mineral water

hi friends one doubt babyku mineral water heat banni kodukkalama

நீருக்கு மேலதிகமாக எதுவும் கலக்கப்பட்டிருக்கவில்லை என்றால் கொடுக்கலாம். லேபிளைப் படித்துப் பாருங்கள்.

//heat banni kodukkalama// ஹீட் பண்ணினால் போதாது. மிகவும் நம்பகமான தாபனங்களின் தயாரிப்பாக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது பாதுகாப்பானது என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

பெரிய பெரிய restaurants-ல்லெல்லாம் ஏன் நல்ல குடிநீர் வழங்குவதில்லை?? மாறாக மினரல் வாட்டர் sir/madam என்று கேட்டு ஏதோ ஒரு company-க்கு வியாபாரம் செய்கிறார்கள். நம்ம ஊரில் ஒரு குவளை நல்ல தண்ணீர் கொடுக்க அவ்வளவு பெரிய restaurant- காரர்களால் கூட முடியாதா என்ன??? இல்லை என் கருத்து தவறா???

No pains,No gains

ANANTHAGOWRI.G

formula milk kudukiren mam athula mineral water mix panni kodukalama

சம்பந்தமே இல்லாத ஆள்ட்ட கேள்வி வைக்கிறீங்க. :-)

//பெரிய பெரிய restaurants-ல்லெல்லாம் ஏன் நல்ல குடிநீர் வழங்குவதில்லை?// வழங்குகிறார்களே! :D

//மாறாக மினரல் வாட்டர் sir/madam என்று கேட்டு ஏதோ ஒரு company-க்கு வியாபாரம் செய்கிறார்கள்.// இங்கு எங்கும் கண்டதில்லை. கண்ணாடிக் குவளையில் நீர் வைக்கிறார்கள். மேஜையில் ஓரு பெரிய கண்ணாடிச் சீசா அல்லது மூடியுடன் கூடிய கண்ணாடிப் போத்தலில் நீர் வைக்கிறார்கள். [அங்கு நாமாக நீர் கேட்கும் பொழுது, 'வாட்டர்' என்று கேட்க வாயில் வராமல் பட்ட சிரமத்தை இப்போ நினைத்தாலூம் சிரிப்பு வருகிறது.] ;))

//நம்ம ஊரில்// ;))))) ஒருமையில் சொல்லியிருக்க வேண்டும் நீங்கள். உங்க ஊர், நாடு வேற. விஷயம் தெரியாம வாயைத் திறக்கிறது தப்பு. ;)) இருந்தாலும் எனக்குத் தோன்றினதைச் சொல்கிட்டுக் கிளம்புறேன்.

//ஒரு குவளை நல்ல தண்ணீர் கொடுக்க அவ்வளவு பெரிய restaurant- காரர்களால் கூட முடியாதா என்ன??// :-) அவங்க கொடுக்கிறதை, கேள்வி இல்லாம நீங்க நல்ல நீர் என்று நம்பி குடிச்சா அவங்க கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். ;))))

//ஒரு குவளை நல்ல தண்ணீர்// இங்க நீங்க சொன்னதிலேயே பதிலும் இருக்கோ! :-) குழளை!!!

ஒரு சின்ன அனுபவம். நாகை போகும் வழியில் ஒரு ரொஸ்டாரண்டில் அறுசுவை உறுப்பினர்கள் சிலர் மதியபோசனத்துக்காக நுழைந்தோம். நாங்க எங்க பாட்டில சாப்பிட்டிட்டு இருந்தோம். பக்கத்து மேஜை, அதுக்கு அடுத்தது என்று ஒவ்வொன்றாக சுத்தம் செய்து போனார் கடைச் சிப்பந்தி ஒருவர். நீர் வைக்கும் பெரிய எவர்சில்வர் சாடியில் நீர் கொண்டுவந்து மேசையில் தெளித்து துணியால் வழித்து மீண்டும் அதே பாத்திரத்தில் விட்டு, துணியைப் பிழிந்து... இப்படியே தொடர்ந்தார். நானும் என் கணவரும் பார்த்துவிட்டு அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு அங்கு நீர் அருந்தும் எண்ணம் இல்லை. மறைவாகத் தவிர்த்து விடுவதாக எண்ணம். தோழி பாவம், நல்ல இடம் என்று அழைத்துப் போனவருக்கு, எங்கள் பார்வை பட இப்படி ஆனது பொறுக்க இயலவில்லை. 'ஏனிப்படி??' என்று கேட்க, கடை ஆட்கள், "அது வேறு சாடி, இது வேறு சாடி," என்று விளக்கம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று எங்களுக்கும் தோன்றியது. ஆனால் தவறுதலாக நீர் மாறிப் போகச் சாத்தியம் இல்லையா? எவர்சில்வர் கிண்ணங்களுள் இருக்கும் நீரின் தன்மை வெளியே தெரியாது. கண்ணாடிக் கிண்ணங்கள் சிறிதாவது காட்டும். உணவகங்கள் பரிமாறினாலும், எம் பாதுகாப்பு எம் கையில் தான் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நீங்க எதுல மிக்ஸ் பண்ணாலும், மிக்ஸ் பண்ண எடுத்த மினரல் வாட்டரின் தன்மை பற்றி உங்களுக்கு பரிபூரண நம்பிக்கை இருந்தால் தவிர கொதிக்க வைத்து (100°யில்) ஆறவைப்பதே நல்லது.

‍- இமா க்றிஸ்

;)) இதைக் காண்பவர்கள் தத்தம் அபிப்பிராயத்தைச் சொல்லிச் செல்லுமாறு தாழ்மையோடு அழைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Name IPO 39 day conceive mambalam pappali annasi ithelam sapda kudathunu Dr sonanga BT na manga sapdalama

மாம்பழமும் சாப்பிட வேணாம்னாங்களா!

//manga sapdalama// இது கருவைக் கலைக்காதுதான். ஆனால் அமிலம். அளவோடு இருக்கட்டும்,

‍- இமா க்றிஸ்

OK friend thanks for ur reply . water purifier use panringala anga atha nambalama. new Zealand epdi eruku

//mineral water heat banni kodukkalama//
குழந்தைக்கு கொடுக்கும் போமுலா கொதித்து ஆறிய தண்ணியில் தான் கொடுக்க வேண்டும்.ஒரு கொதி நிலைக்கு மேல் எல்லா நீரும் ஒன்றுதான்.மினரல் வாட்டர் கொதிக்க வைக்கும் போது மினரல்ஸ் அழிந்து விடும்.சாதாரண வாட்டர் கொதிக்க வைக்கும் போது கிருமிகள் அழிவது போல்.

சோ நீங்க சுத்தம் செய்து வடிகட்டிய அதாவது மினரல்ஸ் கலக்காத சாதாரண தண்ணியை வாங்கி நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து மெல்லிய வோம் ஆக அதாவ்து குளிராமல் இருக்கும் நிலையில் பிளாஸ்க் ல் ஊத்தி வைத்துக்கொள்ளுங்கள்.கொஞ்சம் பெரிய சுடுநீர் போத்தலாக இருந்தால் காலையிலும் இரவிலும் வைக்க போதும்.

மேலும் சில பதிவுகள்