karpakalathil thaiyal velai

hi frds enakku oru dout. na ippa 45 days conceiva irukkenga. na last one month a thaiyal class poitu irukkenga.ippa na conceiva irukkum pothu thaikkalama ithu thanga en dout. na normala conceive anathuthanga 2nd baby ithu. treatment ethum edukkama conceive anathu thanga. na doctor ta ketenga thaiyal class poitu irukkennu sonnenga doctor continue panunga oru problemum illa nenga malaiyai eralam no problem nu solitanga but enga vitla amma ellam class pogaventamnu thitturanga. na rompa interesta kathutu irunthenga athanga class nippatta kastama irukku but baby ku problem na na kattayam nippatiruvenga.athanga rompa confuse a irukku pls ithukku ungalukku therincha pathil solunga frds.

மூன்று மாதத்திற்கு வேண்டாம் பா. நான் Class போகலை. வீட்டில் கொஞ்சம் நேரம் தைக்கலாம்னு நினைச்சேன் ஆனால் முடியல. நல்லா இருக்குற உடம்ப நம்மலே கெடுத்துக்க வேணாம் பா. Class தான அதை எப்போனாலும் போயிக்கலாம் கத்துக்கலாம் முதலில் குழந்தை தான் முக்கியம்.

//ippa na conceiva irukkum pothu thaikkalama// :-) கேள்வி தெளிவா இல்லையே! ;)

தையல் - கையால தைக்கலாம், மெஷின்ல காலால அடிக்கலாம், மெஷின்ல மோட்டர் போட்டு தைக்கலாம். குழந்தைக்கான துணிகள் / தலையணை / ஜாக்கட் / கடைக்கு பெரும் தொகுதியாக தைச்சுக் கொடுக்கிறது / தையல் பிரிஞ்சு போன துணி... எதைக் கேட்கிறீங்க!! :-)

காலால மெஷின் அடிக்கப் போறதா இருந்தால் கூட தொடர்ந்து அதிக நேரம் கடகடவென்று அடித்தால் தவிர ஒன்றும் செய்யாது. நான் ஸ்பீடாவே தைத்திருக்கிறேன். ஒன்றும் ஆனதில்லை. கவனமாகத் தைக்கலாம். நீங்கள் பழகுகிறீர்கள். அப்படியானால் பெரிய தையல் தைக்க மாட்டீர்கள். இருந்தாலும் யோசிக்கிறீர்கள். :-)

பொதுவாக தாயாக இருக்கும் போது ஆரம்பத்தில் குழந்தைக்கான துணி தைக்கிறது, தலையணைக்குப் பஞ்சு அடையுறது எல்லாம் செய்ய விட மாட்டாங்க பெரியவங்க. பஞ்சு - அலர்ஜி ஆகி தும்ம வைக்கும் என்பதாக இருக்கலாம். இப்போல்லாம் சின்னவங்க பொதுவா முதல் 3 மாதங்கள் நிறைவடையும் வரை மிக நெருங்கினவங்களைத் தவிர யாருக்குமே கர்ப்பமா இருக்கிற விஷயத்தை சொல்றது இல்லை. காரணம் இது நிச்சயமில்லாத காலம். அந்தக் காலத்தில் குழந்தைக்கான தையலை ஆரம்பிச்சுட்டா பிறகு தப்பிப் போச்சுன்னா தயாராக்கி வைச்சதை எல்லாம் பார்க்கப் பார்க்க தாயாக இருந்தவங்களுக்கு மனக் கஷ்டம். மனக் கஷ்டம்.. தொடர்ந்து மீண்டும் கர்ப்பமாகிறதை தாமதமாக்கலாம். மற்றப்படி வேறு காரணங்கள் இராது. முன்பு தரையில் உட்கார்ந்து துணி வெட்டி தரையிலயே இருந்து கையால தைச்சு முடிக்க... நிறைய நேரம் ஒரே பொசிஷன்ல உட்கார்ந்த மாதிரி இருக்க வேணும். அதனால இடுப்பு, முதுகு வலி வந்திருக்கலாம்.

