ராகி டிலைட்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
துருவிய காரட் - அரை கப்
துருவிய கோஸ் - அரை கப்
முளைக்கட்டிய பச்சைபயறு - ஒரு கப்
இஞ்சி விழுது - அரைத் தேக்கரண்டி
பூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய மல்லித்தழை - சிறிது
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கேழ்வரகு மாவை வெந்நீர் தெளித்து மெதுவாக பிசைந்து கட்டியில்லாமல் உதிர்த்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மூட்டைப் போன்று கட்டி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேகவைக்கவும். பிறகு எடுத்து ஆற விடவும்.
ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காரட், கோஸ், மூளைக்கட்டிய பயிறு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் வேகவைத்த மாவை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக மல்லி, எலுமிச்சை சாறு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி விடவும். (டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் துருவலையும் தவிர்த்து விடலாம்).


மேலும் சில குறிப்புகள்