height kammi normal delivery akuma enaku

hai friends enaku ipa 8th month pregananta irukan ...nan height konjam kammi so normal deliveryla ethuvum problem irukuma ...first baby so payama iruku goverment hospitalathan parthudu irukan.. enaku hb level ipa 9.4 than iruku ...nan love marraige so helpku aruthal solla amma appa yarum ila ..avanga yarum pesurathum ila so nenga enaku best advise kodunga pls baby vara pora santhosam irunthalum oru pakkam deliverya nenacha payama iruku ...last 8th, 9th month enna unavu eduthukanum sollunga ...

த்ரெட் தலைப்பு ரொம்ப நீ....ளமா இருக்கு. ;;((

சின்னதா ஒரு தலைப்பு போடுங்க. 'குட்டை & பிரசவம்' என்று போடுங்க. கட்டாயம் இந்த உதவியைச் செய்யுங்க.

வீட்டிற்கு கெஸ்ட் வராங்க. இருந்தாலும் நான் இடையில் நேரம் பிடித்து வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லுவேன்.

‍- இமா க்றிஸ்

//nan height konjam kammi so normal deliveryla ethuvum problem irukuma// :-) கேள்வி முழுமையாக இல்லை. :-)

1. யார் சொன்னாங்க?
2. கம்மின்னு சொன்னா பத்தாது. எக்ஸாக்ட்டா என்ன ஹைட்?

8 மாசம்! இனி சீக்கிரம் இதைப் பற்றி விபரம் தெரிஞ்சு வைக்கிறது நல்லது. உங்க டாக்டர் சொன்ன விபரங்களை இங்க பகிர்ந்துக்கிறது அவசியம். பதில் சொல்ல எனக்கு உதவும்.

‍- இமா க்றிஸ்

சோனியா முதல் குழந்தைக்கு எல்லாருக்குமே பயம் இருக்கும்.,கவலை படாதீங்க,குமுதம் சிநேகிதி இந்த வார புத்தகம் வாங்கி படிங்க அதில் பிரசவத்தை பற்றிய அனைத்தும் உள்ளது கர்ப்பீணிகளுக்கு மிகவும் உதவியாக உள்ள புத்தகம்.

en height correcta 150 weight ipa 60 iruken...

kandipa vanki padikuren

doctor ethuvum negativea sollala enakuthan payama iruku inga oru sila par apputi soltranga kuttaya vera iruka pathukonu athanalathan kettan imma

எல்லாரும் சொல்றத எல்லாம் நினைச்சு நீங்க கவலை படாதீங்க,எப்பவும் மகிழ்ச்சியா இருங்க பாசிட்டீவ்வா திங்க் பண்ணுங்க,சாப்பாட்ல காரத்த குறைச்சுக்கோங்க

Conceive aguradhuku munadi than weighta iruka kudadhu.doubt irundha doctor ta kelunga

//height correcta 150// இதுக்கா யோசிக்கிறீங்க!! :-) நல்ல வேளை உங்க கேள்வியை நம்பி என் அனுபவங்களைச் சொல்லாம பதில் கேள்வி கேட்டேன். ;) 150 எல்லாம் குட்டையா என்ன! :-)

//doctor ethuvum negativea sollala/// அவங்க சொல்லல என்றால் உங்க ஹைட் அண்ட் ஸ்ட்ரக்க்ஷர் & குழந்தை அளவு எல்லாம் அவங்களுக்கு திருப்தியா இருக்கு என்று அர்த்தம். நீங்க பயப்படவே வேணாம்.

//enakuthan payama iruku inga oru sila par apputi soltranga// அப்படி ஒரு விஷயம் இருக்கிறது உண்மை தான். உயரத்தால் மட்டும் எதுவும் பிரச்சினை ஆகுறது இல்லை. கூட வேற காரணிகளும் இருக்கு. ஆனா நீங்கதான் குட்டையே இல்லையே!! டாக்டரும் சொல்லல.. பிறகு எதுக்காக யோசிக்கிறீங்க?

