தீங்கன்னா அந்த ஒல்லிக்குச்சி 14 வயசிலயே ஜெயம் ரவி கணக்கில இருக்கான். இப்ப எல்லாரும் ஏண்டா வீட்டில சமைக்கிற எல்லாத்தையும் நீயே சாப்பிடுறியா?உடம்ப குறைடா.துன்னாதடா? ந்னு கிண்டல்.எனக்கு அவன் பக்கத்தில நிக்க வெக்கம்.குள்ளம் மாதிரி இருக்கும் விரட்டுவேன். ஏதாச்சும் சொன்னா என்னைய குண்டு கட்டா தூக்கி போய் வெளிய விட்டுட்டு ஓடிவரான். அம்புட்டு பலமும்.

சோ குழந்தைகள் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டினம்.ஹெல்தியா இருந்தா போதும் .நீங்க உங்க பாட்டுக்கு பாப்பா கூட எஞ்ஜாய் பண்ணுங்கோ.

மேலும் சில பதிவுகள்