பிரசவத்துக்குப் பின்னான‌ பத்தியம்

எனக்கு இப்போது 37 weeks. பிரசவத்துக்கு பின்னான‌ பத்திய‌ முறை பற்றி யாராவது கூற முடியுமா? யாழ்ப்பாண‌ முறைதான் எனக்கு தேவை. day by day chart எனில் எல்லோருக்கும் உதவும் என‌ நினைக்கிறேன்.இமா அம்மா, சுரேஜினி அல்லது யாராவது தோழிகள் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். Thanks in advance.

gajany யெஸ்ஸ்ஸ் கண்டிப்பா பிரார்த்திக்கிறோம். மீ அடிக்கடி ஆர் பிறே பண்ண சொன்னதெண்டு பேர் மறந்துடுவன்.ஆனாலும் பிறே பண்ணுவன் .பட் நம்மட இம்ஸ் இங்க உள்ள எல்லாருக்கும் ஆக பிறே பண்ணுறவா கவலைப்படாதீங்கோ .குழந்தை முகத்தை பாக்க அருகில வந்துட்டன் நு நினைச்சாலே எல்லா பயமும் போயிடும்.

இம்ஸ் எனக்கும் அதேதான் நடந்தது எவளவு கஷ்டபட்டு செய்து டி எச் எல் ல அன்பா பாசல் போட்டிருக்கினம் சாப்பிடுவோம் எண்டு சாப்பிட்டுட்டு குழந்தை அழ அழ மீ விட்டுட்டு ஓடுறது.

இங்கயும் வேற நாட்டு டாக்டர்ஸ் என்னத்தை திங்குறோம் எண்டு தெரியாமல் சாப்பிடவேணாம் எண்டு சொல்லவும் பயத்தில அவரவர் நம்பிக்கை எண்டுட்டு டாப்ளட்ஸ் களை எழுதி தருவினம் பட் தமிழ் டொக்டர்ஸ் ரெம்ப திட்டுவினம்.

சாதாரணமா சிந்திச்சு பாத்தாலே புரியும் அந்த சரக்கு பத்தியம் ல என்ன சத்து இருக்கு அது காயத்தை மாத்துமா வயித்தை கிளீன் பண்ணுமா எண்டு.அதைச்சாப்பிட்டு இருக்குற எனேர்ஜியையும் குறைக்கினம் எண்டு நினைப்பன் நான்.

அண்ட் கஜனி நீங்கள் சாதாரணமா சாப்பிடுறது கொஞ்சம் வேற .நானும் சுவைக்காக ஞாபகம் வந்தா வருசத்தில 2 தடவையாவது சாப்பிடுவேன்.
பத்தியம் க்கு காரம் சேர்க்க கூடாது .எதுக்கும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு வையுங்கள்.

//என்னுடைய‌ முக்கிய‌ குழப்பம் யாதெனில் குழந்தை கிடைத்த‌ முதல் நாள் என்ன‌ சாப்பிடலாம் 2ம் நாள் என்ன‌ சாப்பிடலாம் என்பது தான். a day by day chart மாதிரி இருந்தால் நல்லது என்று நினைத்தேன். //

ஸ்டீம் வெஜிடபிள்ஸ்,பிரெட்,டெய்லி சூப் குடியுங்கோ ,புள் கிறீம் மில்க் எடுங்கோ ஒரு நாளைக்கு 2 தடவை,ஒட்ஸ் நல்லது,அயன் அதிகமுள்ள தானியங்களை இப்பவே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்,இரத்தப்போக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஈடு செய்ய வும் பாலூட்டவும் குழந்தையை பராமரிக்க தேவையான எனெர்ஜி யை பெறவும் நல்ல பச்சை காய்கறிகள்,தானியங்கள் ,பால் எல்லாம் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சில தவிர்க்க வேண்டிய காய்கறிகள் இருக்கு கோவா,பீன்ஸ் போன்றன .அதயும் பாத்து ஞாபகத்தில வச்சுக்கொள்ளுங்கோ.

நீங்க என்ன சட் போட்டு வைச்சாலும் அந்த நேரம் மனம் சொல்லும் உங்களுக்கு எது வேணுமெண்டு.ஹி ஹி ஹி

// Pls share ur feel pa//

உங்களுடைய கவலையும் மன வேதனையும் புரிகிறது.கவலைப்பட வேண்டாம் சரியாகிவிடும்.அடுத்தவர்களின் இழப்புக்களின் அனுபவங்களை கேட்பதை விட உங்களுக்கு என்ன டவுட் என்று குறிப்பாக கேட்டு தெளிவு படுத்துவதே சிறந்தது.

பாதிக்கப்பட்டவருக்கும் காயங்கள் புதிப்பிக்கப்படும் .உங்களுக்கும் தேவையற்ற பயம் வரும்.

