மிகுந்த மன வேதனையில் உள்ளேன்.

தோழிகளே என் வயது 24 எனக்கு கல்யாணமாகி 4வருடம் ஆகிறது.என் அப்பாவின் உடல் நிலை காரணமாக சீக்கிரம் கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க. ஆனால் என் கல்யாணத்துக்கு 54நாட்கள் முன்னாடி இறந்துட்டாங்க. அதனால் என் கல்யாணமே திருப்தி இல்லாமல் என் அம்மா கூட என் கல்யாணத்தை பாக்கல அந்த அளவு கஷ்டம். எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரும்போதெல்லாம் என் அண்ணண திட்டுவாங்க என்னிடம் தான். அண்ணன் Drinks பன்னுவான் அதை வைத்து மட்டமா பேசுவாங்க. ஆனால் இப்போ அண்ணன் அந்த பழக்கத்தை விட்டு 2வருடம் ஆயிருச்சு. ஒரு தரம் சண்டை வந்த போது "உங்க அம்மா தான உங்க அப்பாவ கொன்னாங்க"ன்னு சொன்னாங்க அதை இன்னும் மறக்க முடில. நான் காரணம் இல்லாமல் சண்டை போட மாட்டேன். என்னவரும் அவர் நண்பருடன் குடி பழக்கத்தை அதிக படுத்த ஆரம்பித்தார். அதனால் தான் சண்டை போட்டேன். இப்படி சண்ட போட்டு தான் உங்க அப்பாவ உங்க அம்மா கொன்னாங்க. இப்ப நீ என்னை கொல்ல போர அப்படிதானன்னு கேட்டாங்க. இதை மாமியார்ட்ட சொன்னேன் அவங்கள திட்டிட்டாங்க.அதன் பிறகும் ஏதேதோ பேசிருக்கார். இன்றும் சண்டை வந்துச்சு கடன் இருக்கும் போது கிரிக்கெட்ல ப்ரண்ட்ஸ்குள்ள பெட் எதுக்கு கட்டுறீங்கன்னு திட்டினேன். நேற்று பைனல் மேட்ச் பெட் கட்டாதிங்கன்னு சொல்லியும் 5000 கட்டி தோற்றிட்டாங்க. பாப்பாக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும் ஏன் இப்படி பணத்தை செலவு பன்னுறீங்கன்னு கேட்டேன். இப்ப தான் ஸ்கூல் போக போறாள் பாப்பா. அவர் சம்பாத்தியம் மாமியார் கையில் தான் போகும். நான் கேட்டால் தான் எனக்கு பணம் தருவாங்க அதும் வேலை பார்க்குர லேடிக்கும் மல்லிகை சாமான் வாங்கவும் தான் கரக்டா இருக்கும். என் தேவைக்கு கூட காசு தர மாட்டக்கிங்க உங்க விளையாட்டுக்கு மட்டடும் இப்படி வீணாக்குறீங்கன்னு சொன்னேன். சம்பாத்தியம் ஒழுங்கா இருந்தால் தான் மனைவிட்ட கூட மதிப்பு இருக்காதுன்னு சொன்னேன் நான் சொன்னது தப்பா தப்பில்லையான்னு தெரில. அதுக்கு என் கணவன் அதனால தானே உங்க அப்பாவ கொன்னுட்டிங்கன்னு சொல்லுறாங்க. என் அப்பா சம்பாதிக்கலை ஆனால் ரொம்ப பாசமானவங்க. அப்பா குடிச்சி உடம்ப கெடுத்துகிட்டாங்க நான் அம்மா அண்ணன் தங்கைன்னு யார் சொல்லியும் கேட்கல. என் அண்ணன் தான் குடும்ப பொறுப்பை எடுத்து பார்த்தான். எனக்கு 75பவுன் நகை போட்டு கல்யாணமும் பன்னி வச்சான். மாப்பிள்ளை அப்பா தான் பார்த்தாங்க. அப்பாக்கு டாக்டர் 4மாதமும் இருக்கலாம்இல்லை 4வருடமும் இருக்கலாம்னு சொல்லிட்டாங்க அதனால் நான் 2ம் வருடம் கல்லூரி படிக்கும் போது அண்ணனுக்கு கல்யாணம் என் படிப்பு முடிந்ததும் எனக்கும் பேசிட்டாங்க. என் அப்பா இறப்பதற்கு முன்பு ஒரு நாள் "அப்பா உன் கல்யாணத்தை பார்க்காமல் போய்றுவேன்னு நினைக்குறேன்னு" சொன்னாங்க அதை கேட்டு ஏன்பா இப்படி சொல்லுறீங்கன்னூ அழுதேன். உடனே ஏம்மா அழுற அப்பா உன் கல்யாணத்தை பார்த்துட்டு உன் பிள்ளையெல்லாம் தூக்கி கொஞ்சிட்டு தான் போவேன்னு சொன்னாங்க. அது இன்னும் மறக்கலை இன்னமும் என்ட இப்படி சொல்லிட்டு என்னை ஏமாத்திட்டிங்களேப்பான்னு நான் அழாத நாட்கள் இல்லை. இப்பவும் என் பிள்ளையிடம் எங்க அப்பாவ பற்றி பேசுவேன். அவளும் என் அப்பா பெயர் கேட்டால் சொல்லுவாள். நான் அவங்கல பாக்கவே இல்லம்மான்னு சொல்லுவாள் நான் போட்டோவை காட்டி சொல்லுவேன். அப்படி இன்னமும் மறக்க முடில. ஏன் நானே எங்க அப்பாவ பாக்கனும்னு
எத்தனை நாள் அழுதுருக்கேன். என் கணவன் ஆறுதலா இல்லைன்னாலும் கஷ்டம் கொடுக்காமலாச்சும் இருப்பாங்கன்னு பார்த்தால் அவர் இப்படி பேசியே கொள்கிறார். எங்க அப்பா என்னையும் என் தங்கையையும் அம்மா அழ வச்சா கூட தாங்க மாட்டாங்க திட்டுவாங்க. அதிலும் என்னை அழ விடவே மாட்டாங்க. என் கணவன் என்னை வார்த்தையாலயே என்னை அழ வைக்கார். இப்ப கூட தூக்கம் வரல அப்பா நியாபகத்தில் அழுகிறேன் இது என்னவருக்கு கூட தெரியாது. என் கணவன் கூறிய வார்த்தைகளை மறக்க முடில அவரிடம் பேசவும் மனம் வரல.

