IUI {Intra uterine insemination}

குழந்தைக்காக காத்திருப்போர் குழந்தையின்மை ,குழந்தையின்மைக்கான மருத்துவம் இவை பற்றி மிகவும் அலசி ஆராய கூடாது.ஆராய்ந்தால் நமக்கு ஏதோ பிரச்சனை இருப்பதுபோலவே தோன்றும் .இன்ன மருத்துவம்தான் இதற்கு
சரியான வழி என்று முடிவெடுக்கவும் அவசரப்பட்டு பக்கவிளைவுகள் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளவும் ஆரோக்கியத்தை கெடுக்கவும் ஏதுவாகி விடும்.உணர்வுகளுக்கும், ஹார்மோன்களுக்கும் ,கர்ப்பத்திற்கும் தொடர்புகள் இருப்பதால்
இயற்கயாக கருத்தரிக்கும் வாய்ப்பை நழுவ விடும் வாய்ப்பும் ஏற்படும்.

ஆனால் நமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியவும் டாக்டர்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்குமாக
சிலவற்றை மேலோட்டமாக விளக்குகிறேன்.

1. ஐ யு ஐ என்றால் என்ன?
ஆணிடம் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களை லாப் ல் சுத்தம் செய்து, அதிக உயிர்வாழும் அணுவை தெரிவு செய்து , பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளை போலிக்குள் ஸ்டடி மூலம் தெரிந்து கொண்டு
உரிய நாளில் நுண்ணிய குழாய் மூலம் பெண்ணின் கர்ப்பப்பை நோக்கி உட்தள்ளுவதாகும்.

2. ஐ யு ஐ செய்வதற்கான காரணங்கள் என்ன?
I.ஆணின் அணு பிரச்சனை .- ஐ யூ ஐ யில் தெரிவு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.ஆனால் அணு பாதிப்பு வீதம் அதிகமாக இருந்தால் அதாவது நீந்தும் திறன் 20 வீதத்திற்கும் உட்பட்டும் எண்ணிக்கை 1மில்லியனுக்கு குறைவாகவும் இருந்தால்
இந்த ட்ரீட்மண்ட் சரியான தீர்வை கொடுக்காது.ஆனால் கொடுக்கவே கொடுக்காது என்றில்லை.

II.தானம் பெற்ற விந்தணுவை உபயோகிப்பதற்கு ஐ யு ஐ செய்வார்கள்

III.காரணம் தெரியாத கர்ப்பமின்மை அதாவது தம்பதிகளுக்கு குழந்தை கிடைப்பது தள்ளி போய்க்கொண்டே இருக்கும் அதே நேரம் மருத்துவ சோதனைகள் செய்து பார்த்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.கருமுட்டை ஒழுங்காக வளரும்
அதனால் அதற்கு மாத்திரை ஊசி கொடுக்க முடியாது,கணவன் அணு எந்த பிரச்சனையும் இருக்காது,கருமுட்டை ஒழுங்காக வெளியேறும் ,மாதவிடாய் ஒழுங்காக இருக்கும் ஆனால்3,4 வருடங்கள் வரை இயற்கை கருத்தரிப்பு நடக்காமல் தொடரும்.
இந்த காரணத்திற்கும் மருத்துவர்கள் ஐ யு ஐ பரிந்துரைப்பார்கள்.இந்த பிரச்சனையை மையமாக கொண்டு செய்யப்படும் ஐ யு ஐ வெற்றி வீதம் மிக அதிகமாக இருக்கும்.

IV.endometriosis அதாவது கர்ப்ப சுவரை சுற்றி இருக்கும் திசுக்களின் தடிமம் அதிகமாகவும் பிறள்வாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கு மாத்திரை எடுக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறான காரணங்களுக்காக தொடர்ந்தும் மாத்திரைகள் எடுக்காமல் ,கருமுட்டை அளந்து ,வெளியேறும் நாள் கணித்து,திசுக்களின் லைன் ஐ அளந்து மாத்திரைகள் எடுத்து எல்லா சிரத்தையும் எடுக்கும் போது
அவ்வளவும் வீணாகி போய்விடக்கூடாது என்பதற்காக கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க ஐ யு ஐ ம் செய்து ,தம்பதிகளைகளையும் இணைந்திருக்க அறிவுறுத்துவார்கள்.

v. தம்பதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஐ யு ஐ செய்வார்கள்.அதாவது சிலர் தாமே முடிவெடுப்பார்கள் ,வயதை கருத்தில் கொண்டும்,பிறர் க்கு ஐ யு ஐ மூலம் கருத்தரித்ததை அறிந்தும்,வேலை நிமித்தம் மாதத்தில் பாதி நாட்கள்
பிரிந்து வாழவேண்டி வருவதாலும்,தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்களாலும் விரைவில் கருத்தரிக்க எண்ணி இந்த முடிவுக்கு போகும்போது மருத்துவர்களும் ஒத்துழைத்து ஐ யு ஐ செய்வார்கள்.

3. ஐ யு ஐ யின் வெற்றி வீதம் என்ன?
இது அவரவர் பிரச்சனைக்கும் வயதிற்கும் ஏற்ப மாறுபடும் .

