Basal body temperature (BBT} | அறுசுவை வலைப்பதிவு
blog image

Basal body temperature (BBT}

blog image

1. பேசல் பாடி டெம்ரேச்சர் என்றால் என்ன?

நமது உடல் அவயவங்கள் இயங்குவதற்கு முன்னரான மிக குறைந்த அளவிலான உடல் வெப்பம்.
.அதாவது நடத்தல், சாப்பிடுதல் ,குளித்தல் போன்ற செயற்பாடுகளினால் உடல் வெப்பம் ஏற்ற இறக்கம் அடையும் முன்னரே தூக்கத்தில் இருந்து எழுந்து முதல் வேலையாக வெப்பத்தை அளவெடுப்போமானால்
அதுதான் நம்முடைய அன்றைய நாளின் மிகக்குறந்த வெப்பமாக இருக்கும் இதுவே { பேசல் பாடி டெம்ரேச்சர் } உடலின் அதிகுறைந்த வெப்பநிலை .

2.இந்த உடல் வெப்பத்தை கணிக்க தேவையானவை எவை?
டிஜிட்டல் பேசல் பாடி டெம்ரேச்சர் .{digital basal thermometer} மற்றும் அட்டவணை {ovulation chart}

3. இதை எதற்கு உபயோகிப்பார்கள்.?
பெண்ணின் உடலில் கருமுட்டை வெளியேறும் நாளை உடல் வெப்ப அளவைக்கொண்டு கணித்து கருத்தரிக்கவும் ,அதே முறையில் கருத்தரித்தலை தடை செய்யவும் இந்த முறையை உபயோகிப்பார்கள்.

4.பேசல் பாடி டெம்ரேச்சர் முறை ஆனது எவ்வளவுக்கு பலன் அளிக்கும்?
இது மிகவும் அச்சொட்டான கணிப்பு கிடையாது.ஹார்மோன்கள் {estrogen and progesterone} குழம்பி போய் இருக்கும் பட்சத்திலோ மன அழுத்தம்,தூக்கமின்மை ,மது அருந்துதல் போன்ற விடயங்களுக்கேற்பவோ ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது.மிகத்துல்லியமான
கணிப்பு என்றோ கருமுட்டை வெளியேறும் நாளை கணிக்க இது மிகச்சிறந்த வழி என்றோ எடுத்துக்கொள்ள முடியாது.

5.வெப்பத்தை கணக்கெடுத்துக்கொள்ள உகந்த நேரம் எது?
அதிகாலையில் அதவாது நீங்கள் வழக்கமாக எழுந்து கொள்ளும் நேரத்திற்கு முன்னர் அலாரம் வைத்துக்கொள்ளவும்.வழக்கமாக எழுந்து கொள்ளும் நேரமாக இருந்தால் ஒரு பரபரப்பு ஏற்படும் .இது வெப்ப ஏற்ற இறக்கத்தை உண்டு பண்ணும்.
அதனால் 4 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆழ்ந்த தூக்கத்தின் பின் உகந்த ஒரு நேரத்தை தெரிவு செய்து வழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. தினமும் ஒரே நேரத்தில் கணிக்க வேண்டும்.குறிப்பாக அதிகாலை 4 இல் இருந்து 5 எல்லோருக்கும் ஏற்புடைய சலனங்கள் இல்லாத உடலும் உள்ளமும் ஓய்விலிருந்து கலையாத நேரமாகையால் இந்த நேரம் உங்களுக்கு பொருத்தமாக அமைந்தால் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்

Blog image

6.வெப்பம் கணக்கெடுக்கும் வேளையிலும் கணக்கெடுக்கும் முன்னரும் தவிர்க்க வேண்டிய செயற்பாடுகள் எவை?
பேசக்கூடாது { வெப்ப மாற்றம் ஏற்படும்}
எழுந்து உட்கார கூடாது.இந்த டெம்ரேச்சரை கைக்கெட்டும் தூரத்தில் வைத்து விட்டு தூங்கவும்.
எழுந்து யூரின் போதல் மற்றும் உடலை அசைக்கும் எந்த செயற்பாடுகளும் கூடாது.