எனக்கு ரொம்ப அழுகையா வருது. இவர் பேசியது எதுவும் என் அம்மாக்கு தெரிந்தால் தெரிந்தால் தாங்க மாட்டார். நான் இருக்கும் இடத்தில் எந்த பெண்ணும் இருக்க மாட்டாள். என் கணவன் 1மாதத்திற்கு முன்பு என்னை பார்த்து "நீ சொத்துக்காக தானே இங்கே இருக்க வேறு எதற்க்காக இங்க இருக்கன்னு" கேட்டார். எந்த சந்தோஷமும் இல்லைன்னாலும் வெளிக்காட்டாமல் மாமியாய் மாமனார்ன்னு எல்லாருக்கும் பார்க்க தான் செய்றென். நான் கோபித்துக் கொண்டு சென்றால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் குறிப்பா என் கணவனுக்கு அவமானம்னு யோசித்து அனுசரித்து போறேன். அப்படியே வெளியே போனால் அண்ணனுக்கு பாராமா இருப்பேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு நினைச்சுட்டு இருக்குர அம்மா மனசு தாங்காதுன்னு பல விஷயத்தை மனதில் கொண்டு இருக்குறேன்.
என் கணவன் கூட வாழ்ந்த வாழ்க்கைகக்கு என்ன அர்த்தம் இருக்குன்னு புரியல. இனி காலம் முழுதும் எதற்க்காக வாழ போறேன்னும் தெரில. அதற்காக என் கணவனை விட்டுப் பிரியவும் மாட்டேன்.

