baby tight poo

hi frds en baby girl 4 1/2 month aguthu formula milk feed pandran apavum mukki mukki romba tight ah green color la pora but urinate frequantly apapo thanni paal rendum kodukren analum romba tightah toilet pora dry grape juice kuda try panen ena panalanu solunga frds

அன்புள்ள‌ ரேவதிக்கு உங்கள் பால் தருவதானால் உணவில் அரைக்கீரை
நிறையச் சேர்த்துக் கொள்ளவும். பருப்புசாதம் சாப்பிடும் வழக்கம் இருந்தால் பருப்பு வேகவைக்கும் போது அதில் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் இரண்டு மிளகு அளவு பெருங்காயம் பத்து பூண்டுப்பல் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் ஒரு கொத்து கறிவேப்பிலை(பச்சைமிளகாய் 1), ஒரு சிட்டிகை வெந்தயம், தக்காளி, சின்ன‌ வெங்காயம் 5/ 6 சேர்த்து வேகவைக்கவும். இது அடிப்படையான பருப்பு
வேகவைக்கும் முறை (எங்கள் வீட்டில்) இதைக் கொண்டு சாம்பார், கூட்டு,தண்ணீரை இறுத்து ரசம், கீரை சூப், காய்கறி சூப் என்று வைப்போம்.
பருப்பைக் கடைந்து சோற்றுடன் நெய்யும் உப்பும் சேர்த்து பருப்பு சோறாக‌
தொட்டுக் கொள்ள‌ உருளைக் கிழங்கு பொரியலுடன் (பாரதி தாசனார் சொன்னது போல‌ பூனைக் கண்போல‌ வறுத்த‌ உருளைக் கிழங்குடன்)
உண்ண‌ சுகமோ சுகம், (எங்களுக்கு நாக்கு, மூக்கு நீளம்)
பத்தியக் காரக்குழம்பு செய்வீர்களானால் தாளிக்கும் எண்ணெயுடன்
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி தாளியுங்கள்.
குழந்தையின் உடம்பு அதிகச் சூடானால் மலம் இறுகிப் போகும்.
வெற்றிலையில் விளக்கெண்ணெய்யைத் தடவி நல்ல‌ விளக்கில்
சூடு காட்டி மிக‌ மிக‌ லேசான‌ சூடுடன் குழந்தையின் வயிற்றின் மேல்
போடவும், ( வெற்றிலை வதங்கினால் போதும் நன்கு சூடு ஆறினபின்
போடவும்.) ஆசன‌ வாயில் ஒரு துளி விளக்கெண்ணெய் தடவ்வும்.
மேலும் விளக்கம் தேவையானால் குழந்தைகள் பகுதியில் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி கண்டிபாக முயற்சி செய்கிறேன்

மேலும் சில பதிவுகள்