7.எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
2 நிமிடங்கள் வரையில் எடுத்துக்கொள்ளலாம்.தூக்கம் கலையாமல் படுத்திருந்தே பார்ப்பதால் மறுபடி தூங்கி தெர்மோமீட்டர் நழுவி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

8.உடனே குறித்து வைத்துக்கொள்ள வேண்டுமா?
இல்லை.இந்த தெர்மோ மீட்டர் ஐ பொறுத்து அனேகமானவை தன்னுள் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். மறுபடியும் 5 செக்கன் அழுத்தி பிடிக்கும் போது கடைசியாக கணித்த வெப்ப அளவை காண்பிக்கும்.
அழிந்து விட க்கூடும் என்று பயந்தால் உடனே எழுதி வைத்து விட்டு மறுபடி தூங்குங்கள்.அழிந்துவிடவும் வாய்ப்பு உள்ளது.

9.எப்படி அட்டவணை வரைவது?
தினமும் நீங்கள் குறித்து வைத்துக்க்கொண்ட அளவை சரியான நாளுக்கும் சரியான வெப்ப அளவுக்கும் நேரே ஒரு புள்ளி இட வேண்டும் .தொடந்து புள்ளிகள் இட்டு இணைக்க வேண்டும்.உங்களுக்கு வயிற்று வலியோ
குழப்பங்களோ,வெள்ளை படுதலோ,வந்து போனால் அந்த நாளுக்கு நேரே குறித்துக்கொள்ள வேண்டும்.
தொடரும் மாதங்களிலும் அதே நாளில் வயிற்று பிசைவுகள் இருப்பின் அதையும் முட்டை வெளியிடும் அறிகுறியாக எடுத்துக்கொள்ள உதவும்

10.உடலின் எந்த பாகத்தில் வைத்து கணிக்க வேண்டும்?
நாக்கிற்கு கீழ் அல்லது பெண் உறுப்பினுள்.எதை தெரிவு செய்கிறீர்களோ அதையே அந்த மாதம் முழுவதும் தொடர வேண்டும். 2 பாகங்களுக்கும் இடையான வித்தியாசம் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும் என்பதால்
அதிகம் குழம்ப தேவையில்லை.

Blog image

11.முட்டை வெளியானதை எவ்வாறு அறிந்து கொள்வது?
முட்டை வெளியான பின் உடல் வெப்பம் கொஞ்சம் குறைந்து மீண்டும் உயரும்.இது வரைபடத்தில் பார்க்கும்போது தெரியும்.

12. அட்டவணை பிரகாரம் எப்போது கருத்தரிக்க முயற்சி எடுக்க வேண்டும்?
வெப்பம் அதிகரித்ததில் இருந்து 24 மணி நேரம் வரையில் கருமுட்டை ஸ்பேம் க்காக உயிருடன் பலோப்பியன் குழாயில் காத்திருக்கும் .இந்த நேரமே கருத்தரிக்க உகந்தது.

13.பேசல் டெர்மொமீட்டர் க்கு பதில் சாதாரண காய்ச்சல் பார்க்கும் தெர்மோமீட்டரை உபயோகிக்கலாமா?
இல்லை.சாதரண தெர்மோமீட்டரில் 0.1,.0.2 பரனைட் என்ற குறுகிய அளவை கிடையாது. இது காய்ச்சல் இல்லாத நேரத்தில்தான் நமக்கு உபயோகிக்கிறோம் .ஆகவே சாதாரண நாட்களில் உடல் வெப்ப அளவில் மிக குறைந்த அளவு
ஏற்ற இறக்கங்களே இருக்கும் .அதனால் நிச்சயமாக காய்ச்சல் பார்க்கும் சாதாரண தெர்மோமீட்டர் எந்த பலனும் அளிக்காது.

14.இந்த முறையை நாமாக முயற்சி செய்யலாமா டாக்டரின் உதவி தேவையா?
சில டாக்டர்கள் ஆரம்பத்தில் பரிந்துரைத்து வழியும் காட்டுவார்கள். ஆனால் டாக்டரின் எந்த வழிகாட்டலும் இல்லாமல் நீங்களே முயற்சிக்கலாம்.பாமசி யில் டிஜிட்டல் பேசல் டெர்மோமீட்டர் வாங்கி {சில பாமசிகளில் இருக்காது ஆடர் குடுத்து
எடுத்து தர சொல்லி முற்பணம் செலுத்தினால் எடுத்து தருவார்கள்}அட்டவணை நாமே தயாரித்து கொள்ளலாம் .நெட் ல் உள்ளதை பிரிண்ட் போட்டும் கொள்ளலாம்.