4..உள்ளே அனுப்பப்பட்ட ஸ்பேம் வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதா?
ஒரு போதும் இல்லை.ஸ்பேம் ஐ தனியே உட் செலுத்த முடியாது ஒரு களிம்பு கலந்தே அனுப்புவார்கள்.அதுவே ஐ யு ஐ க்கு பின்னாலான நீர்க்கசிவிற்கு காரணம்.தவிர ஸ்பேம் ஒருபோதும் வெளியேறாது.

5. ஐ யு ஐ செய்யும்போது வலி இருக்குமா?
இல்லை .சிலர் சிறிய வலியையும் பெரிதாக எடுத்து குத்துது குடையுது என்பார்கள்.அவ்வாறானவர்களுக்கு கொஞ்சம் வலிப்பதுபோல் தெரியும் .ஆனால் வலியை சமாளிக்க தெரிந்தவர்களுக்கு இந்த வலி உணரும்படி இருக்காது.ஆனால் நுண்ணிய குழாய் மூலம் ஸ்பேம் ஐ உட் செலுத்தும்போது
கருமுட்டையை விரைவாக எதிர்கொள்ள வைப்பதற்காக முடிந்த அளவு அருகாமைக்கு இந்த ஸ்பேம் ஐ எடுத்து செல்ல இந்த ஐ யு ஐ செய்யும் நுண் குழாயில் சிறிது காற்றும் உட்செல்லுவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
இது வெகு சிலருக்கு ஒவ்வாமையையும் வயிற்று உபாதைகளையும் ஏற்படுத்தும்.கொஞ்சம் வயிறு பிடித்தால் போல் இருக்கும்.நாட்கள் நகர மறைந்து விடும்.ஆனால் அதிகமான தாங்க முடியாத உபாதைகள் கொடுக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
தவிர சின்ன சின்ன வலிகளை மனதை திசைதிருப்பி கண்டும் காணாமலும் போனால் நல்லது.ஒத்தடம் கொடுக்கிறேன் கை வைத்தியம் செய்கிறேன் என்றெல்லாம் ஆரம்பிக்க கூடாது.

6.ஐ யு ஐ ன்பின் இரத்தப்போக்கு இருக்குமா?
மிக மெல்லிய இரத்த கசிவு இருக்கும் .இது ஐ உ ஐ குழாயின் உராய்வினாலும் ,குழாயை செலுத்த பாதையை நோக்குவற்கு தசையை இழுத்து ஒரு கிளிப் மாதிரி பிடித்து வைத்திருக்க ஒரு டூல்ஸ் பயன்படுத்துவதாலும் ஏற்படும் .
மறுநாள் அல்லது 3 நாள்களுக்கு மேல் இருக்காது.தவிர மாதவிடாய் போன்று உதிரம் இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும்.

7..ஐயு ஐ ன் பின் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை எவை?
மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும் .அதிக பரபரப்பு கூடாது,மூச்சு பிடித்து பாரம் தூக்க கூடாது,அதிகம் குனிந்து நிமிர்ந்து செய்யும் எக்ஸசைஸ் செய்ய கூடாது.சுடு நீரில் குளிக்க கூடாது.உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
புதிய உணவுகளை முயற்சிக்க கூடாது , வயிற்று கோளாறு ஏற்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

8..ஐ யு ஐ எத்தனையாம் நாளில் செய்யப்பட வேண்டும்?

மாதவிடாய் ஆகி 10 ல் இருந்து 18 நாள்வரை. அவரவர் கருமுட்டை வளர்ச்சி அடைந்திருப்பதையும் கருப்பை தசை தடிமம் அதாவது எண்டோமட்டீரியத்தினையும் அடிப்படியாக வைத்து செய்வார்கள்.
கருமுட்டை வளர்ச்சி நாளுக்கு 1மில்லி மீட்டர் ல் இருந்து 2 மில்லிமீட்டர் வரை என்ற அடிப்படையில் 2.0 வை எட்டும் போது செய்வார்கள்.இருப்பினும் 19 இல் இருந்து 24 சைஸ் வரை ஐ யு ஐ யிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
ஆனால் 19 மில்லி மீட்டர் சைஸ் ற்கு குறைவான கருமுட்டை வெற்றி வீதத்தை குறைக்க வாய்ப்புள்ளது .அதுபோல் 20 ல் ஐ யு ஐ யை தவற விட்டால் கருமுட்டை வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் சரியான அளவாக 20 ஐ எடுத்துக்கொள்கிறார்கள்.

