தாய் பால் கோடுகலாமா

நான் இப்பொழுது 2 வது குழந்தை உண்டாயிருக்கேன்.2 மாதம் ஆகிறது. என் 1 குழந்தைக்கு 1 வயது ஆகிறது. நான் இப்பொழுது தாய் பால் கொடுக்கலாமா என் குழந்தைக்கு.

//குழந்தைக்கு 1 வயது ஆகிறது.// அப்படியானால் திட ஆகாரங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்க வேண்டும் நீங்கள். அவற்றோடு பார்முலா பால் சேர்த்துக் கொடுக்கலாம். தாய்ப்பால்தான் வேண்டும் என்பது இல்லை.

இனிமேல் நீங்கள் பாலூட்டுவதை நிறுத்துவதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது, உங்கள் இரண்டாவது குழந்தைக்கும் நல்லது.

‍- இமா க்றிஸ்

ஆமா அம்மா.இப்போது எல்லா உணவு கொடுப்பேன்.ஒகே அம்மா.நன்றி.

எப்படி பால் கொடுப்பதை நிப்பாட்டுவது.சொல்லுங்கள் அம்மா

நீங்கள் பாலூட்டும் நேரம் வரும் முன்னால் குழந்தைக்கு வயிறு நிறைந்து இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அழுவாங்க தான். அது பாலுக்கான அழுகையோ பசிக்கான அழுகையோ இல்லை; அம்மாவின் அருகாமைக்கான அழுகை. கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு எட்ட இருங்கள். வேறு வழியில்லாமல் சமாதானமாகுவார். விருப்பமான வேறு ஏதாவது ஒன்றை வைத்து பராக்கு காட்டுங்க. முடிந்தால் அழும் போது நீங்க முன்னால இருக்காம வேற யாரையாவது விட்டு குழந்தையைப் பார்க்க வைங்க.

‍- இமா க்றிஸ்

சரி அம்மா. முயற்சி செய்கிரேன்

அம்மா நான் என் குழந்தைக்கு பால் நிறுத்தி விட்டேன்.ஆனால் இப்போது எனக்கு பால் கட்டுகிறது.
பால் கட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.உதவி பன்னுங்கள் அம்மா.

///பால் கட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.// ;( தெரியாது.

உங்களுக்காக தேடி எடுத்தேன். படிச்சுப் பாருங்க.
www.arusuvai.com/tamil/node/27642
www.arusuvai.com/tamil/node/16702
www.arusuvai.com/tamil/node/20331
நான் படித்துப் பார்க்காமல் கொடுக்கிறேன். பதில் கிடைக்காவிட்டால் திட்டக் கூடாது. :-)

அனேகம் தானா சீக்கிரம் சரியாகிரும். ரொம்ப சிரமமா இருந்தா டாக்டர்ட்ட கேளுங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா.சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்கிரேன் அம்மா.நிரய பேர் அதான் சொல்லி இருகாங்க.

மேலும் சில பதிவுகள்