வெஜிடபிள் கிரேவி

தேதி: February 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கு ஏற்ப
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பட்டாணி, பீன்ஸ், காரட் - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி கொள்ளவும். நறுக்கியவற்றில் சிறிது வெங்காயம் எடுத்து அதனுடன் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் 3 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி மீதி வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பிறகு அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு காய்கறிகள் சேர்த்து, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வேக விடவும்.
இப்பொழுது கிரேவி போல் திரண்டு வரும். கிரேவி சற்று அதிகம் தேவை என்று நினைப்பவர்கள் சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம்.
விரும்பியவர்கள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இறக்கும் முன் கொத்தமல்லி உடன் புதினா சேர்த்தால் மணம் அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்