15.கருத்தரிப்பதில் எவ்வாறான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த முறை கை கொடுக்கும்?
கருத்தரிப்பதில் ஆரம்ப கட்டத்தில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் கருத்தரிக்க தாமதம் ஏற்படும் போது இவ்வாறு கணித்து முயற்சிக்கலாம்.குறுகிய காலத்தில் டாக்டரிடம் போய் பரிசோதனைகள் செய்வதை தவிர்க்க
நாமே இந்த முறையை கையாண்டு பார்க்கலாம்.சரியான நாட்கள் தெரியாமல் சுழற்சி நாட்கள் முரணாக இருப்பவர்களும் எத்தனையாம் நாளில் கருமுட்டை வெளியாகிறது என் அறிந்து கொண்டு கருவுறுதலை துரிதப்படுத்தலாம்.

16.கருத்தரித்திருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?
கருமுட்டை வெளியேறுவதற்கு முன் ஈஸ்ட்டோஜன் ம் கருமுட்டை வெளியான பின் புரொஜெஸ்ரோன் ம் ஆதிக்கம் செலுத்தும் ஹார்மோன்கள் ஆகும் .அதன் அடிப்படையில்,கருத்தரித்தல் நிகழ்ந்திருந்தால் ப்ரொஜெஸ்ரோன் அளவு
வெப்பத்தை வீழ்ச்சி அடைய விடாது.ஆகவே அட்டவணையில்,உங்கள் வழக்கமான மாதவிடாய் நாள் எட்டியும் வெப்ப அளவு வீழ்ச்சி அடையாமல் இருந்தால் நீங்கள் கருத்தரித்து விட்டீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

5
(7 votes)
Your rating: None

BBT

நிறைய விஷயங்கள் அறுசுவையால தான் எனக்குத் தெரிய வந்து இருக்கு சுரேஜினி. முழுக்க வாசிச்சாச்சுது. இனி யாராவது டௌட் கேட்டால் இந்த லிங்கை பதிலாகப் போட்டுரலாம். :-)

BBT சந்தேகம்

இந்த‌ டெஷ்ட் எடுக்க‌ தகுந்த‌ நேரம் என்ன‌ என்று சொல்ல‌ முடியுமா.நான் 7 மணிக்கு தான் எழுவேன் அதான் கேட்கிரேன்.

சுரேக்கா

சூப்பர்... சூப்பர்... சூப்பர்.. இதைவிட தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது.. இது பற்றி பல இழைகளில் பல சந்தேகங்கள்..இமாம்மா சொன்ன மாதிரி இனி இந்த லிங்க்கை காட்டிடலாம்.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்ககள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

imms

முழுக்க வாசிச்சதுக்கு நன்றி.அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.அச்சாப்புள்ள.

ஸ்வாதி

பொது தளத்தில் நேரம் குறிப்பிட்டு சொல்லுவது நல்லதல்ல என்றே சொல்லாமல் விட்டேன். காரணம் அப்படி உண்மையில் அத்ற்கென்று ஒரு நேரம் இருப்பது போலவும் அதையே நடைமுறை படுத்த வேண்டும் என்பது போலவும் உருவக படுத்தி விடுவார்கள் என்பதற்காக.

டாக்டர்கள் சில கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.

ஆனாலும் மேலே (கேள்வி இலக்கம் 5} மாற்றம் செய்திருக்கிறேன் பாருங்கள்.உங்களுக்கு பொருந்தினால் அந்த நேரத்திலேயே எடுத்துக்கொள்ளுங்கள்.

அபி

நன்றி அபி.பொது தளம் என்றதால இன்போமேஷன்ஸ் தவறா புரிஞ்சிட கூடாது என்றதுக்கு பயந்து எழுத கொஞ்சம் ஜோசிப்பேன்,ஆனால் நீங்கள் எல்லாம் ஓடி வந்து பாராட்ட நல்ல துணிவு வந்துடுது.

பொது தளம்

;)) நாங்கள் பலதையும் எங்கட இஷ்டத்துக்குத் தான் எடுப்போம். 'சுகருக்கு ப்ரௌண் சுகர் நல்லம்,' எண்டால், அதையே நல்..லாப் போட்டுக் கரைச்சு முன்னால இருந்த அதே லெவல் மெய்ண்டெய்ன் பண்ணுவோம். :))))))

யோசிக்காம போடுறதைப் போடுங்க சுரேஜினி. கேட்கிற ஆட்களுக்கு பிறகு பதில் சொன்னால் போச்சுது.