ஆட்கள் - உங்களை எச்சரிக்க நினைச்சு... நல்ல எண்ணத்துல ஏதாச்சும் சொல்லுவாங்க தான். அதை எல்லாம் மனசுல போட்டுக் குழம்பப் படாது. என்ன பயம் என்றாலும் டாக்டர்ட்ட கேட்டுத் தெளிஞ்சுரணும். யோசிக்கப் படாது. டாக்டர் எப்ப எது உங்களுக்கு நல்லதோ அதன்படி தேவையான ஹெல்ப் பண்ணுவாங்க. நீங்க ரிலாக்ஸ்டா இருங்க.

ஆட்கள் சொல்றது... பாலத்தின் மேல் கழுதையைத் தூக்கிட்டுப் போன அப்பா பையன் கதை போல. :-) தூக்கிட்டுப் போக நினைச்சா, 'நடத்திட்டுப் போகலாமே!' என்பாங்க; நடத்திப் போனா, 'தூக்கிட்டுப் போகலாமே!' என்பாங்க. நாம் தான் யோசிச்சுப் பார்த்து சரியானதை முடிவு செய்ய வேணும்.

என் அனுபவம் உங்களுடையதற்கு எதிர்மாறு. :-)

நான் ஹீல்ஸ் போட்டாலும் உங்க ஹைட்டுக்கு கிட்டவும் வர முடியாத அளவு குள்ளம். ஃப்ரேமும் ரொம்ப சின்னன். ப்ரெக்னண்ட் என்று தெரிஞ்ச முதல் விசிட்லயே, '100% சிசேரியன்தான்; வேற பேச்சுக்கு இடமில்லை; ஊர்ல கைனகாலஜிஸ்ட், சர்ஜன் யாரும் இல்லை. 8ம் மாசம் ஆரம்பிச்சதும் கிளம்பி சர்ஜன் இருக்கிற ஊரா பார்த்து போய் தங்கிருங்க,' என்று என் டாக்டர் விடாம வலியுறுத்திட்டே இருந்தார். ஊராரும் விடாம. 'இதென்ன புதினக் கதை, அதெல்லாம் தேவையில்லை. அந்த டாக்டர் பேச்சை விட்டுருங்க. ஊரில் இருக்கிற மருத்துவிச்சி எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆன ஆள். அவங்களை வைச்சு வீட்லயே பாருங்க,' என்று அத்தையை ப்ரெய்ன் வாஷ் பண்ணிட்டே இருந்தாங்க. பொறுக்க முடியாம, அத்தையை அழைச்சுட்டு 2 மிட்வைஃப்ஸைப் போய்ப் பார்த்தேன். அவங்களும் டாக்டர் சொன்னதை ஊர்ஜிதம் பண்ணி, 'பொறுப்பு எடுக்க முடியாது,' என்று சொல்லிட்டாங்க. வேற ஊர்ல போய் பார்க்கச் சொன்னாங்க. பிறகும் சனம் எங்களை ப்ரெய்ன் வாஷ் பண்ற வேலையை விடவில்லை. :-) ஊர் பேச்சை நம்பி நான் ஊர்லயே இருந்திருந்தா, இன்று இறந்து போய் 30 வருஷமும் 1 மாசமும். ;)))

நானும் உங்களை எச்சரிக்கத் தான் நினைத்தேன். நல்ல வேளை, உங்க ஹைட் என்ன என்று கேட்கத் தோணிச்சு. :-)

//kuttaya vera iruka pathukonu// நீங்க ஒரு தடவை உங்க டாக்டர்ட்ட கேட்டுப் பாருங்க. அதன் பிறகு பயம் இல்லாம நிம்மதியா இருப்பீங்க.

‍- இமா க்றிஸ்

த்ரெட் தலைப்பு ரொம்..ப நீ....ளமா இருக்கு. ;;(( சின்னதா ஒரு தலைப்பு போடுறது அவசியம் சோனியா. எடிட் பண்ணும் ஆப்ஷன் உங்களுக்கு இருக்கும். மாற்றி விடுங்க.
~~~
தமிழ்ல தட்ட முடியுமா என்று பாருங்க சோனியா. தமிங்கிலம் படிக்கிறது... எல்லோருக்கும் சுலபமில்லை. ஜோதி தப்பா படிச்சு பதில் சொல்லியிருக்காங்க, பாருங்க. //Conceive aguradhuku munadi than weighta iruka kudadhu.// :-)

ஜோதி... சோனியா வெய்ட்டைப் பற்றி பேசல, ஹைட் இல்லாம இருக்கிறதைப் பற்றி பேசுறாங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்