அன்புள்ள‌ திவ்யா உங்கள் பதிவுகள் பார்த்தேன். உங்களைப் பற்றிய‌
என் அனுமானம் தவறாகவில்லை. வாழ்க்கைப் பாதையில் நடக்கத்
தொடங்கியாயிற்று. கூடவே இரண்டு சின்னஞ்சிறு சிட்டுக்கள். அதை
மறக்கக் கூடாது. அவர்களுக்காக‌ வாழவேண்டும். கோபித்துக் கொண்டு
போகச் சொல்லவில்லை. தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
என் பள்ளி வாழ்க்கையில் உன்னைப் போல‌ பலரை குறைந்த‌ பட்சம்
30 ஆண்டுகளாக‌ என் மாணவியரில் பார்த்திருக்கிறேன். என்னால்
இயன்றவரை தவறான‌ முடிவுகளைத் தேடிப் போகாமல் தடுத்து உள்ளேன். இறையருளால் அவர்கள் அனைவரும் இன்றுவரை நன்றாகவே உள்ளனர். விட்ட‌ மூச்சை மீண்டும் உள்ளிழுத்தால் தான் நாம் மீண்டும் உயிர்வாழ்வோம் என்பதை மறக்கக் கூடாது. நல்ல‌
புத்தகங்களைப் படி, மனதை ஒருமுகப் படுத்து, நம்மால் தான் எதுவும்
முடியும் என்ற நினைப்பும், எதுவுமே நடக்கவில்லையே என்ற‌ நினைப்பும் இல்லாமல் இறையருளால் எதுவும் குறையின்றி நடக்கும்
என்னும் மன உறுதியோடு இரு. உனக்கு விருப்பம் இருந்தால்
சுந்தர‌ காண்டம் அல்லது கந்தசஷ்டி கவசத்தைத் தினந்தோறும் படி.
உன் கவலைகள் எல்லாம் நீங்கும், இதுவும் கடந்து போகும்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//சீக்கிரம் கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க//இல்லை திவ்யா 24 வயது சீக்கிரம் இல்லை சரியான வயதுதான். 4 வருடங்களுக்கு பின்னும் அப்பாவை நினைத்து அழுகை வருவது மிக சாதாரணமே. எத்தனை வருடங்கள் சென்றாலும் இழப்பு வலிக்கும்.
அதோடு நீங்கள் கர்ப்பமா இருக்கிறதால மனம் சோகமான நினைவுகளையே நாடி அழும்.

நான் என் தாய் தந்தை இறந்தபோது அழாத அழுகை என் பிள்ளைகளை தாங்கும்போது அழுதிருக்கிறேன்.பாக்க வேணும் மாதிரியே இருக்கும்.அம்மாக்கு நிறைய சொல்ல வேணும் மாதிரி இருக்கும்.என்ன செய்ய கடந்து போனவைகளை நோண்ட கூடாது .நல்ல பொழுது போக்குகளில் நேரத்தை
செலவிடுங்கள்.
செடிகள் வளக்க பழகுங்கள் .

சம்பவங்கள் நினைவுகளும் ரணங்களும் ஆகாமல் இருக்க வேணுமாக இருந்தால் நாங்கள் மனதில் வேறு சிந்தனைகளை நிரப்ப வேணும்.

மளிகை சாமான் கள் வாங்கும் போது போதாமல் வரும் என்று பயப்பிடாமல் உங்களுக்கும் ஏதாவது வாங்கி கொள்ளுங்கள்.
திட்டினால் காதில் விழுத்த கூடாது.

பழைய பொருட்களில் எப்படி கைவேலைகள் செய்யலாம் என்று பாருங்கள் .இங்கு வந்தும் கேக்கலாம் என்ன வச்சிருக்கிறீங்கள் அதில என்ன செய்யலாம் என்று.

//"உங்க அம்மா தான உங்க அப்பாவ கொன்னாங்க"ன்னு சொன்னாங்க அதை இன்னும் மறக்க முடில// இப்பிடி ஞாபகம் வைத்து கவலை படுவது ரெம்ப தப்பு.நின்மதி போயிடும்.