இப்போ அப்படியில்லை. வசதியாக மேசை, குஷன் கதிரைகள் எல்லாமே இருக்கு. மோட்டர் மெஷின் இருந்தால் தாராளமா தைக்கலாம். எந்தப் பிரச்சினையும் வராது. தொடர்ந்து மணிக் கணக்காக உட்காராமல் இடையில் எழுந்து காலுக்கு கொஞ்சம் நடை கொடுத்தால் போதும்.

//doctor ta ketenga thaiyal class poitu irukkennu sonnenga doctor continue panunga oru problemum illa nenga malaiyai eralam no problem// ஆமாம், அவங்க சொன்னது சரிதான். :-) உங்கள் சக்திக்குட்பட்ட எந்தக் காரியத்தையும் செய்யலாம். எதுவும் ஆகப் போவது இல்லை.

//class pogaventamnu// க்ளாஸ்... என்ன விதமான க்ளாஸ்? கை எம்ப்ராய்டரியா? மெஷின் எம்ப்ராய்டரியா? கட்டிங் வெட்டுறதைப் பற்றியா? இதெல்லாம் பிரச்சினையா இருக்கக் கூடாதே! கற்றல்... பிரச்சினையாகவே இராது. //thitturanga.// :-) அவங்க பயம் என்னன்னா... ஏதாவது ஆனா... ஊர்ச்சனம், "அம்மான்னு இருக்கிறவங்க அட்வைஸ் பண்ணாம என்ன பார்த்துட்டு இருந்தாங்க?" என்று அம்மாவைக் கேள்வி கேட்ப்பாங்க இல்லையா! கர்ப்பமா இருக்கிறது நீங்களா இருந்தாலும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கு இல்ல! அந்தப் பயத்துல ஓவரா ப்ரொடெக்ட் பண்ணப் பார்க்கிறாங்க. :-)

