எப்பொழுது குங்குமப்பூ சாப்பிடுவது?

நான் 13 வாரங்களாக‌ கர்ப்பமாக‌ உள்ளேன் எத்தனை மாதங்களுக்குப் பிறகு குங்குமப்பூ சாப்பிடுவது என்று எனக்கு கூறுங்கள்.

தோழிகள் எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு ..நானும் 13வார கர்ப்பம் .தெரிந்தவர்க்கள் பதில் கூறுங்கள் .

16 வாரத்தில் இருந்து அதாவது 4 மாதம் முடிந்து அல்லது 4 மாதத்தில் இருந்தே சாப்பிட ஆரம்பிக்ககலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி தோழி ....இன்னும் வாந்தி நிக்கவில்ல நான்கு மாதம் முடிந்ததும்ம்ம் குடிக்கலாம்என்று இருக்கேன் நான்.ப்

வாந்தி நின்ற பிறகு குடியுங்கள்.. வாந்தி 4 மாதம் முடிந்ததும் நின்று விடும்.. 5 ஆரம்பிக்கும் போது அவ்வளவாக இருக்காது.. குங்குமப்பூ குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என நிருபணம் இல்லை.. ஆனால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது... :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நான் 8 மாதத்தில் குங்குமப்பூ சாப்பிட்டேன்.

குங்கும பூ சாபிட்டால் குழந்தை சிகபாக பிரக்கும் என்பது இல்லை. கர்பமாக இருக்கும் பென்ங்கல் குங்கும பூ சாபிடுவது அவர்கலின் கர்ப பைக்கு நல்லது. சாதரனமாகவெ பென்ங்கல் குங்கும பூ சாபிடலாம். If u have doubt search it in the goodle.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

சங்கீதனா கூகுள் பண்ணச் சொன்னதால் ஒரு க்யூரியாசிட்டில தட்டினேன்.

இழையத்தில் குங்குமப்பூவின் நலன்கள் பற்றிச் சொல்லியிருப்பதோடு சில பக்கவிளைவுகளைப் பற்றியும் பிரஸ்தாபித்திருந்தார்கள். சிலருக்கு அலர்ஜி ஆகி விடலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை ஒரு அளவுக்கு மேல எடுத்தால் வேறு காம்ப்ளிகேஷன்ஸ் வரலாம்; கருச்சிதைவு கூட ஆகலாம் என்றும் படித்தேன்.

இணையத்தில் கிடைக்கும் பல தகவல்களுக்கு உத்தரவாதம் கிடையாதுதான். எதற்கும் எச்சரிகையாக இருங்கள் சகோதரிகளே. எடுப்பதாக இருந்தால், ஒன்றிரண்டு இழைகளுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Appadiyaa. Nandri. Naan ennudayacrelatives Ku solren.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

இங்கே விபரம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

எத்தனை மாதங்களுக்குப் பிறகு குங்குமப்பூ சாப்பிடுவது -www.arusuvai.com/tamil/node/33017
கர்ப்பகால சந்தேகங்கள் - www.arusuvai.com/tamil/node/9953
குங்குமப்பூ பற்றி சொல்லுங்க?? - www.arusuvai.com/tamil/node/16154
முகம் வெள்ளையாக மாற! - www.arusuvai.com/tamil/node/17789
saffron - www.arusuvai.com/tamil/node/17404
www.arusuvai.com/tamil/node/18399
குங்குமப பூ பற்றி - www.arusuvai.com/tamil/node/19614
www.arusuvai.com/tamil/node/20327
குங்குமப்பூ - www.arusuvai.com/tamil/node/25259
குங்குமப்பூ பற்றி சொல்லுங்க?? - www.arusuvai.com/tamil/node/16014

மேலே உள்ள அனைத்து இழைகளிலும் குங்குமப்பூ பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. உங்களுக்கு உதவும்.
~~~
//தனி தனி கேள்விகள் சிறந்ததே.// ஆமாம், ஏற்கனவே அந்தத் தலைப்புடன் இழைகள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு, இல்லாவிட்டால் புதிய இழை ஆரம்பியுங்கள்.

நீங்கள் புதியவர். குறை எண்ணாமல் ஒரு தடவை மன்ற விதிமுறைகள், அறுசுவை நிபந்தனைகள் என்று அட்மின் போட்டிருக்கும் இழைகள் அனைத்தையும் படித்துவிடுங்கள் சகோதரி. முக்கியமாக இந்த இழையில் ( http://www.arusuvai.com/tamil/node/14918 ) கீழிருந்து மேலே மூன்றாவது பந்தியைப் படியுங்கள்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்