நீங்க எவ்வளவு ரியாக்‌ஷன் குடுக்குறீங்கள் என்றதை வச்சுத்தான் வார்த்தைகள் பிரச்சனைகள் தொடரும்.
பதில் சொன்னோமா சொல்லவில்லையா தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேணும்.உலகம் ரெம்ப பெரிசு. நமக்கு ஏற்ற மாதிரி சின்ன சின்ன பொழுது போக்குகள் சந்தோசங்களை ஏற்படுத்தி வாழ பழக வேணும்.இப்பிடி
ஆழ்மனசில பதிஞ்சு வச்சு புலம்ப கூடாது.
எனக்கு என்னமோ நீங்கள் கவலைகளையும் பிரச்சனையும் தவிர்க்காமல் மூழ்கி போகிற மாதிரி இருக்கு.தவறு. கோவத்தில வரும் வார்த்தைகளை பிடிச்சு வைச்சு கொண்டாட குடாது.முக்கியமா அது கணவன் அல்லது மனைவியாக இருந்தால்
கொஞ்சம் கூட மான ரோஷம் பாக்க குடாது.அப்பிடியா சொல்லிக்கோ.எனக்கு எந்த மன கஷ்டமும் இல்லை என்னுட்டு போயிட்டே இருங்கோ. காரணம் தவிர்க்க முடியாத நெடுங்காலம் கூட வரும் ஒன்றிணைந்த உறவு.

\\மேட்ச் பெட் கட்டாதிங்கன்னு சொல்லியும் 5000 கட்டி தோற்றிட்டாங்க\\
. சில சில சமயங்களில சில சில கெட்ட பழக்கங்கள் வந்து போகும்.அதை நிதானமா சுட்டி காட்ட வேணும்.கோவமான வார்த்தைகள் உறவுகளை திருத்தாது.நமக்கு வேண்டாம் என்பவர்கள் இடத்தில் மட்டும் தாரளமா குமுறி விட்டு
செல்லலாம்.
இது அப்படியல்ல வார்த்தைகளை வளர்த்து கோவங்களை வளர்த்து எவளவு முற்றினாலும் இதுதான் வாழ்க்கை என்று நீங்களெ சொல்லுறீங்களே .அப்பறமென்ன.கண்டும் காணாத மாதிரி உங்களுக்கு சில பொழுது போக்குகளை உருவாக்கி
குழந்தையை ஆசையா வளர்த்து சந்தோஷமா இருக்கலாமே.

Poongathaikannmmal:
அம்மா நான் வாழ்க்கையை முறித்துக் கொள்ள விரும்பலை. என் குழந்தைகளை நினைத்து தான் அமைதியாக இருக்கேன். என்னவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் மனது கஷ்டம் படாமல் பார்த்துக்கொள்வதும் அவர் கடமை தானே. கடவுளை தான் நம்பிட்டு இருக்கேன்.
Surejini:
எனக்கு 20வயதில் கல்யாணம் பா. இப்ப 24வயது. நான் எதையும் ரொம்ப மனதில் வைக்க மாட்டேன் பா. அவங்க என்னைப் பற்றி எவ்வளவோ திட்டிருக்காங்க. அதெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டேன். கோபம் வந்தாலும் பதிலுக்கு பேசிருவேன். அப்பாவ பற்றி பேசுனா அழுகை வந்துருது பா. நான் என் மனதை குழப்பிக்க மாட்டேன் பா. என்மேலயும் பாப்பா மேலயும் அக்கரையா இருக்க சொல்வேன். பாப்பா மனசுக்குள்ள ஏமாற்றத்தை ஏற்படுத்தாதிங்கன்னு தான் சொல்வேன். நானும் கை வேலைகள் தையல் பாப்பா கூட உட்கார்ந்து Blocks arrange பன்றது ஓடி புடிச்சி விளையாடுறதுன்னு எல்லாம் செய்வேன். படம் வரைதல் பெயின்டிங் கவிதை எழுதுரதுன்னு எல்லாம் செய்வேன் ஆனால் என் கணவர் ஏதாவது திட்டிட்டாங்ன்னா அதையே நினைத்துட்டு இருந்துரேன். அதை மாற்ற முடில. நான் நல்லா பாட்டு கேட்பேன் அதற்கு கூட மனம் போக மாட்டக்குது பா.