முடிந்தளவு மனதை வேறு விடயங்களில் திசை திருப்பினால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கஜனி.... ஆஷாவின் போஸ்ட்ட வாசிச்சன். சொல்ல நினைச்சது... ஆஷாவுக்கு நானே பதில் சொல்லுறன். நீங்கள் இப்ப பழசை எல்லாம் நினைச்சுப் பார்க்க வேணாம். கொஞ்சம் மனசு எனேஜி குறைஞ்ச மாதிரி ஆகீரும். சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆஷா விளங்கிக் கொள்ளுவா. குறை நினைக்க மாட்டா.
~~~
//Contact iruntha andha karu athu vave veliya vanthurumapa.// இது... உங்கள் டாக்டரைக் கேட்டுக்கொள்வது தான் நல்லது ஆஷா. ஊங்களுக்கும் புரியும்படி விளக்குவார். //share ur feel pa.// & //Gajany ethanavathu daysla surgery panega.// இப்போ கஜனிய விட்டுரலாம்ங்க. கஷ்டத்தை அனுபவிச்சவங்க நீங்க. உங்களுக்கு சிரமம் புரியும். அவங்க பழசையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்காம இருக்கிறதுதான் நல்லது. புரிஞ்சுப்பீங்க என்று நினைக்கிறேன்.

உங்களுக்கும் எல்லாம் சீக்கிரம் நன்மையாக அமையும் ஆஷா. உங்களுக்காகவும் சேர்த்து தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். கவலைப்படாமல் இருக்கணும் நீங்க.

‍- இமா க்றிஸ்

உப்ஸ்ஸ் இம்ஸ் பதில் எதையும் வாசிக்காமல் அதே நேரம் அதே பதிலை மீ யும் தட்டி விட்டுட்டன்.மன்னிப்பு வழங்கவும்.

;))) நான் இங்க மல்டிடாஸ்க்கிங். என் பதில் வர முதல் உங்கடது இங்க வந்தாச்சுது.

//மன்னிப்பு வழங்கவும்.// நோப், நோ மான்னிப்பு. ;)) பிழையாக விழுந்த ஒரு ஊ-வை உ ஆக மாற்றப் பார்த்தால்.... எனக்கு அனுமதி இல்லையாம். எல்லாம் உங்களாலதான். ;D)

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ கஜனிக்கு இறையருளால் சுகப் பிரசவமாக‌ நடக்க‌ வேண்டுகிறேன். நீங்கள் கனடாவில் இருப்பதால் அங்கே கிடைக்கும்
மருந்துப் பொருள்களையே பயன்படுத்துதல் நல்லது.
அதற்கான‌ உணவு முறைகளையும் மருந்துகளையும் பேறுகாலம், குழந்தைகள், மருத்துவம் பகுதிகளில் சென்று பாருங்கள். உங்கள்
மனதிற்குப் பிடித்து எதைப் பயன்படுத்தலாம் அங்கே எது கிடைக்கும்
என்று பார்த்துப் பயன் படுத்தலாம்.
சமையலில் புது மிளகாய், புதுப் புளி கூடாது, இவை உடலுக்கு அதிக‌
சூட்டைத் தருவனவாகும். நாரத்தங்காய் உப்பிட்டது மிகவும் நல்லது.
உண்ட‌ உணவு நன்கு சீரணமாகும், வாய்வு தங்காது, வாந்தி வராமல்
தடுக்கும். பூண்டு எவ்வளவு சேர்க்க‌ முடியுமோ அவ்வளவு சேர்ப்பார்கள்.
உடலுக்கு நல்லது என்பதுமட்டுமல்ல‌ குழந்தைக்குப் பால் தேவைக்கு
அதிகமாகவே கிடைக்கும், தென்னகத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு (வெற்றிலை போடுதல் ) கட்டாயம். காரணம் உண்ட‌ உணவு செரித்தல், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான‌ கால்சியம் சத்து பிறந்த‌ குழந்தைக்கும் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட‌ இரும்புச் சத்து இழப்பினை தாய்க்கு மீண்டும் ஈடு கட்டுதலுக்கும் தேவை. குறைந்தது
ஒரு நாளைக்கு 25 வெற்றிலையாவது தின்பார்கள்.( ஒரு பழமொழி‍‍‍
ஆடு தழை தின்பது போல‌ என்று கூறுவார்கள்) வாய்வு தங்காது.
பாக்கின் துவர்ப்பு வயிற்றுக் கிருமிகளைக் கொன்று விடும், வயிற்றுப்
புண்ணை ஆற்றும்.
பிரசவ‌ லேஹியம் என்று ஒன்று சித்தா, ஆயுர்வேதம் இரண்டிலுமே
கிடைக்கும். உங்களுக்குப் பிடித்தால் ஏதாவது ஒன்று வாங்கிப் பயன்படுத்த‌ உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான‌ அனைத்துமே
(உடல் சோர்வு, சளி, சுரம், செரிமானமின்மை, பூச்சித் தொந்தரவு
இவை போன்ற‌ அனைத்திற்குமே நல்ல‌ மருந்து. அங்கே கிடைத்தால்
வாங்கலாம், அல்லது இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் வாங்கி வரலாம், மருந்து காரம் என்று உணர்ந்தால் தேனும், நெய்யும் கூட‌
சேர்த்து உண்ணலாம். அதே போல‌ குழந்தைகளுக்கான் (உரைமருந்து) அதையும் சில‌ பெற்றோர்கள் இங்கிருந்து வாங்கிச்
செல்வதைப் பார்த்திருக்கிறேன். முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்தினால் (வயிற்றில் சந்தணம் போல‌ முடக்கத்தான் கீரையை
அரைத்துப் பூச‌ சுகப் பிரசவம் ஆகும். சித்தமருத்துவம்).
நாட்டு மருத்துவம் பகுதிகளைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.
என் பதில் நீண்டு விட்டது. நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்