9. ஐ யு ஐ ன் பின் தாம்பத்தியம் அவசியமா?
ஆம் .மருத்துவர் பரிந்துரைப்படி அடுத்த நாள் இணைந்திருக்க அறிவுறுத்தபடுவீர்கள்.காரணம் ஸ்பேம் உயிர் வாழும் நேரம் 24 இல் இருந்து 72 மணித்தியாலங்கள்.சிலவேளை ஐ யு ஐ மூலம் அனுப்பிய ஸ்பேம் கருமுட்டையை சேர தவறினால் கூட
அடுத்தநாள் {ஐயுஐ செய்ததில் இருந்து 24 மணித்தியாலங்களுக்கு பின் 48 மணித்தியாலங்களுக்கு முன் }தாம்பத்தியத்தில் கருமுட்டையுடன் சேரும் வாய்ப்பை அதிகரிக்கவே இவ்வாறு அறிவுறுத்த படுகிறது

10.ஐ யு ஐ செய்து எத்தனை நாளில் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.?
உ ங்களுடைய கடைசி மாதவிலக்கு திகதி கடந்து 5 நாட்கள் சென்ற பின் இரத்தப்பரிசோதனை செய்து பார்க்கலாம்.வீட்டில் பிரக்னன்சி கிட் ல் பார்ப்பதாக இருந்தால் அதிகாலை முதலாவது யூரின் ல் பரிசோதித்து பார்க்கலாம்.

11.கர்ப்பம் ஆனால் எப்போது அறிகுறி தோன்றும்?
நீங்கள் ஹார்மோன் மாத்திரைகள் எடுப்பவராயின் மாத்திரைகளின் தாக்கமும் கர்ப்ப அறிகுறிகள் போலவே இருப்பதால் சொல்ல முடியாது.தவிர கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதால் புதிதாக ஏதோ அறிகுறிகள்
ஏற்படுவது போல் இருக்கும் .ஆனா உடல் எப்போதும் போலவே இயங்கிக்கொண்டிருக்கும் இதற்கு முன் உன்னிப்பாக கவனிக்காத காரணத்தால் அவற்றை உணர்ந்திருக்க மாட்டோம்.பொறுமையாக வழமைபோல் நாட்களை செலவிட்டு
பரிசோதித்து பார்க்கலாம்.

12.வெள்ளை படுதல் அதிகமாக இருக்குமா?
இல்லை வெள்ளை படுவது நோயல்ல. துர்நாற்றமும் பழுப்பு நிறமும் இல்லாத பட்சத்தில் அது எவ்வாறான எவ்வளவு அதிகமான வெள்ளைபடுதலாக இருந்தாலும் சாதாரணமே.கண்டு கொள்ள தேவையில்லை.

13.ஐ யு ஐ செய்வதற்கு எவ்வளவு செலவாகும் ?

இலங்கையில் மாத்திரை ஊசி டாக்டர் செலவு எல்லாம் சேர்த்து மொத்தம் 20 000 {இருபதாயிரம்} ரூபாய்

ஐரோப்பிய நாடுகளில் ஐ யூ ஐ செய்வதற்கான 75 வீத செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.டாக்டர் க்கும் பாமசிக்கும் பணம் செலுத்த வேண்டும் ஆனால் அரசாங்கம் உங்கள் தகுதி வேலை யை பொறுத்து
மீள செலுத்துவார்கள்உங்களுக்கு அதிகம் 25 யூரோ செலவாகலாம் ,சிலருக்கு எந்த கட்டணமும் கிடையாது.முழுவதும் இலவசம்.

கனேடிய அமெரிக்க நாடுகளில் நீங்கள் வசிக்கும் மாகாணங்களை பொறுத்து கட்டணம் இருக்கும்.உங்களுடைய தனிப்பட்ட இன்சூரன்ஸ் ஐ பொறுத்து செலவு இருக்கும்.கவர்மண்ட் டாக்டர் கட்டணம் தவிர எதையும் ஏற்றுக்கொள்ளாது.
600 முதல் 800 டொலர் வரை செலவாகும்.

இந்தியாவில் முழுக்க முழுக்க தனியார் சம்மந்தப்பட்டது.கட்டணம் ஹாஸ்பிட்டல்களை பொறுத்தும் ,உங்களுக்கு தேவையான ஊசி மாத்திரைகளை பொறுத்தும் இருக்கும்,சில ஹாஸ்பிட்டலில் விலை அதிகமான விட்டமின்கள் பரிந்துரைப்பார்கள்.
3 500 மூவாயிரத்து ஐநூறு முதல் 10 ஆயிரம் வரை செலவாகலாம்.

4
Average: 3.8 (20 votes)

Comments

Thank u so much akka... ohh nenkalum Srilankava?

Malai vempu kidaikkaddi satharana vempu kudikalam.

Om. Nanum srilanka than. Unka palaya post paththirukken.

Ohh really akka? Plz come to aratai pakkam.....

கடந்த 6ம் திகதி எனக்கு IUI செய்தார்கள். ஆனால் 7ம் திகதியிலிருந்து எனக்கு முதுகு வலி உள்ளது. இது சாதாரணம் தானா இல்லை ஏதாவது பிரச்சினை வருமா? தெரிந்தவர்கள் ஏதாவது ஆலோசனை கூறுங்கள்..

Plz reply me friends

நண்பிகளே யாராவது பதில் சொல்லுங்கள்...

5 வருடம் குழந்தை இல்லை....ஜனவரி 1அன்று iuiசெய்தேன்...38th day blood test 851miu...39th daybrown colour spotting இருந்தது....40 days scan பண்ணி பார்த்தேன் scan report thickned endomatrium...இது abnormal pragnancy symptoms ah பயமா இருக்கு...