Nega pregnanta iruka intha timela ethayum ninasu feel panathanga.nama parents pathi pasurappa kandipa kovam varum.negalum pasitanga unga hubbyum pasitaru.athoda vitrunga.ini atha pathi pasathanga.ninagavum seiyathanga frd.don't worry.ellam sari agidum

Life Is Easy When U "Accept All"

குட் கேர்ல் அப்பிடித்தான் இருக்க வேணும்.இந்த சந்தோஷங்களைத்தான் உங்கள் மனசிலும் உங்களை சார்ந்தவர்களிடமும் அதிகம் பகிர்ந்து கொள்ள வேணும்.அப்போ நெகட்டிவ் எண்ணங்கள் தலைதூக்காது.இன்னும் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் கிடைக்கும் திவ்யா.உங்கள் கைவேலைகளை கொஞ்சம் பிஸ்னஸ் ஆக்க முடியுமா என்று பாருங்கள்.உங்கள் சம்பாத்தியம் கொஞ்சம் இருந்தால் பணவரவு என்பதை விட உங்களை சார்ந்தவர்களின் வார்த்தைகள் செயல்கள் எல்லாம் அதிகம் பாதிக்காது உங்களை.

உங்கள் கணவர் திட்டுவதை விடவும் நீங்கள் அதை ஒரு விஷயமா எடுத்து சோர்ந்து போறதுதான் பாப்பாக்கு அதிகம் பாதிக்கும்.காரணம் பேச்சின் அர்த்தங்கள் குழந்தைகளுக்கு புரியாது ஆனால் உங்கள் செய்கைகளை முழுக்க முழுக்க உள்வாங்கிக்கொள்வார்கள்.

முக்கியமாக அம்மாவின் ஒவ்வொரு செயலும் குழந்தையின் பழக்க வழக்கங்களில் சேர்ந்து கொள்ளும்.

நாளை உங்கள் மகள் எதையும் சமாளிக்க கூடிய வார்த்தைகளுக்கெல்லாம் ஒடிந்து போகாத பெண்ணாக வர வேண்டுமென்றால் அதை உங்கள் மூலம் வெளிப்படுத்தி காட்டுங்கள் .வராவிட்டால் கொஞ்சனாள் மகளுக்காக நடியுங்கள் .பின்னால் அதுவே உங்கள் குணமாகி விடும் .உங்களுக்கும் நின்மதி கிடைக்கும்.

.உங்கள் அன்பான கணவர் தானே திட்டுகிறார்.அவரும் உங்கள் குடும்பம்தானே.பிறகென்ன? உங்கள் குடும்பத்தை நேரே அவரவரை கூப்புட்டு திட்டுகிறாரா இல்லையே .அதாவது உங்களை திசை திருப்புறதுக்கும் ஆப் பண்ணுறதுக்கும் அது நல்ல பலனளிக்கும் என்று தெரிந்து செய்வார்கள் சிலர்.இதுக்கு உங்களை மாற்றினால் போதும் என்று நினைக்கிறேன்.

தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட அதிகமாக அவர் செய்யும் நல்ல விஷயங்களை நிறைய தடவை புகழுங்கள் .அப்பா முன்னாலேயே மகளுக்கும் சொல்லுங்கள்.அதன் பிறகு நீங்கள் சொல்வதுஎல்லாத்துக்கும் மதிப்பு கிடைக்கும்.

உங்கள் ஆக்டிவிட்டிஸ் எல்லாம் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.ரெம்ப சுறுசுறுப்பான பெண்ணாகத்தான் இருக்குறீங்கள் இந்த பலம் போதும் நீங்கள் இன்றிலிருந்து சந்தோஷமாக உங்களை மாற்ற.அப்பா திரும்பி வரமாட்டார் .கணவர்தான் எப்போதும் கூட வருவார்.கண்ணை துடையுங்கோ.

இனிமேல் நொய்ய் நொய் ந்னு அழுது புலம்ப குடாது.18 வயசு முடிஞ்சால் அதுவும் திருமணம் ஆகினால் அதிலும் குழந்தைகளுக்கு பெற்றோரும் ஆகினால் எல்லோரும் பொறுப்புள்ள பெரியவர்கள்தான் .

