வாழைக்காய் பொரியல்

தேதி: February 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 4
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மி.லி


 

வாழைக்காயை தோல் நீக்கி மெலிதான ரவுண்டாக வெட்டிக்கொள்ளவும்.
அதில் அனைத்து மசாலாப்பொருட்கள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசறி வைக்கவும்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பரவினாற்போல் வாழைக்காயை போடவும். மிதமான தீயில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா வந்தது ரசியா அக்கா!!! நான் வழக்கத்தில் இஞ்சி/பூணு பேஸ்ட் போட மாட்டேன்...இந்த முறையில் ரொம்ப வித்யாசமான ருசியுடன் இருந்தது... உங்க குறிப்புக்கு நன்றி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழைக்காய் பொரியல் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி இலா!தங்களுக்கு பிடித்திருந்தது அறிந்து சந்தோஷம்!