hi friends manasu romba kastama irukku

Hi friends enakku ennakum enga mamiyarukku orey problem. Nan last 2years ah oru work panniruthen. Ippo girl baby 6months aguthu. Ippo enna problemna avangalukku veetla work parkkala parkkala nu husband solli problem pandranga. Operation so ennala romba work parkkala mudiala Papa things ellam Nan parthukkuren. Ennala parkkala mudiura work Nan parkkuren. Adhanala veetla orey problema irukku. Ethavathu Nan persona vayadi vayadi nu solranga. Manasukku rba kastama irukku. 2day Ella work Nan thaan Papava vachukka matranga. Orey mayakkama irukku. Irukkavey pidikkala.

6 மாசம் முடிஞ்சும் உங்களுக்கு மயக்கம் வருவதாகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சொல்லுகிறீர்கள் ,நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை கூட்டிக்கொண்டு போனால் உடல்நிலை விரைவில் சரியாகும்.வெளியே வேலை செய்த என்கிறீர்களே அதைவிட வீட்டு வேலைகள் சுலபமாகவும் இன்ரஸ்ட் ஆகவுமே இருக்கும்.ஆர்வத்தோடு வீட்டிலும் நிறைய வேலைகள் செய்யுங்கள்.

//Papava vachukka matranga// மாமியார் உங்களுக்கோ குழந்தைக்கோ எதுவும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது .அவருக்கும் உடல் அசதிகள் இருக்கும் ..ஆர்வமாக நீங்களே குழந்தையையும் பார்த்து வீட்டு வேலைகளும் பார்ர்த்து முடிந்தளவு வயசான மாமியாருக்கும் அவர் சொந்த வேலைகளுக்கு உதவி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால் உங்கள் உடல் நிலைக்கும் நல்லது

அதைவிட வீட்டில் நீங்கள் தான் பாஸ் ஆகிவிடுவீர்கள்.மாமியாரும் உங்கள் உதவி தேடி அங்கலாய்க்க மாட்டார்.

வீட்டு வேலைகள் உடலையும் மனதையும் பாதுகாக்கும் மிகச்சிறந்த எக்ஸ்சர்சைஸ் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

எவ்வளவு செய்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களுகு நல்லது.வீட்டில் ஒரே வேலைகள் சின்ன சின்ன வேலைகளைத்தான் திருப்பி திருப்பி செய்ய போகிறோம் முதலே திட்டமிட்டு செய்தால் நிறைய ஓய்வும் கிடைக்கும்.

வேலைகள் முடித்த ஓய்வும் தூக்கமும் உங்களுக்கு மிகவும் திருப்தியாக இருப்பதை உணர்வீர்கள் .

//ennakum enga mamiyarukku orey problem.// :-) என்ன ஆர்டர்ல எழுதிருக்கீங்க என்கிறதை கவனிச்சேன். நீங்கதான் முதல் பிரச்சினைன்னு உங்களுக்கே தோணுதோ!!

//Nan last 2years ah oru work panniruthen.// இப்போ விட்டுட்டீங்களா?
//avangalukku veetla work parkkala parkkala nu husband solli problem pandranga.// நீங்க வீட்டுல வேலை பார்க்கும் போதே பார்க்கலை என்கிறாங்களா?

//Operation// என்ன ஆப்பரேஷன் பண்ணீங்க??? சிசேரியனை மட்டும் சொல்றீங்கன்னா.... 6 மாசம் ஆனதுக்கப்புறம்... கணக்குலயே எடுக்க முடியாது. //so ennala romba work parkkala mudiala// ஏன்? புரியலை இது! உங்களுக்கு சிசேரியன் சமயம் பெருசா ஏதாச்சும் பிரச்சினை ஆச்சா! இல்லைன்னா... ஒரு ரெண்டு மாசத்துக்கு மேல முடியாமல் இருக்கக் கூடாதே! பிரச்சினையான விஷயமா இருந்தா நிச்சயம் உங்க அத்தை உங்களை வேலை செய்யச் சொல்லவே மாட்டாங்க.

ஒரு விஷயம் இருக்கு. பெரும்பாலான சர்ஜரிகளுக்கு, அவற்றின் பிறகு நாம் எத்தனை விரைவில் எழுந்து நடக்க, எம் காரியங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறோமோ அத்தனை விரைவில் உடம்பு பழைய நிலைக்குத் திரும்பும். தானா சரியாகட்டும்; 100 % சரியான பின்னால நாமும் பழையபடி எல்லா வேலையும் பார்க்க ஆரம்பிப்போம்னு காத்திருந்தா கொஞ்சம் கஷ்டம் தான். எம் சகோதரிகள் பலர், அம்மாவோ மாமியோ பக்கத்துல இல்லாம சிசேரியன் முடிச்சு வீட்டு வேலை, குழந்தை எல்லாம் பார்த்து பார்த்திருக்கிறேன். உடல் என்பதற்கு மேலே... இது... மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

//Ennala parkkala mudiura work Nan parkkuren.// இது நல்லது. மெதுவே கொஞ்சம் கொஞ்சமா கூட்டி முன்பு போல எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பியுங்க.

//Ethavathu Nan persona vayadi vayadi nu solranga.// பொறுமையா இருங்க. மெதுவா சரியாகிரும். பேசிப் பெருசாக்கிட்டா பிறகு சமாதானமாகுறது சிரமமா இருக்கும்.

//2day Ella work Nan thaan// நல்லதுங்க. //Papava vachukka matranga.// முடிந்த வரை பாப்பா தூங்கும் பொழுது வேலைகளை முடிக்கப் பாருங்க. மீதி நேரம் ஸ்ட்ரோலர்ல பக்கத்துல வைச்சுட்டு பேசிப் பேசி கொஞ்சம் வேலை பார்க்கலாம். அத்தையை எதிர்பார்க்காதீங்க. உங்க குழந்தையை நீங்கதான் பார்த்துக்கணும். எப்படியும் அவங்க உங்க கூட இல்லாம வேற வீட்ல இருந்திருந்தால் நீங்க தனிய சமாளிச்சிருப்பீங்க இல்ல! அப்படி நினைச்சுட்ட்டு வேலைகளைப் பாருங்க.

//Irukkavey pidikkala./// என்ன இது! நீங்க உங்க வீட்ல உங்க குடும்பத்திற்கான வேலைகளைத் தான் பார்க்கப் போறீங்க. முடிஞ்சதைப் பாருங்க. மெதுவா மீதியும் சரியாகிரும். இதுக்குப் போய் இப்பிடி சலிச்சுக்கறதா! சந்தோஷமா செய்யும் போது சிரமமான வேலையும் சிரமமா தெரியாது. சலிச்சுச் சலிச்சு இருந்தா சின்னதும் முடியாத மாதிரி தான் இருக்கும். எல்லாம் உங்க கைல தான் இருக்கு.

‍- இமா க்றிஸ்

Hi, 6 mths agiyum innum ungaluku mayakkama varudhuna neenga first healthyana food a eduthukonga.. Unga health a neenga steady pannikita matum than matha workla concentrate Lanna mudium.. Take care..

Effort without direction is activity. Effort with direction is productivity..

மேலும் சில பதிவுகள்