நல்லா சாப்பிடுங்கோ .விளாடுங்கோ .சந்தோஷமா இருங்கோ.

நானா இவளோ நீளமா தட்டினான் என்று தெரியவில்லை .உங்கள் பதிலை பாத்து இம்ஸ் நீளமா எழுதி பதில் கொடுக்க இந்த திவ்யா எனக்கு நன்றி சொல்லுறா என்று நினைத்தேன்.

பாத்தீங்களோ மீ க்கு எவளோ மறதி எண்டு.மறதி நல்லது.

உங்கள் பதிலை படித்ததும் ரொம்ப சந்தோஷமாவும் தன்னம்பிக்கையாவும் இருக்கு. என்னோட இரண்டாவது குழந்தை பிறந்து அவங்க கொஞ்சம் வளர்ந்ததும் என் கணவனின் வியாபார விஷயங்களை கவனிக்கனும்னு இருக்கேன் பா. இன்னும் 2வருடம் கழித்து என் கையிலும் வருமானம் வர மாறி பார்க்கனுபா.

என் கணவர் எதைனாலும் சொல்லிகாட்டுகிறார். வீட்டு வேலைக்காக ஆள் வைத்தேன் எப்போதும் அதை சொல்லிக்காட்டுகிறார். என் கையில் ஒழுங்காக பணம் கொடுப்பதில்லை. வேலைக்காரங்களுக்கு 150ரூ. மல்லிகை சாமான் காய்கறி எல்லாம் மாமனார் வாங்கி தருவார் ஆனால் சில சமயம் அவருக்கு நேரம் இல்லாத நேரம் என் கையிருப்பை தான் பயன்படுத்துவேன். எல்லாம் போக எப்போதாவது தான் என் கையில் 100 அல்லது 200 இருக்கும். அதையும் சில நேரம் கணவர் வாங்கிடுவார். . நான் தற்போது பிரசவத்துக்கு பின்னால் தேவைப்படும் உள்ளாடை மற்றும் நைட்டி வாங்கினேன். கணவரின் உரிமையோடு அவர் தான் என்னால் வெளிய வர முடியாது ஆன்லைன்ல வாங்க்கோன்னு சொன்னாங்க நான் 900ரூ வாங்கினேன். அதை இன்று ஒரு சின்ன பிரச்சனையில் என் மாமனாரிடம் அவள் ஆன்லைன்ல நிறையா வாங்கி பணத்தை செலவு பன்னுறா அவ செல்ல உடைச்சுட்டா சும்மா இருப்பான்னு திட்டுறாங்க. நான் செலவு அதிகம் பன்னுறவள் அல்ல. என் பிள்ளையின் பிறந்தநாள் அன்று அவளுக்கு ஏதாவது வாங்கலாம் என்று நினைத்தால் என் கையில் இருப்பதோ 100ரூ மட்டும் அதில் செயின் நெயில் பாலீஸ் பொட்டு கம்மல் எல்லாம் வாங்குனது போக 15ரூ மிச்சமும் பிடித்தேன். அவளுக்கு வளையல் வாங்க முடியல. இப்படி தான் இருக்கேன் இதுல நான் செலவு பன்னுறேன்னு சொல்லுறாங்க. என் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியல. நான் வேலை ஆளை நிறுத்திவிட்டு அந்த பணத்தை எனக்கு தாங்கள் எனக்கும் என் பிள்ளைக்குமான செலவுகளை பார்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். இது சரியா? கொஞ்சம் அசதியா இருந்து சமையலை சிம்பிலா முடித்தால் வேலைக்கு ஆள் வச்சும் உன்னால எதூம் செய்ய முடியாதான்னு கேட்பார். கீரை காய்கறி என்று செய்வேன் ஆனால் அவருக்கு அது பிடிக்காது வெள்ளி செவ்வாய் அசைவம் எடுக்க மாட்டோம். நான் யோசிப்பது சரியா? எப்போதும் சொல்லி சொல்லி காட்டி படுத்துறாங்க. எனக்கு கஷ்டம் தான். நான் எப்படி போனாலும் பரவாயில்லை அவரிடம் எதையும் எதிர்பார்க்க கூடாதுன்னு தோனுது. தனக்கு என்றால் எவ்வளோனாலும் செலவு பன்றார் எனக்கும் பிள்ளைக்கும் என்றால் சண்டை தான் வருகிறது.