//baby ku problem // ஆகாது. நீங்க ஒண்ணு பண்ணுங்க. மெஷின்ல காலால அடிக்காத மாதிரி மோட்டர் ஒன்று வாங்கிப் பூட்டிக்கங்க. ரொம்ப விலையா இருக்காது. (வாங்கிட்டா பிறகும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.) பிறகு அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஆரம்பிச்ச க்ளாஸை இப்ப முடிக்காட்டா பிறகு குழந்தையோட இருக்கும் சமயம் திரும்ப கத்துக்க சான்ஸ் கிடைக்காது. விருப்பட்டு ஆரம்பிச்சதை படிச்சு முடிச்சுருங்க.

~~~
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே நீங்க. Oru doubt என்று போட்டிருக்கிற தலைப்பை, கர்ப்ப காலத்தில் தையல் வேலை - என்று மாற்றி விடுறீங்களா? த்ரெட் நீங்க ஆரம்பிச்சது. உங்களுக்கு மாற்றும் ஆப்ஷன் இருக்கும். இதைக் காப்பி பண்ணிப் போடுங்க. முன்கூட்டியே என் நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

imma amma rompa nandri . nan ippa than thaiyyal class starting poitu irukken paper la thaithu palakitu ippathan pandice thaithu kitu iruken ma. enga vitla innum mechine vankala. inimele than ma vanganum.na rompa asaiya intha class poitu iruken ma . eppadiavathu ippa na thaiyal palakavillai endral na ini palaka chance illa athikam . kolanthai piranthavudan poga chansay irukathu athan ma payama irukku. but ippa na freeya than irukken ma 6 month kulla kathuka mudium.so ethum problem illaila amma. masama irukkum pothu kathukita next kolanthai piranthavudan vitlay en thaiyal thaithukalamnu oru idea . continue pannalamla amma.

நீங்க சொல்றது எல்லாம் சின்ன வேலைகள்தானே! இதுல என்ன இருக்கு குழந்தையைப் பாதிக்க? ஒண்ணுமே இல்லை. வேலைக்குப் போற பொண்ணுங்கல்லாம் கர்ப்பமான உடனே வேலையை விடுறதும் இல்லை; லீவு எடுக்குறதும் இல்லை. தொடர்ந்து வேலைக்குப் போய்ட்டேதான் இருக்காங்க கடைசி மாசம் ஆரம்பிக்கும் வரை. ஒண்ணும் ஆகுறது இல்லை. உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இராது.

//paper la thaithu palakitu// இனி பயன்படுத்த முடியாது என்று வைத்திருக்கும் சேலைகள் துப்பட்டாக்கள் பழகுவதற்கு அருமையானவை. துணி டெக்க்ஷர் சரியாக இருந்தால் இவற்றில் தைத்துப் பழகலாம். அவற்றை வீணாக்காமல் பயன்படுத்தின மாதிரியும் இருக்கும். எதற்கோ ஐடியா சொல்றேன் என்று தையலுக்கு ஐடியா சொல்றேன்ல!! :-) உங்கள் ஆர்வம் பிடிச்சிருக்கு எனக்கு. :-)

//inimele than ma vanganum// காட்டாயம் வாங்குங்க. வீட்டுக்கு ஸ்டவ் டீவீ போல மெஷின் ஒன்று கட்டாயம் இருந்தாகணும். சின்னச் சின்னத் திருத்தங்கள் எல்லாம் கையால உட்கார்ந்து தைக்கணும் என்கிற போது அந்த எண்ணமே வேலையைப் பின்போட வைக்கும். மெஷின் இருந்தா சட்சட்டென்று வேலை முடிஞ்சுரும்.

//ippa na freeya than irukken// அப்ப விட்டுராதீங்க. காலம் போனா வராது. படியுங்க. // ethum problem illaila// இல்லவே இல்லை. நீங்க பயமே இல்லாம படிக்கலாம்; தைக்கலாம். இதுக்கு இமா காரண்டி. :-)

//kolanthai piranthavudan vitlay en thaiyal thaithukalamnu oru idea // சூப்பர்! இது எவ்வளவு நல்ல யோசனை தெரியுமா? சின்னவங்க துணி தைக்கிறது சுலபம், ரசித்துச் செய்யும் வேலை. உங்க இஷ்டத்துக்கு ட்ரெஸ் தைச்சுப் போட்டு அழகு பார்க்கலாம். என் மூத்தவர் நான் வீட்டில் இருக்கிறப்ப குளிக்க வைச்சா உடனே புது ஜட்டி தைச்சுக் கொடுக்கணும். அதுவரை மெஷின் பக்கத்துல டவல் கட்டிட்டு நிப்பார். கண்ணுல படுற வெட்டுத் துணிகளைப் பொருத்தி டிசைனாக்கி தைச்சுக் கொடுப்பேன். பிறகு அவரே டிசைன் சொல்ல ஆரம்பிச்சார். அதன்படி தைக்கணும். அவங்க வளர வளர என் துணிகளோட ஷார்ட்ஸ், ஷர்ட் எல்லாம் தைக்க ஆரம்பிச்சேன். அவங்க ஸ்கூல் ட்ராமாவுக்கு காஸ்ட்யூம், விளையாட பொம்மைகள்... ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு அவங்களுக்கு உள்ளாடைகள் & பைஜாமா ஷர்ட் மட்டும்தான் தைச்சுக் கொடுக்க அனுமதி கிடைச்சுது. :-) இப்போ அவர் தேவைக்கு அவரே கர்ட்டன், மேசை விரிப்பு என்று தைச்சுக்கிறார். இவையெல்லாம் பெரிய வேலைகள் இல்லைதான். ஆனால் சின்ன வேலைக்கெல்லாம் கூலி கொடுத்துத் தைக்கணுமா என்கிற எண்ணம் அவருக்கு இருக்கு. தன்னால் செய்ய முடிகிறது என்கிற சந்தோஷமும் இருக்கு. இது என்னைப் பார்த்து வந்ததுதானே! :-)

//continue pannalamla amma. // தாராளமா பண்ணலாம். பயமே வேணாம். நீங்க மெஷின் வாங்கினதும் சொல்லுங்க. நான் தையலுக்கு கட்டிக் குட்டி ஐடியாக்கள் கொடுக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

imma amma thanks ma. ungal chella advice super amma. na continue panuven ini entha payamum enaku illa. I LOVE U AMMA.

மேலும் சில பதிவுகள்