இன்று நேரம் அதிகம் இல்லை. சுருக்கமாக... வீட்டிலிருந்து ஏதாவது செய்து பணம் ஈட்ட முடியுமா என்று பார்க்கலாமே!

‍- இமா க்றிஸ்

திவ்யா முதலில் குடும்பத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் மூன்றாவது மனிதர்களிடம் ஒப்புவிப்பதும் அபிப்பிராயம் தேடுவதும் தவறு.
அடுத்தவர்கள் புலம்பினால் உசுப்பேத்தி விட்டு கேட்க நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் அது உங்கள் பிரச்சனைக்கு நிவாரணம் ஆக இருக்காது.
பல நல்ல அம்மாக்களை பார்த்தீர்களானால் பெண்கள் திருமணம் ஆகி போன பின் எல்லா பிரச்சனைகளை யும் குறைகளையுமே சொல்லிக்கொண்டிருந்தால் திட்டுவார்கள் காரணம் அவர்களுக்கு தெரியும் எல்லாவற்றையும்
செவிமடுத்து அபிப்பிராயம் சொன்னால் தொடர்ந்தும் இதையே செய்வார்கள் குடும்பம் உருப்படாது என்று.

எங்களுக்கு நீங்கள் சொல்வது மட்டுமே தெரியும் மறுபக்கம் தெரியாமல் பதில் சொல்லிக்கொண்டிருப்போம் நீங்களும் உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனைககள் எல்லாம் குடும்பத்தில் ஏற்படுவதாக நினைத்துக்கொள்வீர்கள்.
மன உளைச்சல் அதிகமாகும்.

மேலோட்டமாக பார்க்கும்போதே நீங்கள் உங்களை எவ்வளவு நியாயப்படுத்தி சொல்லியும் என் பார்வையும் உங்களில் பிழை தெரிகிறது.

கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் .என்னுடன் இப்படித்தான் பேச வேண்டும் .என் பொருதார தேவைகளை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அதுபற்றி பேசகூடாது என்றெல்லாம் நினைப்பதை விட வார்த்தைகளை திட்டுகளாகவோ
பிரச்சனையாகவோ எடுத்துக்கொள்ளாமல் விடுங்கள்.

முதலில் பெண்கள் எந்த வருமானமும் இல்லாமல் கணவனை நம்பி இருந்தால் பிரச்சனை இல்லாவிட்டாலும் நிறைய பிரச்சனைகள் உள்ளதுபோல் தோன்றும்.

அப்பா அம்ம கூட நாம் அவர்கள் பொருளாதாரத்தில் தங்கி இருக்கும்போது இந்தா என்னவாச்சும் உன் இஷ்டத்துக்கு செய்துக்கோ நான் வாயே திறக்கமாட்டேன் என்று விடமாட்டார்கள் .நாங்கள் சிக்கனமாக இருந்தால் கூட.
இது உனக்கு தேவையா?எதுக்கு எருமை போனை போட்டு உடைச்சா இப்ப வீண் செலவு பார் அப்டி என்பார்கள்.

அதை ஏற்றுக்கொள்ள முடிந்தால் இதை ஏன் திட்டாகவும் கெளரவ பிரச்சனையாகவும் எடுத்துக்கொள்கிறீர்கள்.

உரிமையுடன் கணவர் பொருளாதாரத்தில் தங்கி இருக்கும் நீங்கள் எதாவது வார்த்தைகள் சொன்னால் அதை வேற்றுமையாக எடுத்துக்கொள்வது ஏன் .எனக்கு பிரியலையே.

ஒன்று மட்டும் உண்மை நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதிக்கு மேல் நாம் கற்பனை பண்ணிக்கொள்பவையே.இது அடிக்கடி எனக்கே நான் சொல்லி கொள்வது.

மேலும் சில பதிவுகள்